சினிமா செய்திகள் சின்னன் சின்னனாய்

.
*மீண்டும் சர்ச்சையில் காவ்யா மாதவன்
*விஜய்க்கு ஜோடி காஜல் அகர்வால்
*விருந்தாளி திரைப்படம் மழையில் நனைத்தது
*

காசி, என் மன வானில், சாது மிரண்டால் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மனதினை வென்ற மலையாள நடிகை காவ்யா மாதவன், கடந்த வருடம் குவைத்தில் பணிபுரியும் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியேறினார்.


சீரான குடும்ப வாழ்க்கையை அனுபவித்துவந்த காவ்யா, திடீரென தனது கணவன் மீது புகார் கூறியிருந்தார். அதன் பின்னர் இந்தப் பிரச்சினை சற்று ஓய்ந்திருந்த நிலையில் காவ்யாவின் கணவர் தன்னையும்


 தனது குமும்பத்தினரையும் அவதூறாக காவ்யா பேசித்திரிவதாக அவர்மீது வழக்குத் தொடர்ந்து, காவ்யாவை பகிரங்க மன்னிப்புக் கேட்கும்படி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். இந்த விடயத்தில் கடுப்பாகிய காவ்யா, மீண்டும் கணவன் மீது புகார் தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார். கணவர் தனது குடும்பத்தாரோடு சேர்ந்து தன்னை உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கிறார்.

ஓய்ந்துபோய்விட்டதென நினைத்த காவ்யாவின் பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியதில் காவ்யாவை ஒப்பந்தம் செய்த திரையுலகம் கலங்கிப்போயிருக்கிறது.
##############################################################################################

விஜய்க்கு ஜோடி காஜல் அகர்வால்


விஜய் தற்பொழுது வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சிம்புவுடன் முரண்பட்ட லிங்குசாமி தற்பொழுது விஜயுடன் இணைகிறார்.

தொடர் தோல்விகளால் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்துவரும் விஜய், தற்பொழுதெல்லாம் நல்ல கதைக்களங்களை தேடிக்கொண்டிருக்கிறார். ஆகையினால்தான் லிங்குசாமியின் படத்திற்கும் ஓகே சொல்லியிருக்கிறார்.
கதாநாயகன் தயாராக இருக்கிறார். கதாநாயகியாக யாரைப் போடலாம் என தேடியபொழுது காஜல் அகல்வாலை விஜய் சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே வேலாயுதத்தில் இவரை நடிக்க கேட்டபொழுது திகதி ஒத்துவராததால் தவிர்த்துக்கொண்டார் காஜல். இப்பொழுது மீண்டும் விஜயிடம் சிக்கிவிட்டார் காஜல்.

லிங்குசாமியோடு விஜய் இணையும் இத்திரைப்படம் நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. தைப்பொங்கல் அல்லது காதலர் தினத்தில் இத்திரைப்படத்தினை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். பையா என்ற வெற்றிப்படத்தினை வழங்கிய நைன் கிளவுட் நிறுவனமே இந்தப் படத்தினையும் தயாரிக்கிறது.
###############################################################################################
விருந்தாளி திரைப்படம் மழையில் நனைத்தது

மனசை நனைய வைக்கும் மழையில் தொடங்குகிறது முதல் காட்சி. படத்தின் இயக்குனர் பெயரும் 'வாட்டர்'மேன்! என்ன ஒரு ஒற்றுமை என்று வியந்தபடியே காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தால், அடுத்தடுத்த காட்சிகளில் மழைக்கு சிக்கிய எறும்பாகிறோம். மூச்சு முட்ட வைக்கிறது முக்கால்வாசி படம். ஆறுதல் அளிக்கிற அம்சங்களை குரல் விட்டு எண்ணிவிடலாம்!

