நியுசிலாந்து சுரங்க வெடிவிபத்தில் 29பேர் பலி

.

நியுசிலாந்து நிலக்கரிச்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 29பேர் பலியாகியுள்ளனர்.

புதன்கிழமை  கிரேமவுத் என்ற இடத்தில் உள்ள பைக் ஆற்றின் அருகேயுள்ள நிலக்கரிச்சுரங்கம் ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்புப்பணியாளர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும் இங்கு வேலை செய்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
ஏற்கனவே அவ்விடத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் காணப்பட்ட நச்சுவாயுத்தாக்கம் காரணமாக மீட்புப்பணிகளில் பல சவால்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அங்கு வேலைசெய்த 29பேருமே பலியாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments: