ஆன்மிகம்

.


சென்ற வாரம் திருப்பா ண் ஆழ்வாரை பற்றி பார்த்தோம். இந்த வாரம் அடுத்த ஆழ்வாரான திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீமன் நாராயணன் கோவில் கொண்டு இருக்கும் “திருவாலி என்னும் புனித தலத்திர்க்கு அருகில் உள்ள “திருக் குறையலூர்என்னும் ஊரில் கள்ளர் மரபின் தலைவனும், சிவபிரானின் பக்தனும் ஆன ஆலிநாடாருக்கும் அவரது துணைவிக்கும் அருமை புதல்வானாய் திரு மங்கை ஆழ்வார் அவதரித்தார்.

இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் “நீலன் என்பது ஆகும். இவர் பகவானின் ஸ்ரீ சார்ங்கம் அம்சம் ஆவார். இவர் சிறு வயதிலேயே சகல கலைகளிலும் தெரிந்தவராய், வாள் மற்றும் தோள் வலிமை உடையவரை விளங்கினார்.
 வரது தோள் வலிமையை, வீரத்தையும் கேள்வி பட்ட சோழ மன்னன் மிக மகிழ்ந்து நீலனுக்கு "திருமங்கை" என்னும் ஊரை தலை நகரக கொண்ட ஒரு நாட்டையும், படையும் கொடுத்து அவரை அரசன் ஆக்கினார். அரச போகததில் ஈடுபட்ட திருமங்கை ஆழ்வார் பகவானின் சிந்தனையை முற்றிலும் மறந்து நாட்டை  ஆளுவதிலும், பகைவரை வெற்றி கொள்வதிலுமே மூழ்கி இருந்தார்.
ஆண்டுகள் பல கழிந்தன. திருநாகூரில் வசித்து வந்த பக்தன் ஒருவன் திருவாலி பகவானை தரிசித்து விட்டு வரும் போது அங்கு ஒரு சுந்தர பெண் தனியாக இருப்பதை கண்டு வினவினார். அதார்க்கு அந்த பெண் தான் ஒரு தேவ கண்ணி என்றும், தான் தோழிகள் எல்லாம் தன்னை விட்டு சென்று விட்டதாகவும்,
தான் இங்கு தனியாக தாங்கி விட்டதாகவும், தன் கதையை கூறினாள். அந்த பக்தரும் “குமுதவல்லியை தன் வீட்டிருக்கு அழைத்து சென்றார். குமுதவல்லியை கண்ட அவர் மனைவியும் மிக மகிழ்ச்சி அடைந்தார். குமுதவல்லி நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும் மாக மங்கை பருவத்தை அடைந்தாள்.
குமுத வல்லியின் பேர் அழகை கண்டு பல செல்வந்தர்கள் மணக்க விரும்பினார்.
இதை கேள்வி பட்ட "நீலன்" குமுத வல்லியை தான் மணக்கும் விருப்பத்தை
வெளிப்படுத்தினான். அப்போது குமுத வல்லி அவருக்கு இரண்டு நிபந்தனை விதித்தாள்.
1 . தான் ஒரு பகவானின் பக்தனுக்கு அன்றி வேறு ஒருவருக்கு ஆட்பாட மாட்டேன் என்று கூறினாள். ஆகையால் அவரும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனாக ஆக வேண்டும் என்றும்,
2. ஒரு வருட காலம் நாள் தோறும் பகவத் பக்தர்களுக்கு ததியாரதனை (அன்ன தானம்)
செய்து அவரது திருபாத தீர்த்தத்தை பிரசாதமாக கொள்ள வேண்டும். என்றும்
கூறினாள்.
நீலனும் அதர்க்கு இசைந்து தன் கோலத்தை மாற்றி கொண்டு பக்தியுடன் அன்று முதல் குமுத வல்லியின் நிபந்தனையை தாவறாமல் நிறைவேற்றினார்..
குமுதவல்லியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். பின் நல்லதோர் நாளில் அவரது திருமணம் முடிந்தது. நீலனும் தான் திரு பணியை சிறப்பாக செய்து வந்தான்.
அவன் புகழ் நாலு திசையும் பரவியது. சோழ மன்னனுக்கு கட்ட வேண்டிய கப்ப  பணத்தை கட்ட தவறினான். அதனால் கோபம் கொண்ட சோழப் பேரரசன் அவரது அரசைக் கைப்பற்றிக் கொண்டார். ஆனால், அவர் அதற்காகக் கவலைப் படவில்லை.
எப்படியாவது அடியவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதிலேயே திண்மையான எண்ணம் கொண்டார். ஆனால், அவர் கையில் தான் பொருள்  இல்லையே, ஆழ்ந்து சிந்தித்து பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
கொள்ளை அடித்தாவது கைங்கரியம் செய்ய முடிவு செய்தார். காட்டில் மறைந்து இருந்து வழிபோக்கர்களிடம் இருந்து அவர்களுக்கு அன்றைய  தேவையான பொருள்களை விட்டு மற்ற ஆபரணங்கள், பொருள்களை களவு  செய்து தன் தான கைங்கரியதை செய்து வந்தார்.
இவ்வாறு பல காலம் பாகவத கைங்கரியதிர்க்காக வழிபறி செய்து வந்த ஆழ்வார்  மேல் கருணை கொண்டு அவரை திருத்த ஒரு நாடகம் ஆடினார். பகவான் நாராயணன் லக்ஷ்மி தேவியுடன் சேர்ந்து அந்தணர் வேஷத்தில் திருமண  கோலத்தோடு, சகல வித அபரணங்களை தரித்து கொண்டு , இந்திரன் முதலான  தேவர்களுடன் , மனித வேடத்தில் காட்டில் போய் கொண்டு இருந்தனர். அதை கண்ட  திருமழிசை ஆழ்வார் அவர்களை தடுத்து நிறுத்தி, தன் வழிபறி கொள்ளையை  ஆரம்பித்தார். எல்லோரும் ஆபரணங்களை எல்லாம் கழற்றி கொடுத்தனர். பின்,  நீலன் அந்த தம்பதிகளை அதட்டி அவர்கள் ஆபரணங்களை எல்லாம் கழற்றிய பின் ,கையில் அணிந்து இருக்கும் திருவாழியை கழற்றும் படி உத்தரவு போட்டான்.
அவர்களால் கலட்ட முடியாமல் போகவே, தன் பற்களால் கடித்து இழுத்தான்.  இயலாமல் போக, அதை விட்டு விட்டு திருடிய பொருள் மூட்டையை ஒன்று  சேர்த்து தூக்கமுயன்றான். ஆனால், அந்த முயற்சியும் வீணாய் போனது. எவ்வளவு முயன்றும் அவர்களால்  மூட்டையை தூக்க முடியவில்லை.  உடனே கோபம் கொண்ட நீலன், ஏதோ மந்திரம் செய்து விட்டாய் அதனால் தான்,  என்னால் கழற்றவும் இயலவில்லை, கவர்ந்ததைக் கொள்ளவும் முடியவில்லை.
என்ன மாயம் செய்தாய், என்ன மந்திரம் செய்தாய், உண்மையை சொல்' என்று  ஆத்திரத்துடன் கல்யாண மாப்பிள்ளையிடம் கத்தியை நீட்டி மிரட்டினார். மேலும் பக்தனை சோதிக்க மனம் இன்றி, பகவான் திருவுள்ளம் புரிந்து அவன்  அருகில் சென்று பிறவி பிணி தீர்க்கும் திருமந்திரத்தை அவர் காதில் ஓதினார். பின்னர்  அவருக்கு பகவான் கருட வாகனத்தில் காட்சி கொடுத்தார். பகவானிடத்திலேயே  திருடியதை எண்ணி வருந்தி அவர்களை விழுந்து வணங்கினார். தான் இத்தனை  காலம் செய்து வந்த தவறுக்கு எல்லாம் மன்னிப்பு கோரி அழுது துடி த்தார்.
பகவான் அவரை நோக்கி, " அன்பனே" இது வரை நீர் செய்த பாகவத கைங்கரியம்  எல்லாம் என் பொருட்டே செய்தவை என்று உலகத் தாருக்கு உணர்த்தவே இவ்வாறு  செய்வி த்தோம் என்று கூறினார்.  பின் நீர் இனி உலகில் உள்ள மக்கள் உய்ய இனிய பாசுரங்களை பாடி கொடுத்து  பின்னர், என் திருவடி அடையலாம் என்று தான் திருவாய் மலர்ந்து அருளினார்.  அந்த கணமே, நம் கலியனுக்குள்ளே, கட்டுண்டு கிடந்த கருணை வெள்ளம் கரையை  உடைத்து அகிலமெல்லாம் பாய ஆரம்பித்தது. இறைவன் மீதான அன்பும், பக்தியும்  மடைதிறந்த வெள்ளமென பாசுரங்களாய் பெருக்கெடுத்தது. ஆழ்வாரின் மீதான  ஆண்டவனின் அருள், ஆழ்வாரின் மனத்திற்குள்ளிருந்து உடைந்து கண் வழியே  கண்ணீராய், திருவாய் வழியே திவ்யமொழிகளாய் வெளிப்பட்டது.
அதுமுதல், இறைவன் இருக்கும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று அவரது  அருள்கடலிலே ஆழ்ந்து, ஆழமான கருத்துடைய பாடல்களைப் பாடிப் பாடி பரவசம்  கொண்டார். இவரை “நாலு கவி பெருமாள் என்றும் அழைப்பர். இவருடைய  தெய்வப் புலமை, கவிதை சக்தி கண்ட திரு ஞானசம்பந்தர் இவருக்கு இப்பட்டத் தை  கொடுத்து இவருக்கு பரிசாக ஒரு வேலும் கொடுத் தார்.  இவர் பாடிய திவ்ய பிரபந்த பாசுரங்கள்
பெரிய திருமொழி - 1084 பாசுரங்கள்  குறுந்தாண்டகம் - 20 பாசுரங்கள்  நெடுந்தாண்டகம் - 30 பாசுரங்கள்  திருவெழுக்கூற்றிருக்கை - 1 பாசுரம்
சிறிய திருமடல் - 40 பாசுரங்கள்
பெரிய திருமடல் - 78 பாசுரங்கள். என்று பல பாடல்களை வாயார பாடி மகிழ்ந்தார்.
இப்படி ஆழ்வார் பல தேசங்களுக்கு சென்று தன் உயர்ந்த வாத திறமையால் பலரை
பக்தர்களாக மாற்றினார்.
தனது துணைவியாருடன் பல திவ்ய தேசங்களை தரிசித்தும் பாடியும் பின்  பகவானின் இருப்பிடாமான வைகுண்ட பதவியை அடைந்தார். ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.

என்றும் அன்புடன்,
ஆண்டாள்

No comments: