.
தென் கொரி ய எல்லை தீவுப் பகுதியில் வட கொரி ய ஆட் டி ல றி த் தாக் கு த ல்
தென் கொரியாவின் எல்லைப்பகுதி தீவொன்றின் மீது வட கொரிய சுமார் 200 ஆட்டிலெறி தாக்குதல்களை நடத்தியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக தாம் தாக்குதல்களை நடத்தியதாகவும் தென்கொயா தெவித்தது.
யியோன்பியோங் தீவில் ஆட்டிலறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையடுத்து தென் கொரியா உயர்மட்ட போர்க்காலமல்லாத எச்சரிக்கையை பிறப்பித்திருந்தது.
எனினும் வட கொரியா இத்தாக்குதல்கள் தொடர்பில் எந்தவொரு விமர்சனத்தையும் வெளியிடவில்லை.
தென்கொரியாவின் பதில் தாக்குதலில் வட கொரியாவில் 3 கடற்படையினரும் இரு பொதுமக்களும் உயிழந்துள்ளனர்.
1950 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக் கையின்றி டிவுற்ற கொரிய போருக்கு பின்னர் பதற்றமான சூழ்நிலை தற்போது நிலவுவதாக தெவிக்கப்படுகிறது.
கொரிய எல்லைக ளில் காலத்துக்கு காலம் மோதல்கள் இடம்பெற்று வந்த போதும் பிந்திய மேற்படி மோதலானது பிராந்திய பதற்ற நிலையை உச்சளவில் அதிகத்துள்ளதாக கூறப்படுகிறது.
யியோன்பியோங் தீவில் 1200 1300 பேர் வரையிலான மக்கள் வாழ்கின்றனர். இந்நி லையில் வட கொரியா மேற்கொண்ட தாக்குதலில் மேற்படி தீவிலுள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் தீவெங்கும் புகை மட்டமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பதில் தாக்குதல் நடவடிக்கையாக தென் கொரியா 80 ஆட்டிலெறி களை ஏவியது.
தென்கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும். அதிபர் ஒபாமா அறிவிப்பு
நியூயார்க், நவ.24 (டிஎன்எஸ்) 1952-ம் ஆண்டு முதல் கடல்எல்லை தொடர்பாக வடகொரியா- தென் கொரியா இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் 23ம் திகதி தென்கொரியாவின் பியோன்டாயோஸ் தீவின் மீது வடகொரியா ராணுவம் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. அப்போது 50 குண்டுகள் சரமாரியாக வீசப்பட்டன. பதிலுக்கு தென்கொரியா ராணுவம் 80 தடவை துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் தாக்குதலுக்கு அமெரிக்காவும், ரஷியாவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அந்த இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்பதட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்கொரியா மீது வடகொரியா ராணுவம் குண்டுவீச்சு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது தென் கொரியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தென் கொரியா அமெரிக்காவின் முக்கியமான நட்புநாடு. பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே தென்கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும். அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இப்பகுதியில் அச்சுறுத்தல் நீங்கி அமைதி நிலவ வேண்டும். சர்வதேச விதிமுறைகளை மீறக்கூடாது என தனது நட்பு நாடான வடகொரியாவுக்கு சீனா வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு ஒபாமா கூறினார்.
தென்கொரியாவில் அமெரிக்கா 28 ஆயிரம் ராணுவ வீரர்களை ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தென் கொரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர், பான்கிமூனின் செய்தி தொடர்பாளர் பர்கான் காப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து, ஜப்பான் நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். (டிஎன்எஸ் - நன்றி தேனீ
கம்போடியாவில் திருவிழா நெரிசலில் சிக்கி 345 பேர் உயிரிழப்பு
கம்போடியாவின் தலைநகர் புனோம் பென் நகரில் இடம்பெற்ற வருடாந்த சமயத் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி குறைந்தது 345 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 400 பேர் காயமடைந்தனர்.
மழைக்காலத்தை ஒட்டி ஆண்டுதோறும் இடம்பெறும் இத்திருவிழாவைத் தண்ணீர்த் திருவிழா என அழைப்பர். மூன்று நாட்கள் இடம்பெறும் இத்திருவிழாவின் கடைசி நாளான நேற்று திங்கட்கிழமை அன்றே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக பாலம் ஒன்றில் குழுமியிருந்த மக்களே நெரிசலில் சிக்கினர்.
1970களின் இனப்படுகொலைகளை அடுத்து கம்போடியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய அனர்த்தம் இதுவாகும் என அந்நாட்டின் பிரதமர் ஹுன் சென் தெரிவித்தார். நாளை கம்போடியாவில் தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் விழாக்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டயமண்ட் தீவில் இடம்பெற்ற களியாட்ட விழாவை அடுத்து டொன்லே சாப் ஆற்றில் இடம்பெற்ற படகுப் போட்டியைப் பார்ப்பதற்காக பாலத்தின் மீது மக்கள் குழுமியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
"பாலத்தின் மீது அளவுக்கும் அதிகமானோர் நின்றிருந்தனர் என்றும் இரு பக்கத்திலிருந்தும் நடுப்பக்கத்தை நோக்கி மக்கல் முண்டியடித்துக் கொண்டு செல்ல முற்பட்டனர்," என ஆத்திரேலியாவில் இருந்து சென்ற சோன் நியூ என்பவர் பிபிசிக்குத் தெரிவித்தார். மின்சாரக் கம்பி அறுந்ததனால் பலர் மின் தாக்குதலுக்குள்ளாயினர் என அவர் கூறினார்.
"மக்கள் அச்சம் அடைந்து ஒருவர் மேல் ஒருவர் வீழ்ந்தனர். பலர் பாலத்தில் இருந்து ஆற்றினுள் பாய்ந்தனர். சிலர் பாலத்தின் மீது ஏறி, மின்சாரக் கம்பிகளில் தொங்கியுள்ளனர் என்றும் அதனால் கம்பிகள் அறுந்து வீழ்ந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பலர் இறந்தனர்.
இறந்தவர்களில் பலர் இளம் வயதினர் ஆவர். காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
50 நாட்களாக பசிபிக் கடலில் காணாமல் போயிருந்த 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
50 நாட்களாகக் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போயிருந்த டோக்கெலாவ் தீவுகளைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
டோக்கெலாவ் தீவுகள்இவர்கள் மூவரும் இறந்து விட்டதாகக் கருதி அவர்களுக்கு இறுதிக் கிரியைகளும் இடம்பெற்று விட்ட நிலையில் மூவரும் பிஜித் தீவின் அருகே நேற்று புதன்கிழமை மாலை மீன்பிடிப் படகொன்றினால் கண்டுபிடிக்கப்பட்டனர். மூவரும் இப்போது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டோக்கெலாவ் தீவுகள் நியூசிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் ஆகும்.
இச்சிறுவர்களில் இருவர் 15 உம் மற்றவர் 16 14 வயதினையும் உடையவர்கள். அக்டோபர் 5 ஆம் நாள் இவர்கள் அட்டாபு திடலில் இடம்பெற்ற ஆண்டுக் களியாட்ட விழாவில் கலந்து கொண்டு விட்டு சிறிய அலுமீனியம் படகில் வீடு திரும்புகையில் காணாமல் போனார்கள்.
நியூசிலாந்து வான்படையினர் இவர்களைத் தேடிய போது அவர்கள் அகப்படவில்லை.
"மூவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், கடும் வெப்பம் காரணமாக உடல் எங்கும் சூரிய வெப்ப வடுக்கள் காணப்படுகின்றன," என இவர்களைக் காப்பாற்றிய மீனவர் டாய் பிரெடெரிக்சன் தெரிவித்தார்.
நன்றி விக்கிசெய்தி
No comments:
Post a Comment