நியூ சவுத் வேல்ஸ் அரசு சட்ட மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளது

நியூ சவுத் வேல்ஸ் அரசு குற்றச் செயல்கள் மூலம் சொத்துச் சேர்பவர்களைக் குறைக்கும் நோக்குடன் சொத்துக் சேர்த்த முறையை விளக்க முடியாதவர்கள் குற்றவாளிகள் என அனுமானிக்கக் கூடிய வகையில் சட்ட மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளது. சட்ட ரீதியற்ற முறையில் சேகரிக்கப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்ய காவல்துறையினர் அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருந்தது எனவும் புதிய மாற்றங்கள் அவ்வாறு நிரூபிக்க வேண்டிய பொறுப்பை சொத்து உரியாளருக்கு கையளிக்கின்றது எனவும் முதல்வர் கிறிஸ்ரீனா கெலி தெரிவித்தார். மேலும் அவர் ஒருவரால் எவ்வாறு தனது சொத்துச் சேர்க்கப்பட்டது என்பதை விளக்க முடியாத இடத்தில் அச்; சொத்துகளை அவர் தொடர்ந்து அனுபவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

No comments: