புலி சந்தேக நபர்களை திருப்பியனுப்புவதில் அவுஸ்திரேலியா அதிருப்தி
விடுதலைப்புலி சந்தேக நபர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்படுவது குறித்து அவர்கள் கவலையடைவார்கள் என்பதை அவுஸ்திரேலியா குடிவரவுத்துறை அமைச்சர் செனட்டர் கிறிஸ் இவான்ஸ் ஒத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கும் சர்வதேச நெருக்கடி ஆணைக்குழுவானது, இரண்டு தரப்பிலும் யுத்தக்குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி சந்தேக நபர்களை இலங்கைக்கு திருப்பியனுப்பிவைக்கும் பட்சத்தில், இலங்கை அரசாங்கம் அவர்களை இலக்கு வைக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: