கெவின் ரட்டிற்கும், ஜோன் ஹோவார்டிற்கும் இடையில் வேறுபாடில்லை – விக்டர் ராஜகுலேந்திரன்

.

அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் கெவின் ரட்டிற்கும், முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்டிற்கும் இடையில் எவ்வித வேறுபாடுமில்லை என அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் செயலாளர் விக்டர் ராஜகுலேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் விவகாரத்தில் இரண்டு பிரதமர்களுமே ஒரே விதமான கொள்கையையே பின்பற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் அமைப்புக்களினால் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு அவுஸ்திரெலிய நிர்வாகம் செவிசாய்ப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகள் தொடர்பான அண்மைய நிலைப்பாடு பெரும் ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்பவாத அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலிய தொழிற்கட்சி, தமிழர்களை நிர்க்கதியாக்கியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
ஜோன் ஹோவார்டின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட நிலைமைகளை முற்று முழுதாக மாற்றி அமைப்போம் என வாக்குறுதி அளித்தே, தொழிற்கட்சி ஆட்சி பீடேமேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் தேர்தல்கள் நடைபெறவுள்ள காரணத்தினால் சகல கட்சிகளும் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் என அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் கன்பரா டைம்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை எனவும், அகதி அந்தஸ்து கோருவோருக்கு ஊக்கமளிக்க வேண்டாம் எனவும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குளோபல் தமிழ் செய்திகள்

2 comments:

Anonymous said...

யார் யார் அறிக்கை விடுவது என்பதில் விவஸ்தை இல்லாமல் இருக்கிறது. இந்த விக்டர் தான் படகுகளில் வந்தவர்கள் புலிகள் என்று முன்பு பேட்டி கொடுத்து அப்பாவி அகதிகளையும் புலிகளாக்கியவர். அத்துடன் இராணுவம் கிளிநொச்சியைப்பிடிக்க அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்காவுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் போல புலிகள் திரும்பி தாக்குவர்கள் என்று புலிகளை தலிபானுடன் ஒப்பிட்டு கருத்து வைத்தவர்.

ஜேசு said...

அப்பாவி அகதிகளைப் புலிகள் என்று சொன்ன நீங்கள், கெவின்ரட்டையும், ஜோன் கவற்றையும் பற்றிக் கதைக்கவந்திட்டியல். ஊருக்கு உபதேசம் உனக்கில்லையோ என்ற கொள்கையோ விக்டர்