அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் அன்சாக் நாள் 2010

                                                                                                                    செ. பாஸ்கரன்



அன்சாக் நாள் (Anzac Day) அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 25ம் நாள் நினைவுகூரப்படுகிறது. இவ்வருடம் 95 வது  நினைவு நாளாக நினைவுகூரப்படுகிறது.  1915ஆம் ஆண்டு  ஏப்ரல் 25  ம் திகதி  அவுஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் பிரித்தானிய பேரரசின் கூட்டுப்படையாக சேர்ந்து கொண்டு முதலாம் உலகப் போரின்போது  துருக்கி மீதான  போர் நடவடிக்கையில்  இறங்கியது. துருக்கிக்கும்  அவுஸ்திரேலியாவிற்கும் என்ன பிரச்சனை  என்ற  ஒரு  கேள்வி   எழுகின்றது.

முதலாம் உலக யுத்தத்தின் போது கூட்டுப் படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடலுக்கு இலகுவாகச் செல்வதற்கு ஏதுவாக வழி அமைப்பதற்காக  Winston Churchill  இனால் திட்டமிடப்படுகிறது அதற்காக துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லை  கைப்பற்றும்  திட்டத்துடன்  பிரிட்டிஸ்  இராணுவ  தளபதியின்  தலைமையில்  கூட்டுப்படை செல்கிறது. துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே  தரையிறங்கியது கூட்டுப்படை. கலிப்பொலி  கடற்கரையில்
 Mustafa Kemal   என்ற தளபதியின் தலைமையில் மறைந்திருந்த துருக்கி படைகளின்  எதிர் பாராத தாக்குதலில் மாபெரும் இழப்பு ஏற்பட்டது.  துருக்கிய இராணுவத்தினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி அவர்கள் கல்லிபொலியை ஏப்ரல் 25 இல் அடைந்தனர்.  
எட்டு மாதங்கள் வரையில் யுத்தம்  நீடித்தது. 1915 இன் இறுதியில் இருபக்கங்களிலும் ஏற்பட்ட பலத்த சேதங்களின் பின்னர் கூட்டுப் படைகள் பின்வாங்கின.  இச்சண்டையின்போது    8,000 அவுஸ்திரேலிய படையினரும் , 2,700 நியூசிலாந்துப் படையினரும்  கொல்லப்பட்டனர். அப்போரின் போது பங்குபற்றிய மற்றும் இறந்த இராணுவத்தினரை நினைவுகூர இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினம்  அரச விடுமுறை தினமாகும் .


ஒவ்வொரு வருடமும் , இந்த நாளிலே  அதிகாலையிலே அந்தந்த ஊர்களிலே இருக்கிற  நினைவு மண்டபங்களில் விசேஷமான வழிபாடுகள் மற்றும்  ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடக்கும். அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்கிறார்கள்.

6 comments:

kalai said...

அவுஸ்திரெலியா , நியூசிலாந்து வீரர்களைப் பற்றி இங்கு கதைக்கும் தாங்கள் ஈழத்து வீரர்களின் அன்சாக் தினத்தில் கலந்து கொள்வதில்லை ஏன்?

Anonymous said...

So what? If you are not supporting tigers cant you talk about other countries? We all have freedom to talk and write.
People like kalai are here to find fault on others, they cant accept good things.

Anonymous said...

hello Kalai!
If you are in Australia respect the ANZAC, or get the bloody hell out of this country! We really DO NOT NEED you in this country!

Anonymous said...

Hi யாழ் புத்தன்

You have done a wonderful job. i like it , i love to see you.

these are our socities bad smell part. i tell you a secret. we can't correct out socity, just use their negatve attitude as a positve for you and you can get some thing.

thanks

Athi

Anonymous said...

Kalai never said , we shouldn't respect ANZAC day. Please read the comments care fully before you comment. No point of getting emotion

Athi

நடேசன் said...

கலை கேட்கிறார் ஏன் ஈழத்து வீரர்களின் நிகழ்வுக்கு போகிறதில்லை என்று, ஆனால் உண்மையில் ஈழத்து அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுக்கு போகவில்லை. ஆனால் மகிந்தாவை சந்திக்கப் போயிட்டிங்கள்