பேர்த் மாநிலத்தில் நிலஅதிர்வு

.






சென்ற செவ்வாய்க்கிழமை 20 – 04 – 2010 மாலை 8.17 மணிக்கு நிலஅதிர்வு கணக்கின் படி 5 என்ற அளவில் கல்கூர்லியிலிருந்து (Kalgoorlie) வடமேற்குத் திசையில் 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோல்ட்பீல்ட் (Goldfield)  என்ற இடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது.


ஒரு இளம்பெண் நொருங்கி விழுந்த கட்டிடத்தில் சிக்குண்டு மற்றவர்களுடைய உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளாள். இந்ந நிலஅதிர்வு இந்த மாநிலத்தில் 25 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்வாகும்.

போல்டர் (Boulder)  என்ற இடத்தில் 16 கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதால் இக்கட்டிடங்கள் பாவனைக்கு மூடப்பட்டுள்ளன. இந்ந நிலஅதிர்வினால் பவுண் தோண்டி எடுக்கும் குழிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற பயத்தால் அவைகளுக்கு போவதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளன. சில வீதிகளும் மூடப்பட்டுள்ளன.

கல்கூர்லியில் பல பாடசாலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதால், இப் பாடசாலைகள் திறக்கப்படவில்லை. எல்லா தங்குமிடங்களும் இவ்விடத்தில் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்ந நிலஅதிர்வினால் இருவர் மட்டுமே காய்த்திற்குள்ளாக்கப்பட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: