புதுமைகள் புரியும் சாயி

.

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 85ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் இந்த வேளையிலே பகவானின் அவதாரச் சிறப்பைப் பற்றிய சில ஞானிகளின் வாக்கையும் அவன் அருட்காப்புச் சக்தியினால் அடியவர்களின் இடர் தீர்ந்த சம்பவங்களையும் இங்கு நினைவு கூர்வது பொருத்தமாகும்.







ஸ்ரீ அரவிந்தர் வாக்கு பகவான் பாபாவின் அவதாரச் சிறப்பு பற்றி எத்தனையோ மகான்கள் கூறியிருந்த போதிலும், அவற்றில் மிகமுக்கியமானதொன்றை இங்கு குறிப்பிட வேண்டும். பாபா பிறந்த அடுத்தநாள் ஸ்ரீ அரவிந்த மானிவர், பூமியில் நிகழ்ந்த இந்த அவதாரச் சிறப்புப் பற்றிச் செய்த பகிரங்க பிரகடனம் ஒரு முக்கியமான விடயமாகும். மகாயோகியான ஸ்ரீ அரவிந்த மானிவர் பாண்டிச்சேரியிலுள்ள அவரது ஆச்சிரமத்திலே கடுமையான யோக சாதனை புரிந்துவந்ததன் நோக்கம் விண்ணுலகில் இருந்து இறை சக்தியை மண்ணுலகிற்கு இறங்கிவரச் செய்வதேயாகும்.

அவர் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கடும் யோகசாதனை புரிந்துவரும் வேளையிலே 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்த ஆச்சிரமத்தில் இருந்த பல யோக சாதகர்களும் ஒரு விசித்திரமான தெய்வீக உணர்வை அனுபவித்தார்கள். பாபா மண்ணுலகில் அவதரித்தது 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதியாகும். அவர் அவரிதப்பதற்கு ஒரு வாரங்களுக்கு முன்பிருந்தே ஒரு தெய்வீக சக்தி பூவுலகில் அவதரிக்கப்போவதை ஸ்ரீ அரவிந்தர் ஆச்சிரமத்தில் ஆத்மீக சாதனையில் ஈடுபட்டிருந்த பல யோக சாதகர்கள் நேராகவே உணர்ந்தார்கள்.

இந்த தெய்வீக உணர்வு ஏற்பட்ட விதம் பற்றி பேராசியர் கே.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார் “த மதர்' என்ற நூலிலே பின் வருமாறு குறிப்பிடுகின்றார்: 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் “விண்ணகத்தில் இருந்து ஒரு மாபெரும் சக்தி பூமியை நோக்கி இறங்கி வருவதையும் அதன் கனதியான அழுத்தத் தையும் ஸ்ரீஅரவிந்தர் ஆச்சிரமத்தில் இருந்த யோக சாதகர்கள் துல்லியமாக உணர்ந்தார்கள்'.

ஸ்ரீ சத்ய சாயி பாபா பிறந்த அடுத்த நாள் அதாவது, 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதியன்று ஸ்ரீ அரவிந்தர் தனது ஆச்சிரமத்தின் மேல் மாடிக்கு வந்து கீழே கூடியிருந்த ஆச்சிரமவாசிகளைப் பார்த்து “ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு இறங்கி வந்து விட்டார்' என்று பிரகடனம் செய்தார்.

விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு இறை சக்தியினைக் கொண்டுவரும் யோக சாதனை வெற்றியளித்த தினம் என்பதால் அந்த நாளை அதன் பின்பு ஒவ்வொரு வருடம் “வெற்றித்தினம்' என்று அரவிந்தர் ஆச்சிரமத்திலே கொண்டாடும் வழக்கம் இன்று வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் மேலும் கூறுகையில், “ஸ்ரீகிருஷ்ணர் பூமிக்கு இறங்கி வந்து விட்டார் அந்த தெய்வீகச் சக்தியின் குரலைக் கோடானு கோடி மக்கள் கேட்கப்போகின்றார்கள்' என்று கூறினார்.

சீரடி சாயியின் உறுதிமொழி இத்தோடு பாபாவினுடைய முன்னைய அவதாரமான சீரடி சாயிபாபா மண்ணுலகை நீப்பதற்கு முன், தான் எட்டு வருடங்களுக்கு பின்பு மீண்டும் ஒரு பையனாக வருவேன் என்று கூறிய உறுதிமொழியும் கவனிக்கத் தக்கது. 1918ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி விஜயதசமி அன்று இம் மண்ணுலக வாழ்க்கையை நீப்பதற்கு முன்பு சீரடி சாயிபாபா அவர்கள் தனது நெருங்கிய அடியவரும் மும்பாயின் புகழ்பெற்ற வழக்கறி ஞருமான ஸ்ரீ எச்.எஸ். திக்ஷித் என்பவரிடம் நான் எட்டு வருடங்களின் பின்பு மீண்டும் ஒரு பையனாக வருவேன் என்று கூறிய அந்த உறுதி மொழி சத்யசாயி பாபா பிறப்பதற்கு முன்பே பதிப்பித்து வெளிவந்த நூலான “ஸ்ரீசாயி சக்சத்திரா'வில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சீரடி சாயிபாபா 1918ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்க்கையை நீத்து சரியாக 8 வருடங்களின் பின்பு 1926ஆம்ஆண்டு நவம்பர் மாதம் சத்ய சாயி பாபா பிறந்ததும் அவர் பிறந்த மறுநாளே ஸ்ரீ அரவிந்தர் “ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் அவதரித்துவிட்டார்' என்று பிரகடனம் செய்ததும், ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களின் அவதார மகிமைக்கு கட்டியம் கூறிநிற்கும் கனதியான சான்றுகளாகும்.

தெய்வீக இயல்புகள் சிறு வயது முதற்கொண்டு பாபா வெளிப்படுத்தி வருகின்ற தெய்வீக ஆற்றல்கள் அவன் அவதாரச் சிறப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. இறைவனின் இயல்புகள் எவை என்பது பற்றி எல்லாச் சமய நூல்களும் கூறுவது, “அவர் எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர், எங்கும் நிறைந்தவர்' என்பதாகும்.

இந்த இயல்புகள் யாவற்றையும் பாபா தன்னகத்தே கொண்டிருக்கிறார் என்பதற்கு லட்சோபலட்சம் சான்றுகள் உண்டு.

அத்தோடு, பாபா தனது இந்த தெய்வீக இயல்புகளால் எத்தனை எத்தனையோ பேரின் வாழ்க்கையில் சீரிய மாற்றங்களையும் ஏற்படுத்துவது நாம் நிதர்சனமாகக் காணும் ஓர் உண்மையாகும். உதாரணமாக, பாபாவின் எல்லாம் அறியும் சக்தியை நேரில் அனுபவித்த ஒருவர் கூறுவதைக் கேட்டால் பாபாவின் இந்த இயல்பு ஒருவன் வாழ்க்கை முறையில் எவ்வாறு பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

.ஏ. பாய், இந்திரா காந்தி அம்மையான் அரசாங்கத்தில் மத்திய அரசில் புகையிரதத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அமைச்சராவதற்கு முன்பு இந்திய ஆயுட்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் காமைத்துவப்பணிப் பாளராகவும் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தவர். பாபாவுடனான தனது சந்திப்பு பற்றி பின்வருமாறு கூறுகின்றார்: “நான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவைச் சந்திப்பதற்கு முன்பதாக 1970ஆம் ஆண்டு சீரடிக்கு சென்றிருந்தேன்.

அங்கு சீரடி சாயி பாவித்த அவரது சில சிறிய உடைமைகளை பாதுகாத்து வைத்திருந்தார்கள். அவர் உபயோகித்த கைத்தடி, பாதணி என்பவற்றுடன் சில புகைபிடிக்கும் குழாய்கள் இருந்ததைக் கண்ட நான் என்னுடைய மனைவியிடம் “சீரடி பாபா புகை பிடித்திருக்க முடியும் என்றால் நான் புகைப்பதில் என்ன தவறு' என்று நகைச்சுவையாக கூறினேன்.

இந்த உரையாடல் பற்றி வேறு எவருக்கும் தெரியாது. பின்பு நான் ஸ்ரீ சத்யசாயி பாபா அவர்களை சந்தித்தபோது பாபா, “சீரடியிலே உள்ள எனது படத்தின் முன் நின்றுகொண்டு சீரடி சாயி புகைபிடிககமுடியும் என்றால் நீங்கள் புகைப்பதில் என்ன தவறு என்று கூறினீர்கள் அல்லவா' என்று என்னைப் பார்த்து கேட்டுவிட்டு சீரடி சாயி புகைப்பதை விரும்பவில்லை என்றும் அந்த புகைக் குழாய்கள் அங்கு ஏன் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு விளக்கம் அளித்து விட்டு புகைப்பது எனது ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதலானது என்றும் அறிவுரை கூறினார்.

இந்த அனுபவத்தின் பின்பு தான் இனியும் புகைபிடித்தால் அது பாபாவுக்குத் தெரிந்து விடும் என்ற எண்ணத்தால் தன்னுடைய நெடு நாள் புகைப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக .ஏ. பாய் மேலும் கூறு கின்றார். இங்கு இன்னுமொரு விடயம் தெளிவாகிறது. அதாவது, பாபா இருக்கும் இடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்ற சீரடிக்குச்சென்று அங்குள்ள சீரடி சாயி பாபாவின் படத்திற்கு முன் நின்றுகொண்டு .ஏ. பாய் கூறிய அதே வார்த்தைகளை பாபா அவருக்குக் கூறியது மட்டுமல்லாது “எனது படத்தின் முன் நின்றுகொண்டு..' என்று கூறியதன் மூலம் சீரடி சாயிபாபாவும் தாம் ஒன்றே என்ப தையும் பாபா எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

இதேபோல பாபாவின் எல்லாம் அறியும் இயல்பைக் கண்டு தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டவர்களுள் ஏயர் சீவ் மார்ஷல் ஓ.பி. மெஹ்ராவும் ஒருவராவார். இவர் இந்திய விமானப்படையின் பிரதம தளபதி யாக பதவி வகித்தவர். இவர் தனது அனுபவத்தை பின்வருமாறு கூறுகின்றார்: “பெங்களூரிலே நான் ஏடிணஞீதண்tச்ண அஞுணூணிணச்தtடிஞிண் ஸ்தாபனத்தின் தலைவராகப் பதவிவகித்த பொழுது கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக அப்போது பதவி வகித்த தர்ம வீராவுடன் ராஜ்பவனில் தங்கியிருந்தேன். ஒரு நாள் காலை ஆளுநர் ஸ்ரீ சத்யசாயி பாபாவைத் தான் தரிசிக்கச் செல்வதாகவும், தன்னுடன் வருவதற்கு எங்களுக்கு விருப்பமுள்ளதா என்றும் கேட்டார்.

என்னுடைய மனைவி உடனடியாக வருவதற்குத் தயார் என்று கூறிவிட்டார். நாம் தங்கி யிருந்த அறைக்குத் திரும்பிச்சென்றவுடன் நான் எனது மனைவியிடம் கூறினேன், “நான் பெங்களூர் வந்திருப்பது ஒரு குறித்த வேலை யொன்றை நிறைவேற்றவே. எனது கடமையை செய்யாமல் பாபாவை பார்ப் பதில் எனது நேரத்தை செலவிட விரும்ப வில்லை' என்று கூறினேன்.

இதனால், என் மனைவியோடு வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் என் மனைவி வேண்டிக்கொண்டதால் நானும் பாபாவிடம் செல்வதற்கு ஒத்துக்கொண்டேன். ஙிடடிடூஞு ஞூடிஞுடூஞீ சென்று பாபாவை கண்டவுடனேயே சுவாமி என்னைப் பார்த்து, “உங்களுக்கு கடமை இருப்பதன் காரணமாக இங்கு வர விருப்ப மில்லாவிட்டால் நீங்கள் வந்திருக்கத் தேவை யில்லை. ஆனால், அதே சமயம் இது சம்பந்த மாக உங்கள் மனைவியோடு வாய்த் தர்க்கம் செய்தது சரியல்ல' என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு தனது மனைவி யோடு வீண் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதை தான் நிறுத்திவிட்டேன் என்று கூறும் அவர் “ஒரு மனிதனின் குணங்களை மாற்றி அவர்களைச் சீர்திருத்துவது தான் பாபா செய்யும் அற்புதங்களில் எல்லாம் பெரிய அற்புதம் என்றும் அவன் சந்நிதியில் இருக்கும் போது ஆழ்ந்த அமைதியையும் எல்லையற்ற அன்பையும் அனுபவிக்கும் எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்' என்றும் கூறுகின்றார்.

பாபாவின் எல்லாம் அறியும் இந்த சக்தியால் பல சமயங்களில் பக்தர்களைப் பாரிய விபத்துக்களில் இருந்து காப்பாற்றியிருக் கின்றார். இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் பாலகிருஷ்ண எராடி கூறும் ஓர் அனுபவம் இதற்கு ஓர் உதாரணமாகும். இந்த சம்பவம் நடந்தவேளையிலே கேரள உயர் நீதிமன்றத் தின் பிரதம நீதியரசராக எராடி இருந்தார். அவர் கூறுவதாவது: “அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி நானும் எனது மனைவியும் எனது ஒன்றுவிட்ட சகோதரருடன் கோயம்புத்தூருக்குச் சென்று விட்டு மிகவும் வாகனப் போக்குவரத்து செறிந்த ஓர் பாதையால் திரும்பிக் கொண்டி ருந்தோம். அது தமிழ்நாட்டுக்கும் கேரளா வுக்கும் இடையிலான வர்த்தக தொடர்பு களுக்கான பிரதான பாதையாக இருப்பதால் எந்நேரம் வாகனங்கள் தொடர்ச்சியாக இரு திசைகளிலும் வந்து போய்க் கொண்டிருப்பது வழக்கம். ஒரு நிமிடத்தின் ஒரு கணத்திலாவது போக்குவரத்து இல்லாமல் அப் பாதை இருப் பது என்பது நடக்கமுடியாத ஒன்று.

மதியம் 3.15 மணியளவில் தமிழ்நாடு கேரள எல்லையைக் கடந்து எமது கார் பயணித்துக் கொண்டிருந்தபோது, பருவ பெயர்ச்சி மழை கொட்டத்தொடங்கியதால் பாதையை தெளிவாகக் கண்டுகொள்வது என்பது கடினமாக இருந்தது. அதுவும், அந்த பாதையை நன்கு அறிந்துவைத்திருந்த எமது வாகனத்தின் ஓட்டுநர், தான் ஓட்டிவந்த அதிவேகத்தைக் குறைக்காமல் அந்தக் கடு கதியிலேயே காரை ஒட்டிச்சென்றார். திடீ ரென்று எமது கார் பாதையிலிருந்து சறுக்கி ஓட்டுநரது கட்டுப்பாட்டிலிருந்து பூரணமாக விலகி ஒட்டுநருக்கு துளிகூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சாலையின் ஒரு கரை யிலிருந்து மற்ற கரைக்கும் மீண்டும் அந்தப் பக்கத்திலிருந்து முன்னைய பக்கத்துக்குமாக அரைவட்டம் அடித்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பாரதூரமான விபத்து நிச்சயம் ஏற்பட்டு இருக்கும். ஆனால், ஏதோ காரணத்தால் யாரோ இரு திசைகளிலும் இருந்து வருகின்ற போக்கு வரத்தை நிறுத்திவைத்திருந்தது போல போக்குவரத்து செறிந்த அந்த சாலையில் அந்த நேரத்தில் வாகன நடமாட்டம் நின்று விட்டிருந்தது. நானும் எனது மனைவியும் பயத்தினால் “சாயி ராம், சாயி ராம்' என்று சுவாமியைக் கூவி அழைத்தோம். அதுவரை தறிகெட்ட ஒரு குதிரை போல அங்கும் இங்கும் நர்த்தனம் ஆடிய எமது வாகனம், நாம் சுவாமியைக் கூவி அழைத்த உடனேயே ஒரு சுற்று சுற்றி, பாதையின் ஒரு ஓரமாகச் சென்று முற்றாக தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. வாகனம் நின்றதுதான் தாமதம், இரு திசைகளிலும் இருந்து வாகனங்கள் அந்த பாதையில் போக்குவரத்துச் செய்ய தொடங்கின.