வயசான போஸ்ட்மேன். வாளிப்பான மகள். அவளை காதலிக்கும் வட்டி தொழில் செய்யும் ஹீரோ என்று மார்கழி மாச கோலத்திற்கு நிகரான அழகுடன் துவங்குகிறது கதை. அதிலும் 'கடிதமே கடிதமே...' என்ற அழகான வார்த்தைகள் கோர்த்த பாடல் பின்னணியில் கடிதங்களை டெலிவரி செய்யும் பாலாசிங்கின் சைக்கிள் பயணம் ஒரு கனமான கதைக்கு நம்மை தயார் படுத்துகிறது. ஆனால்...?

ஹீரோயின் தியானா ஏறி வருகிற ஆட்டோவை வட்டி பணத்திற்காக பறிமுதல் செய்யும் ஹீரோ ஈஸ்வர், பின்பு அதே ஹீரோயினியிடம் காதல் வயப்படுகிற காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யத்தை அள்ளி தருகிறது. அவள் தந்த பூச்செடியை வளர வைப்பதற்காக அதனிடமே ஈஸ்வர் கெஞ்சுவதும் அழகு. (பின்பு அந்த பூச்செடி வளர்வதையோ, கருகுவதையோ ஒரு ஷாட்டிலாவது காட்ட வேண்டாமோ?) யாருக்கோ வருகிற மணியார்டர் பணத்தை தவறவிட்டு பரிதவிக்கிற தியானாவிடம், இந்தாங்க நீங்க மறந்து வச்சுட்டு போன பணம் என்று ஈஸ்வர் கைகொடுப்பதும், பின்பு தியானாவுக்கு உண்மை தெரிவதும் காதல் சாக்லெட்டுகள். இந்த காதலுக்கு இயக்குனர் சமாதி கட்ட நினைக்கும்போதுதான் திரைக்கதையில் பெரிய பள்ளம்.

ஆர்னால்டு உடம்பும், அசர வைக்கும் நடிப்புமாக மிரட்டியிருக்கிறார் அறிமுக ஹீரோ ஈஸ்வர். நல்ல படங்களாக அமைந்தால் நாளைய நாற்காலி ரெடி!

அந்தகால ரேவதி போலிருக்கிறார் புதுமுகம் தியானா. நடிப்பிலும் சுட்டி ப்ளஸ் கெட்டி. கண்ணுக்கு எதிரே ஒரு கொலை நடப்பதை கண்டு அஞ்சி ஒடுங்குவதும், அவரது முடிவும் ரசிகர்களின் கர்சீப்பை நிச்சயம் நனைக்கும்!
'ராவான' விருந்தாளி கதையை தானே திருத்தி மெருகேற்றியதாக ஒரு முறை பிரஸ்மீட்டில் சொல்லியிருந்தார் சிங்கம்புலி. (உங்க டக்கு இதுதானா சிங்கம்) படம் நெடுக பேசிக் கொண்டேயிருக்கிற சிங்கம்புலி ஒரு காட்சியிலாவது நம்மை குலுக்க வேண்டுமே! உஸ்....
நாலே காட்சிகளில் வந்தாலும் நாசர் ஜம். இடைச்செருகலாக இருந்தாலும், ஸ்கூல் பையன் சங்கர் தனது பரிவாரங்களுடன் தியானாவை சைட் அடிக்கிற சாதுர்யங்கள் கலகலப்பு.
எல்லா படங்களிலும் வரும் வில்லத்தன இன்ஸ்பெக்டராக சேரன்ராஜ். தியானாவை ஒரு தினுசாக இவர் பார்க்கும்போதெல்லாம் பக்கென்று இருக்கிறது. கடைசியில் அவர் கையாலேயே கன்னத்தில்... ஹ்ம்ம் பெரிய கன்னம். பெரிய சத்தம்.
ஆறுதல் தருகிற இருவர் இசையமைப்பாளர் எஸ்எஸ்குமரனும், ஒளிப்பதிவாளர் சஜனும்!
இலை விருந்து. இட்லிதான் அரைவேக்காடு!
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா.கொம்

No comments: