- அக்ஷராவின் காதல்...அப்பா கமல் செய்யப் போவதென்ன?
- மன்மதன் அம்பு 17 டிசம்பர் அன்று வெள்ளித்திரையில்
- தமிழ் நடிகர்களை தரக்குறைவாக பேசவில்லை: ஆர்யா விளக்கம்
அக்ஷராவின் காதல்...அப்பா கமல் செய்யப் போவதென்ன?
வீணைக்கு பிறந்தது விறகாகுமா? யானைக்கு பிறந்தது எறும்பாகுமா? நடிகர் கமல்ஹாசனின் வாரிசுகள் கலையுலகத்தையே வியக்க வைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கு காதல் மன்னன் என்றொரு பட்டமும் உண்டல்லவா? அவரது மகள்கள் இருவரும் அப்பாவின் கலையுலக வாழ்க்கைக்கும், காதல் வாழ்க்கைக்கும் சேர்த்து வியத்தகு வாரிசுகளாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.ஸ்ருதியின் முதல் படம் முன்னே பின்னே இருந்தாலும், இழந்த மார்க்கெட்டை முன்னிலும் வேகமாக கைப்பற்றிவிட்டார். அவரது இரண்டாவது மகள் அக்ஷரா, சொசைட்டி என்ற படத்தில் உதவி இயக்குனராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் இருக்கிறார். அம்மா தனியே அப்பா தனியே இருந்தாலும், மகள்களில் அக்ஷரா மட்டும் அம்மா செல்லம். மும்பையில் சரிகாவுடன்தான் இருக்கிறாராம்.
கண்டிப்பு இல்லாத குழந்தைக்கு காதல் ஈசி! அக்ஷராவும் அப்படி ஒரு காதலில் சிக்கிக் கொண்டாராம். இலங்கை வாலிபர் ஜேசன் ஜெயசீலன் என்பவருடன் கடந்த ஒரு வருடமாக காதல் கொண்டிருக்கிறாராம் அக்ஷரா. முதலில் நட்பாக துவங்கிய பழக்கம் நாளடைவில் காதலாகிவிட்டது என்று முணுமுணுக்கின்றன மும்பை மீடியாக்கள். இந்த மேட்டர் மெல்ல மெல்ல கமல்-சரிகா இருவருக்கும் இப்போதுதான் தெரிந்ததாம். அதுவும் தங்கள் போட்டோக்களை இன்டர்நெட்டில் இருவரும் வெளியிட்டதால்தான் என்கிறார்கள் அதே மும்பைக்காரர்கள்.
மன்மதன் அம்பு 17 டிசம்பர் அன்று வெள்ளித்திரையில்
டிசம்பர் 17 ஆம் திகதி கமல், திரிஷா, சங்கீதா, மாதவன் இணைந்து நடித்த நகைச்சுவைக் காதல் காவியம் உலகம் எங்கும் வெள்ளித்திரைக்கு வர இருக்கிறது என்பதை அறிவித்துளார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் மிகவும் பிரமாண்டமாக சில வாரங்களுக்கு முன்பாக நிகழ்ந்தது நாம் அறிவோம். நீலவானம் எனும் பாடலை கமலே பாடல்வரிகளை எழுதியும் பாடியும் இருக்கின்றார். இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், மெகா பட்ஜெட் படமான மன்மதன் அம்பு, விளம்பரங்கள் கூட வெளியாகாமல் உள்ளது கமல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் காவலன், ஈசன், விருத்தகிரி ஆகிய படங்களும் டிசம்பர் மாதத்தில் திரைக்கு வர இருக்கின்றன.
தமிழ் நடிகர்களை தரக்குறைவாக பேசவில்லை: ஆர்யா விளக்கம்
உள்ளம் கேட்குதே படத்தில் அறிமுகமானவர் ஆர்யா. அதன் பின்னர் பல படங்களில் நடித்து உச்சத்துக்கு சென்றுவிட்டார். சர்வம், மதராசபட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது சிக்கு புக்கு, பாலா இயக்கும் அவன் இவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
துபாய் பட விழாவில் ஆர்யா பங்கேற்று பேசும்போது, தமிழ் நடிகர்களை இழிவுபடுத்தியதாக செய்திகள் வெளியாயின.
தமிழ் படங்களில் நடிக்க திறமை தேவை இல்லை. நடிக்கவும் தெரிய வேண்டாம். ஆனால் மலையாள படங்களில் நடிப்பதற்கு நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். மலையாளத்தில் தான் தரமான படங்கள் வருகின்றன என்றெல்லாம் அவர் பேசியதாக கூறப்பட்டது.
இதற்கு பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் கண்டனம் தெரிவித்தார். தமிழ், நடிகர்களை இழிவாக பேசிய ஆர்யாவை விரட்டியடிப்போம் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த விவகாரத்தில் திடீரென நடிகர் சங்கம் தலையிட்டது. ஆர்யாவை விமர்சித்த வி.சி. குகநாதனை சரத்குமார், ராதாரவி ஆகியோர் கண்டித்தனர். இதையடுத்து பெப்சிக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் மூண்டது. பெப்சி நிர்வாகிகள் ராதாரவியை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர். இந்து மக்கள் கட்சியினரும் ஆர்யா உருவப் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க திரையுலகினரின் கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையில் நடிகர் சங்கத்துக்கு ஆர்யா விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழ் நடிகர்களை இழிவாக பேசவில்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நன்றி விடுப்பு
No comments:
Post a Comment