இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா முழுமனதுடன் ஒத்துழைக்க வேண்டும்

.
இலங்கையில் நிலவிய கொடிய யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுமார் பதினெட்டு மாதங்கள் நிறைவு பெற்றுள்ளன. யுத்தம் முடிவடைந்த கையோடு யுத்தத்தின் தோற்றுவாயான இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோஷங்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலித்தன.


எனினும் இன்று வரை அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாத நிலையில் அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவின் வகிபாகம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனையும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தியா இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை உரியமுறையில் பெற்றுக் கொள்ள தவறுமிடத்து எதிர்காலத்தில் அதிருப்தி நிலைகள் வலுப்பெறக் கூடுமென்றும் அத்தோடு இந்தியாவின் அரசியல் செயற்பாடுகளுக்கும் அது குந்தகமாக அமைய லாம் என்பதனையும் புத்திஜீவிகள் மேலும் வலி யுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியா இலங்கையின் அயல் நாடு மட்டு மல்ல கலாசார, பாரம்பரிய, வர்த்தக, அரசியல் பிணைப்புக்களைக் கொண்ட நேச நாடும் ஆகும்.

இலங்கையின் சில செயற்பாடுகள் இந்தியாவிலும் இந்தியாவின் சில செயற்பாடுகள் இலங்கையிலும் கடந்த காலங்களில் பல்வேறு எதிரொலிகளையும், பிரதிபலிப்புக்களையும் தோற்றுவித்துள்ளன என்பதனையும் மறுப்பதற்கில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினையும் இதற்கு விதிவிலக்கல்ல. இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் இந்திய அரசியல்வானில் கருமேகங்கள் உரு வாவதற்கு வித்திட்டது. இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக பலர் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்தனர். இவர்களுக்கான பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

இலங்கையின் இனக்குழும மோதுகையில் இந் தியாவின் வகிபாகம் குறித்து கருத்து தெவிக்கும் சங்கரன் கிருஷ்ணா 1990 களில் இந்தியஇலங்கை உறவுகள் சீராக இருந்ததாகவும் இதற்குக் காரணம் இந்திரா காந்திக்கும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா வுக்கும் இருந்த தனிப்பட்ட நட்புறவும் நல்லிணக் கம் ஆகும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின் றார். அத்தோடு அரசு சார்ந்த பொருளாதார அபிவி ருத்தி மற்றும் வெளிநாட்டு கொள்கையில் இருவரும் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினால் இந்த உறவு மேலும் இறுக்கற்றது. 1977 79 காலப் பகுதியில் இந்தியாவில் ஜனதா கூட்டணித் தலைவரான மொரார்ஜி தேசாயும், இலங்கையில் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் ஆட்சியில் இருந்த போது இந்தியா இலங்கை உறவுகள் நல்ல நிலையிலேயே இருந்தன. 1979 இல் சிங்கள தமிழ் அதிருப்திச் சூழல் இடம்பெற்ற போது இது முற்று முழுதாக ஒரு உள்நாட்டு விடயம் என்பதிலும் இந்தியா அதில் அதிகமாக கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பதிலும் தேசாய் தெளிவாக இருந்துள்ளார் என்றும் கருத்து தெவிக்கப்படுகின்றது. இதேவேளை 1978 இல் மொரார்ஜி தேசாய் இலங்கை வந்திருந்த போது தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களை சந்தித்த சமயத்தில் இலங்கைப் பிரச்சினைகள் குறித்து தாம் கற்க வேண்டி இருப்பதாக வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

எவ்வாறாயினும் 1981 இல் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச மயமாக்கியது.

1981 இல் இடம்பெற்ற சம்பவத்தினைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் சில அரசியல்வாதிகள் நிலைமை குறித்து ஆராயும் பொருட்டு இங்கு வருகை தந்திருந்தனர். 1981 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து மனித உரிமை இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் பத்திரி கையாளர்களும் பல்கலைக்கழக ஆசியர்களும் குடாநாட்டுக்கு வருகை தந்திருந்தனர். இந்தியாவின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து காலஞ்சென்ற பேராசியர் ஊர்மிலா பட் ஸ் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சூரியநாராயணன் போன்றோரும் வருகை தந்திருந்தனர். பாஈஸ்டன் எக்கன மிக் வியூ என்ற தென்கிழக்காசிய சஞ்சிகையின் பிரபல ஆசியரிரான டெல்லியில் இருந்து இயங்கிய சலமட் அலி பல கட்டுரைகளையும் அன்றைய யாழ். நிலைமைகள் குறித்து எழுதி இருந்தார். இந்தியா டுடே இன் பத்திரிகையாளரான வெங்கட் நாராயணனும் நிலைமைகளை அவதானிக்கும் பொருட்டு இங்கு வருகை தந்தி ருந்தார்.

1972 1982 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இனநெருக்கடி வேகமாக வளர்ந்து வந்த காலகட் டமாக இருந்த போதும், இந்தியாவில் இவை களைப் பற்றி சிவில் சகத்திலும் பல்கலைக் கழக மட்டம் மற்றும் ஊடகங்களில் தெளிவான விளக்கம் இருக்கவில்லை என்பதனையும் புத்திஜீ விகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்குறித்த கால கட்டம் இந்திய அரசியலிலும் பிரச்சினைக்குய ஒரு காலகட்டமாகவே இருந்துள்ளமையும் குறிப் பிடத்தக்கதாகும்.

1989 இல் வி. பி. சிங் தலைமையில் கூட்டணி அரசாங்கம் பதவியேற்றது. இலங்கையின் இனப் பிரச்சினை ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்ற நிலைப்பாடு இந்தியாவின் மனதில் வேரூன்றியது. ராவ் மற்றும் ராஜீவின் அரசாங்கம் இலங் கையின் இனக் குழும மோதுகை உள்நாட்டு விவகாரம் என்ற நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். கௌடா, குஜ்ரால் மற்றும் வாஜ்பாயின் பி.ஜே. பி கூட்டணி அனைவரும் இத்தகைய மனப் பாங்கினையே கொண்டிருந்துள்ளனர். இவ் ஆட்சிகளின் இந்தியக் கொள்கையானது இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதோடு இலங்கைத் தமிழர்களுக்கு தனியாக ஒரு தேசத்தை ஒரு தேசத்தை உருவாக்குவதற்கு தமது ஆதரவைத்தர வெளிப்படையாகவே மறுத்தன என்பதனையும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் நாடு உட்பட இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இலங்கையின் விவகாரங்களில் கூடிய பங்கேற்க எவ்வித அவாவோ அல்லது அக்கறையோ இருக்கவில்லை என்ற கருத்துக்களும் எதிரொலித்தன. ஈழம் என்ற விடுதலைப் புலிகளின் பிடிவாதத்தை இந்தியா விரும்பாத நிலை காணப்பட்டது.

இத்தகைய இழுபறிகளும் கருத்து முரண்பாடுகளும் நீண்ட காலம் தொடர்ந்த வண்ணமாகவே இருந்தன. எவ்வாறெனினும் இலங்கையின் கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலை யில் யுத்தத்தின் தோற்றுவாயான இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்தியா பிரதான சூத்திரதாரியாக இருந்து அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க முனைப்புடன் செயற்பட வேண்டும் என்பது பலனதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசாங்கம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்குரிய அல்லது மேலான அதிகாரங்களை வழங்கி பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியா மற்றும் சர்வ தேச நாடுகளிடம் எற்கனவே தெவித்திருந்தது.

மாகாண சபை முறை மற்றும் செனட் சபை என்பவற்றை உருவாக்குவதன் மூலமாக சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை அரசு பாதுகாக்க உத்தரவாதமளித்துள்ளதாகவும் தெயவருகின்றது.

வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்அபிவிருத்தி பணிகளை சாத்தியமுள்ளதாக மாற்றுவதற்கு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழர் தரப்பிடம் இந்தியா கேட் டுக் கொண்டும் உள்ளது. நாட்டில் பாய அபிவிருத்தியை முன்னெடுக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுக்கும் திட்டங்களையும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த போதே மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்தவிடம் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா இலங்கையுடன் தற்போது நல் உறவைப் பேணி வருகின்றது என்ற போதும் இலங்கை அரசு தனது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க சீன அரசின் உதவியினை பெற்றுக் கொள்வது குறித்து இந்தியா திருப்தி கொள்ளவில்லை என்று ரஞ்சித் ஆனந்த ஜய சிங்கா கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார இதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் சுட்டிக்காட்டுகின்றார். குறிப்பாக சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைகம் போன்ற நிர்மாணப் பணிகள் குறித்து இந்தியா திருப்தியடையவில்லை. சீன, இலங்கை உறவுகள் குறித்து இந்தியா மாற்றுக் கண் கொண்டே நோக்குகின்றது. எனவே இந்தியாவின் மனதை வென்றெடுக்க வேண்டுமானால் உய அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் மேலும் வலிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கடந்த கால அரசுகள் இந்தியாவின் நிலைப்பாட்டை அலட்சியம் செய்ததன் விளைவாகவே பிரச்சினை சிக்கலாகியது. இந்தியாவின் நிலைப்பாட்டை அலட்சியம் செய்ததால் ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தது. இந்தியாவின் கசனை இன்றும் நாளையும் என்றும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வை காண்பதற்கு இதுவே பொருத்தமான காலகட்டம். உறுதியான ஒரு அரசாங்கம் இருப்பதால் தீர்வு காண்பதற்கு முடியும்.

யுத்தத்தை ஒரு பயங்கரவாத பிரச்சினையாக வரை யறுக்கமு டியாது. இனப்பிரச்சினையின் பெறுபேறாகவே பயங்கரவாதம் தோன்றியது என்று இலங்கை சமாதான பேரவையின் பிரதம நிறை வேற்று அதிகாரி  ஜெகான் பெரேரா குறிப்பிடுகின்றார்.

இதேவேளை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் வகையில் அரசியல் தீர்வு யோசனை ஒன்றை இவ்வருட இறுதியில் அரசிடம் முன்வைக்க உள்ளதாக கே. சிவாஜிலிங்கம் தெரி வித்திருக்கின்றார். பத்து தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து இவ் அரசியல் தீர்வு யோசனையை தயாரித்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அரசியல் மற்றும் அனுபவ முதிர்ச்சியினைக் கொண்ட ஒரு தலைவராக விளங்குகின்றார். அயல்நாடுகளின் நட்புறவைப் பேணி இந்தியாவை சகல துறைகளிலும் விருத்தியடையச் செய்வது இவன் இலக்காக உள்ளது. எனவே இவன் ஒத்துழைப்புடன் இந்தியாவின் சம்மதத்தோடும், வழிகாட்டலோ டும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பது சிறந்ததாகும். இவ்வாய்ப்பினைத் தவற விடுவதால் சிக்கல்கள் உருவாகலாம் என்று கூறப்படுகின்றது.


குறிப்பாக மன்மோகன் சிங்கிற்கு அடுத்தபடியாக பிரதமர் நாற்காலியில் அமரப் போகும் பெருமைக்குரியவராக இளம் தலைவர் ராகுல் காந்தி விளங்குவார் என்று பெரும்பாலும் நம்பப்படுகின்றது. நேரு காந்தி ராஜவம்சம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை கையில் எடுக்கின்ற போது இப்போது இருப்பதைப் போன்று இலகுவாக இந்தியாவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற் கொள்வதற்கான வாய்ப்பு காணப்பட மாட்டாது.

மன்மோகன் சிங்கை விட வேறுபட்ட அணுகுமுறை அவர்களிடம் காணப்படலாம். இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்திலும் இழுபறி நிலை தோன்றக் கூடும் என்பதும் அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

இதற்கிடையில் கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி மன்மோகன் சிங் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் இடம் பெற்ற சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பல முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. காலம் தாழ்த்தாது உடனடியாக அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தி வருவதனையும் அறிந்து கொள்ளமு டிகின்றது.

இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினரை அண்மையில் சந்தித்துப் பேசிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த், அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது என்று தெவித்துள்ளமையானது வரவேற்கத்தக்கதாக உள்ளது. இதனடிப்படை யில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க இந்தியா முழு மனதுடன் உச்சகட்ட பங்களிப்பை நல்க வேண்டும் என்பதே சகலரது எதிர்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 நன்றி துரைசாமி நடராஜா வீரகேசரி

No comments: