.
ஹூவர் அணைப் பாலம் - புவியில் காணப்படும் மெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்டங்களில் ஒன்று. அந்த பாரிய அமைப்பு செப்டெம்பரில் பூரணப்படுத்தப்படவிருக்கிறது. மெய் சிலிர்க்க வைக்கும் கட்டுமாணப்பணிகளின் புகைப்படங்களே இவை.
12 வருடங்களாகத் திட்டமிடப்பட்டு 5 வருடங்களாக கட்டப்பட்டுவரும் இந்த பாலம் நிறைவை நெருங்கிவிட்டது. கொலறாடோ ஆற்றின் மேல் 890 அடிக்கு உயர்ந்தெழும் இந்த பாலம் 1,900 அடி நீளமானது.
இந்த பாலத்தின் மீது 17,000 லொறிகளும் கார்களும் தினம் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாலம் பாவனைக்கு வந்தவுடன் ஹூவர் அணை மீது போடப்பட்டிருக்கும் தெரு மூடப்படும்.
ஹூவர் அணை, பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய ஓர் இலகுவான இலக்காக இருந்தமையினால் இதன் மீது ட்ரக் வாகனங்கள் செலுத்த அனுமதியில்லை. இருப்பினும் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமென நம்பப்படுகிறது.
ரி.வை. லின் இன்டநஷனல் என்ற நிறுவனமே இப்பாலத்தினை வடிவமைத்திருக்கிறது. இப்பாலத்தின் கட்டுமாணப் பணிகளில் சுமார் 3,000 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் வரலாற்றில் பாரிய கொங்கிறீட் தூண்களைக் கொண்டு கட்டப்படும் பாலம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment