மெல்பேனில் புதிய சிந்தனை -- நொயல் நடேசன்-

  .                                               

விடுதலைப்புலிகளி;ன் ஆயுதப்போராட்டம் முடிந்து விட்டது.

விடுதலைப்புலிகளும் ஆரசாங்கமும் ஒருவரை ஒருவர் நம்பாத நிலையில்;தான் பேச்சு நடத்தினார்கள்.

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி இருக்கக் கூடாது.- இப்படி வெளியேறியதன் மூலம் உலகின் தார்மீக ஆதரவை இழந்து விட்டார்கள்.

அமெரிக்காவும் யப்பானும் ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகள் பேசத்தொடங்கிய போது வெளியேறினார்கள்.

எந்த ஒரு உலக நாடும் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்காது.

எதிர்காலத்தில் எந்த நாடும் ஆயதப் போராட்டத்தையும் ஆதரிக்காது.

இலங்கை அரசாங்கம் தமிழ்மக்களுடன் பேசத்தேவையில்லை- அரசாங்கம் போரில் வென்று விட்டது

இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்துதான் புலம் பெயர்ந்தவர்கள் வேலை செய்யமுடியும்

வட கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவவேண்டும்.

வட கிழக்கு மக்களின் புனர்வாழ்வுக்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவவேண்டும்.

இப்படியான விடயங்களை பல விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மத்தியில் துணிந்து கூறிய நபர் யார் தெரியுமா?

முன்னாள் தமிழர் புனர்வாழ்வு கழகத்தலைவரும் விடுதலைப்புலிசார்பாக பல தடவைகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவருமான டாக்டர் ஜோய் மகேஸ்வரன.; கடந்த சனிக்கிழமை (24-07-2010) மெல்பேனில் மறைந்த கணித மேதை பேராசிரியர் எலியேசர் அவர்களின் நினைவு உரையில் இந்த விடயங்களை தீர்க்கமாகக் கூறினார். இந்தக் கூட்டத்தில் இவரைத் தவிர இரு அவுஸ்;திரேலியர்களும் லயனல் போபகேயும் உரையாற்றினார்கள்.

இலங்கையில் இன நல்லுணர்வு பற்றி பேசுவதாக இந்த கூட்டத்துக்கு தலைப்பிட்டு ஈழத்தமிழ் சங்கம் நடத்துவதாக எனக்கு ஈமெயில் வந்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்காமல் ஈழத்தமிழ்சங்கத்தலவரை தொடர்பு கொண்டு “இதென்ன நீங்களுமா இலங்கையில் இன ஒற்றுமையை வேண்டி கூட்டம் நடத்துகிறீர்கள். இந்த ஈமெயிலை சிங்கள இனத்தவர்களுக்கும் அனுப்ப முடியுமா? எனக்கேட்டபோது தமிழ்சங்கத்தலைவர் இதென்ன இப்படிக்கேட்கிறாய்? நாங்களும் இன ஒற்றுமைக்குத்தானே பாடுபடுகிறேம் எல்லோருக்கும் அனுப்பலாம் என சொன்னார். நானும் சந்தோசமாக பலருக்கும் அனுப்பிவிட்டு கூட்டத்துக்குக்கும் செல்ல தீர்மானித்தேன்.

லயனல் போபகே பலகால நண்பர் இன ஒற்றுமைக்காக பலகாலமாக கான்பராவில் உழைத்தவர். அவரை பலவருடங்களுக்கு முன்பு உதயத்தின் வருடாந்த விருந்தில் தமிழ் மக்கள் மத்தியில் பேச வைத்தேன் இவரது உரையை செவிமடுப்பதன் மூலம் சிங்கள மக்களின் சிந்தனையை அறிந்து கொள்ள முடியும் என நினைத்து உற்சாகமாகச் சென்றேன்.

