நவீனத்தின் முப்பரிமாணம் 3D

.


ஹொலிவுட்டின் பிரமாண்டங்களுக்கும் பிரதான விளையாட்டு நிகழ்வுகளுக்கும் என மட்டுப்படுத்தப்பட்டிருந்த முப்பரிமாண புரட்சி வீடுகளுக்கும் விரைவில் நுழைந்துவிடும்.

குழந்தையின் முதல் நடை, பல்கலைக்கழக பட்டமளிப்பு போன்ற வாழ்வின் பெறுமதிமிக்க நிகழ்வுகளை முப்பரிமாணத்தில் பதிவு செய்யக்கூடிய முதலாவது முப்பரிமான கெமராவை பனசோனிக் நிறுவனம் தயாரித்துள்ளது.

எமக்கு இரண்டு கண்கள் இருப்பது போலவே, 3D கெமராவிலும் இரண்டு வில்லைகள் உள்ளன. முப்பரிமாண கெமெரா, அருகருகே அமைந்த வில்லைகள் ஊடாகப் பெறப்படும் படங்களை இணைத்து முப்பரிமாண படங்களை உருவாக்குகிறது. இதன்போது 3D கமெரா மனித மூளை போலத் தொழிற்படுகிறது.

சோனி நிறுவனம் முப்பரிமாண தனிப்படங்களை மட்டும் எடுக்கக் கூடிய 3D கெமராவை உருவாக்கியுள்ளது. பனசோனிக் நிறுவனம் தயாரித்துள்ள 3D கெமராவின் விலை ????. இந்த முப்பரிமாண கமெராவை அடுத்த மாதமளவில் சந்தைக்கு விட, பனசோனிக் நிறுவனம் உத்தேசித்திருக்கிறது.

No comments: