அவுஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கம் -வென்ற்வேத்வில்.

.
அவுஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டம் 2010-07-28 அன்று வென்ற்வேத்வில் டாசி வீதியில் அமைந்துள்ள றெஜ் பேண் சன சமூக நிலைய மண்டபத்தில் காலை 10 மணியளவில் திரு வீ. எம். தேவராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டம் சங்க நலன்புரி நிதியத்தின் விதிகளில் அங்கத்தவராக இணைந்துகொள்வதற்கான வயதெல்லை தொடர்பாக சில மாற்றங்களை கொண்டுவருவதற்கான அங்கீகாரத்தை பொதுச் சபையிடம் பெறுவதற்காக கூட்டப்பட்டது.

நலன்புரி நிதியத்தில் இதுவரை காலமும் இணைந்துகொள்ள ஆகக் கூடிய வயதெல்லை 72 ஆக இருந்து வந்தது. இவ் விசேட கூட்டத்தில் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் வயதெல்லை 65 ஆக குறைக்கப்பட்டாலும் சில நிபந்தனைகளுடன் 80 வயது வரை மூத்தோரை இணைத்துக்கொண்டு சேவையை விஸ்தரிக்க திருத்தப்பட்ட விதிகளில் வகை செய்யப்பட்டுள்ளது.

புதிய வயதெல்லை அமுலுக்கு வரும் திகதியான 01. 01. 2011 க்கு முன் 65 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்டோர் எதுவித மேலதிக கட்டணமுமின்றி இணைந்து கொள்ளலாம் ஆகையால் இக் கால அவகாசத்தை தவறவிடாது நலன்புரி நிதியத்தில் இணைந்து கொண்டு பயன் பெற மூத்தோர் வேண்டப்படுகின்றனர்.

மேலும் விபரங்கள் தேவைப்படின்; Australian Tamil Seniors Association, P.O.Box 794, Wentworthville எனும் முகவரிக்கு கடிதம் எழுதுவதன் மூலம் அல்லது tamilseniors@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

No comments: