தமிழ் சினிமா

.
மன்மதன் அம்பு... திரிஷாவுடன் மேடையில் ஆடிப் பாடிய கமல்


 சிங்கப்பூரில் நடைபெற்ற மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவில் திரிஷாவுடன் கமல் ஆடிப் பாடி அசத்தினார். கமல் இயக்கியுள்ள மன்மதன் அம்பு படத்தின் இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், படத்தின் பாடல்களை மேடையில் நேரடியாக இசைத்தார். இதில் கமல்ஹாஸன், திரிஷா ஆகியோர் பங்கேற்று நீலவானம் என்ற டூயட் பாடலை இருவரும் பாடி ஆடினர்.இதுகுறித்து திரிஷா கூறுகையில், 'கமலுடன் நான் மேடையில் ஆடிப் பாடியதை நம்பவே முடியவில்லை. இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த ஓடியோ வெளியீட்டு நிகழ்ச்சி இதுவே. மேடையில் கமல் பாடியபோது, மாதவன் கண்ணீர்விட்டு அழுததை (ஆனந்தத்தில்!) என்னால் மறக்க முடியவில்லை" என்றார்.

இந்த நிகழ்ச்சியை நேரடியாக சென்னையில் நிருபர்களுக்கு போட்டுக் காட்டுவதாகவும், இறுதியில் கமல் பேசுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.


ஒரு வழியாக 'கிடைத்தது' வேங்கை! (பட இணைப்பு)


வேங்கை பட தலைப்பை ஒருவழியாக கைப்பற்றிவிட்டார் இயக்குநர் ஹரி.

ஹரியின் இயக்கத்தில் அருவா என்ற பெயரில் துவங்கவிருந்த தனுஷ் படம் , பின்னர் வேங்கை எனப் பெயர் மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால் அடுத்த சில தினங்களில் அதே தலைப்பில் படம் இயக்கப் போவதாக பாலா என்ற புதிய இயக்குநர் அறிவிப்பை வெளியிட, ஏக டென்ஷனாகிவிட்டார் ஹரி.

இந்தத் தலைப்பை தனக்குத் தந்துவிடுமாறு பல வழியிலும் அந்த புதிய இயக்குநரை ஹரி மிரட்டியதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அந்தப் புதிய இயக்குநரிடம் 'பேச்சு' நடத்தி, தரவேண்டியதைத் தந்து வேங்கை தலைப்பை ஹரி பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

தலைப்புப் பிரச்சினை தீர்ந்த தெம்பில் இப்போது வேங்கை படத்தின் படப்பிடிப்பை தனுஷ் - தமன்னாவை வைத்துத் துவங்கிவிட்டார் ஹரி. முழுக்க முழுக்க கிராமத்து ஆக்ஷன் கதையாக வருகிறது வேங்கை.


நன்றி வீரகேசரி


No comments: