குமார் சங்கக்கார மீது விசாரணைக்கு உத்தரவு


6/7/2011

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.

வடமேற்கு லண்டனில் உள்ள Marylebone Cricket Club அழைப்பின் பெயரில், 'வீட்டில் கிரிக்கெட்' எனும் தலைப்பில் குமார் சங்க கார உரை நிகழ்த்தினார். இதன் போது இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகவும், தவறாக பயன்படுத்தப்படும் நிதி என்பதால் நட்சத்திர வீரர்கள் பலர் பாதிக்கப்படுவதாகவும், வீரர்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் மற்றும் அவநம்பிக்கையை தூண்டிவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


சங்கக்கார, 'அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லாமல் கிரிக்கெட் நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

நேர்மை, வெளிப்படை தன்மை, பொறுப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய கிரிக்கெட் நிர்வாக சபை உருவாகப்பட வேண்டும். மேலும் கிரிக்கெட்டில் நாங்கள் சிறந்த நிர்வாகத்தை விரும்புகிறோம். அரசியல்வாதிகள் தொடர்பு இல்லாமல், ஒழுக்கமான ஒளிவு, மறைவு இல்லாத நிர்வாகம் தான் வேண்டும்." என கருத்து வெளியிட்டுள்ளார்.

இவர் கருத்து தெரிவித்த பின்னர் அங்கிருந்த அனைவராலும் பாராட்டு பெற்றுள்ளார். எனினும் சங்கக்காரவின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத் துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

வீரகேசரி இணையம்



1 comment:

Anonymous said...

Kumar Sangakara's speech delivered at MCC's Colin Cowdary Forum,was a totally unbiased,briliently research & well delivered speech.On our behalf he covered the Communal Riots & The killing of the Tamils.He spoke very high of our own Tamil Cricketer Mahadevan Sathasivam.
We Tamil Cricket Lovers all over the World,must voice our support to Kumar Sangakara for expressing his personnal view,so openly & In a very Important World wide Forum.

Sivasubramaniam Purushothamar