இது வேளையில் அவுஸ்திரேலியர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையை எனக்கு சொல்ல அதைக்கேட்டு அவர்களுக்கு கைதட்டும் நிலை எந்தக் காலத்திலும் எனக்கு வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன். இதை எனக்கு ஏற்படும் அவமானமாக நினைப்பவன். ஆனால் பல தமிழர்கள் அவர்களுக்கு அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னதை அவர்கள் தங்களது ஆங்கிலத்தில் திருப்பி சொல்லும் போது கைதட்டுகிறார்கள். இதில் இன்னும் ஒரு விசேசம் எங்களில் பலர் அகதி அந்தஸ்த்து பெற சொன்ன பொய்களையும் சேர்த்து அவர்கள் சரியான ஆங்கிலத்தில் புதிய கண்டுபிடிப்பாக சொல்லுவார்கள். இதையும் கேட்டு கைதட்ட ஒரு கூட்டம் உண்டு.

நான் உண்மையில் டாக்டர்ஜோய் மகேஸ்வரன் பேச்சை கேட்க உற்சாகத்துடன் போகவில்லை. இதற்கு பல காரணங்கள். இப்பொழுது அவை முக்கியமில்லை. ஆனால் லயனல் போபகே தனது பேச்சில் இலங்கையின் எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையுமில்லாமல் இருண்ட காலத்தை நோக்கி இலங்கை போயக்;கொண்டிருப்பதாக காண்பித்தார்

தலைவனாகவோ அல்லது அறிவாளியாகவோ தன்னை காண்பிப்பவன் தனது பேச்சில் நம்பிக்கையை கொடுக்கவேண்டும். அந்தகாரமான இருளில் ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்றுபவன்தான் அறிவாளி. இருளை சபித்துக்கொண்டிருப்பவன் முட்டள் மட்டுமல்ல சோம்பேறியும் கூட. இலங்கை தமிழர்களும் சிங்களவர்களும் முப்பது வருடம் போரிட்ட போதும் அவர்களிடம் மானிடம் செத்துவிடவில்லை என்பதற்கு சுனாமிக்காலம் உதாரணம். அரசியல்வாதிகள் இன்று வருவார்கள் நாளை போவார்கள்.

இந்தவகையில் தமிழர்கள் இலங்கையில் இப்படித்தான் நடக்கவேண்டும் என அழுத்தமாக டாக்டர ஜோய் மகேஸ்வரன் கூறியது முக்கியமானது. ஒருவரும் ஆட்சேபிக்கவும் இல்லை. இது எனக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது.

விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எந்தக்காலத்திலும் சுயமாக சிந்திக்க பயப்படுபவர்கள். அவர்கள் கனவுகள் கூட வேலுப்பிள்ளை பிரபகரனை மீறி இருக்கமுடியாது.

எனக்குத்தெரிய இந்தியாவில் ‘’ அண்ணை உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நீங்கள் எப்போதும் இயக்கத்தைவிட்டுப் போகலாம்’ என்று பாலசிங்கத்திடம் பிரபாகரன் 86ஆம் ஆண்டு கூறினார். ஆனல் சாகும் வரையும் கல்லறைகளுக்கு வெள்ளையடிக்கும் சாதாரண வேலையை மட்டும் செய்து கொண்டு மனவருத்தத்துடன் இறந்தார். இதேபோல் தம்பி சொன்னதால் சுட்டோம் என யோகி ஒரு முறை கோடம்பாக்கத்தில் கூறினார். ஏன் வெளிநாட்டு விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கூட தங்களைச் சேர்ந்தவர்களைக் கட்டுப்படுத்த மண்ணில் இருந்து வந்த உத்தரவு என கூறிக்கொள்வார்கள்;. காலம் முழுக்க வித்தியாசமாக சிந்தித்தாலும் அதை வெளிச்சொல்லாமல் அப்படி சிந்திப்பவர்களின் சுமைதாங்கியாக வன்னியில் இருந்து மறைந்தவர் நண்பர் பாலகுமார். ஒரே ஒரு கருணா எனும் வினாயகமூர்த்தி முரளீதரன் மட்டும் விடயம் புரிந்தவுடன் துணிச்சலுடன் வெளியேறியவர்.

தற்பொழுது வன்னிமக்களை காப்பாற்றி வாழ வைப்பதும் போராட்டம் என்ற பேரில் வலுக்கட்டாயமாக தங்கள் வாழ்க்கையையும் அவயவங்களையும் இழந்த இளைஞர் யுவதிகளுக்கு உதவுவதும்தான் முக்கியம் என நினைத்தாலும் பழக்க தோசத்தினால் பலர் சொல்லப் பயப்படுகிறார்கள். ஒரு தனி மனிதனின் சிந்தனையின் பின்னாலே சென்ற இந்த மனிதக் கூட்டத்தில் தற்பொழுது டாக்டர் ஜோய் மகேஸ்வரன் பேச்சு ஒரு திருப்பு முனையாக குறைந்தது மெல்பேனில் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

செம்மறிகள் கூட அறிவுள்ள இடையனைத்தான் விரும்பும் என நடிகர் சிவகுமார்கூறியது நினைவுகூரத்தக்கது.

தமிழ்தேசியத்தை நம்பியவர்கள் இப்பொழுது தலைவன் இல்லாமல் உலகமெங்கும் திருடர் கூட்டத்தின் பின் செல்லுகிறார்கள் என்பதை எனது ஐரோப்பிய பயணத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது.

இந்த நிலையில் தமிழ்த்தேசியத்தை மட்டுமல்ல அவுஸ்திரேலியாவின் மானத்தையும் காப்பாற்ற வேண்டிய தேவை டாக்டர் ஜோய் மகேஸ்வரன், சண்முகம் சபேசன் போன்ற தமிழ் தேசியவாதிகளுக்கு உள்ளது.

uthayam@optusnet.com.au

3 comments:

Anonymous said...

நடேசன் - அதுசரி மகிந்தா எவ்வளவு உங்களுக்குத் தாரவர் என்று சொன்னீர்கள் என்றால் நல்லாய் இருக்கும்

kirrukan said...

தமிழ்தேசியத்தை பேசி பிரபலமான குழுவினர்.....இப்ப தமிழ்தேசியத்திற்கு எதிராக குரல் கொடுத்து பிரபல அடைய முயற்சிக்கினம்.... பிரிவினை ஒருக்கா பிறகு இன ஜக்கியம்....


விக்டர்,லயனல் ,ஜோய்,நோயல் .......ஜெகத் கஸ்பர்.......இப்படி ஒரு கோஸ்டி

நோயல் நடேசனின் கட்டுரையின் படி பார்த்தால் புலிகளால் தான் பிரச்சனை 30 வருடத்திற்கு முதல் ஒரு பிரச்சனையும் மில்லை என்று சொல்ல வாரார்.....

நடேசன் இப்ப வடக்கு கிழக்கில் நடக்கும் குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவாரா? இல்ல தமிழன் கொழும்பில் வாழ்கிரான் தானே அப்ப சிங்கள்வன் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தா தப்பா என்று கேட்பாரா?

[quote][size="4"]ஆனால் லயனல் போபகே தனது பேச்சில் இலங்கையின் எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையுமில்லாமல் இருண்ட காலத்தை நோக்கி இலங்கை போயக்;கொண்டிருப்பதாக காண்பித்தார்[/size] [/quote]

இலங்கை இப்படியான் நிலைக்கு போனதுக்கு காரணம் தமிழனும் ,புலிகள் மட்டுமல்ல சிங்களவனுக்கு பெரும் பங்கு உண்டு...


வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்தால் நிச்சமாக புலம் பெயர் சமுகம் உதவி செய்வார்கள் எந்த அரசியல் தீர்வும் இல்லாமல் அபிவிருத்தி என்றால் எவன் கொடுக்கப்போரான்....

Anonymous said...

நடேசன் எழுதி விட்டார். ஆனால் ஜோய் மகேஸ் அப்படிக் கூறவே இல்லை என்று மற்றொரு இணையத் தளம் அடித்துக் கூறுகிறது.. என்ன நடக்கிறது.. நடேசனால் தான் எழுதியதை நிரூபிக்க முடியுமா..?
ஆசிரியர் அவர்களே, இந்தச் செய்தி உண்மையானது தானா என்பதை ஆராய்ந்து பார்த்தீர்களா ? இல்லா விட்டால் ஜோய் மகேசிடம் கருத்து கேட்டு அதையும் எழுதுங்கள்..

கணேசன் மேகநாதன்