ஒரு புகையிரதக் கடவையின் கதவுகள் சிறிது நேரம் மூடி, பின் திறந்த உடன் எவ்வாறு வாகனங்கள் போக்குவரத்துச் செய்யுமோ அது போல இருந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி நான் புட்டபர்த்திக்கு சென்றேன்.

சுவாமியுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.

நான், “சுவாமி சென்ற ஞாயிற்றுக்கிழமை உங்கள் கருணையினால் எங்களைக் காபாத்தீர்கள்' என்று கூறிய உடனேயே பாபா “நீங்கள் இருவரும் சாயி ராம் என்று என்னைக் கூவி அழைக்கும் பொழுது என்னால் உங்களைக் காப்பாற்றாமல் இருக்க டியுமா? என்ன வேகம்! ஒரு மழை நாள் அன்று மெதுவாக போகக் கூடாதா?

ஆனால் இரு திசையிலும் நடந்து கொண்டிருந்த போக்குவரத்தை இரண்டு நிமிடம் நான் நிறுத்திவைப்பது என்பது கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது' என்று கூறிய போது எல்லாம் அறியும் அவர் எப்படிப்பட்ட விபத்திலிருந்து எங்களை காப்பாற்றி இருக்கின்றார் என அறிந்து நன்றிப் பெருக்கில் நனைந்தோம்'.

சாயி என்பது கல்வி மேம்பாட்டையும், ஞான மேம்பாட்டையும், செய்யும் கடமை யிலே தூய்மையையும் குறித்து நிற்கும் ஒர் சுட்டி. நாம் பகவான் மீது அன்பு செலுத்துவது உண்மையானால் அனைத்து மாந்தருக்குள்ளும் நிறைந்திருக்கும் சாயியின் மீது அன்பு செலுத்த வேண்டும்'.

பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 85ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் இந்த வேளையிலே பகவானின் அவதாரச் சிறப்பைப் பற்றிய சில ஞானிகளின் வாக்கையும் அவன் அருட்காப்புச் சக்தியினால் அடிய வர்களின் இடர் தீர்ந்த சம்பவங்களையும் இங்கு நினைவு கூர்வது பொருத்தமாகும்.



நன்றி வீரகேசரி

2 comments:

kalai said...

நானும் எனது மனைவியும் பயத்தினால் “சாயி ராம், சாயி ராம்' என்று சுவாமியைக் கூவி அழைத்தோம். அதுவரை தறிகெட்ட ஒரு குதிரை போல அங்கும் இங்கும் நர்த்தனம் ஆடிய எமது வாகனம், நாம் சுவாமியைக் கூவி அழைத்த உடனேயே ஒரு சுற்று சுற்றி, பாதையின் ஒரு ஓரமாகச் சென்று முற்றாக தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. வாகனம் நின்றதுதான் தாமதம், இரு திசைகளிலும் இருந்து வாகனங்கள் அந்த பாதையில் போக்குவரத்துச் செய்ய தொடங்கின.
-------------------------
முள்ளிவாய்க்கால் அவலம், சுனாமி வரும் பொழுது ஒருவரும் சாய் ராம் சாய் ராம் என்று கத்தவில்லை போல இருக்கிறது.

kirrukan said...

பட்டு வேஸ்டி பட்டுச்சேலை அணிந்து இங்கிலிசு பேசி கொண்டு சாய்ராம் சொன்னா தான் கேட்குமாம் அப்பதான் அருள்கிடைக்கும்..ஏழை கள் சாய்ராம் சொன்னா கேட்காது அருளும் கிடைக்காது