14 வயது நிறைந்த பாடசாலை மாணவன் கத்தியால் குத்தி படுகாயம்


சிட்னி மேற்குப் பகுதியில் சில கடைகள் கொண்டுள்ள கட்டிடத்திற்குள் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 14 வயதுடைய ஒரு சிறுவன் மற்றய ஒரு சிறுவனை குத்திக்காயப்படுத்தியுள்ளான். இந்த சிறுவன் பிளம்ரன் சந்தைக்கட்டிடத்தில் சென்ற செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட தகராற்றில் ஈடுபட்ட ஒரு குழுவின் ஒருவராகும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவசாலையில் காயப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுவன் மவுண்ட் றூயிட் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

கத்தியால் குத்திய சிறுவன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் முன்பு ஒருமுறை சிட்னி சிறுவர் வைத்தியசாலையில் சண்டை பிடித்துள்ளார் என தெரியவருகிறது.

No comments: