கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு: ஸ்ரீதரன்

.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டிதர் கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் தனது 96 ஆவது வயதில் கொழும்பில் காலமானார்.


1914 ஆம் ஆண்டு வேலணை மண்ணில் பிறந்த இவர் சிங்கப்பூர், மலேசிய பல்கலைக்கழகங்களில் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்ப்பணி ஆற்றியுள்ளார்.



1965 இல்தமிழரசுக்கட்சியின் சார்பில் கிளிநொச்சியில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகிருந்தார்.

தனது கடும் முயற்சியின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வியில் பல மாற்றங்கள் ஏற்படவழிவகுத்ததுடன் பல கிராமங்களில் மாகாவித்தியாலயங்கள் உருவாகவும் காரணமாக இருந்தார்.

தமிழோடு அரசியலை வளர்ப்பதிலும், அரசியலோடு தமிழை வளர்ப்பதிலும் இவரது பங்கு அளப்பரியது.

நாடாளுமன்றத்தில் இருக்கும் போதே தமிழ்மறை கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியதுடன்.

அவ்வமைப்பின் ஊடாக 14 இற்கும் மேற்பட்ட திருக்குறள் மாநாடுகளை நடத்தியுள்ளார்.

இவரின் இழப்பானது தமிழுக்கும், தமிழருக்கும் பேரிழப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 
நன்றி வீரகேசரி

No comments: