படகில் தப்ப முயன்ற இலங்கை அகதிகள்

.
ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் உள்பட 5 பேர் கைது
நீலாங்கரை அருகே படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உள்பட 5 பேர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி கடற்கரையோரம் ஒரு வேனில் 10 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டு இருப்பதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தந்தனர். அடையாறு துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.



போலீசாரை கண்டதும் ஒரு கும்பல் சிதறி ஓடியது. போலீசார் அவர்களை விரட்டி சென்று பொதுமக்கள் உதவியுடன் 5 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். அங்கிருந்த ஒரு வேனையும் கைப்பற்றி நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.
இலங்கை அகதிகள்
விசாரணையில், மதுரை அகதிகள் முகாமை சேர்ந்த குமார்(வயது45), பொள்ளாச்சி முகாமை சேர்ந்த கவராஜா(33), புதுக்கோட்டை முகாமை சேர்ந்த ராஜீவ்காந்தன்(27), ஈரோடு முகாமை சேர்ந்த உதயகுமார்(33) மற்றொருவர் வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ்(31) என்று தெரியவந்தது. போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-
எங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்தீவிற்கு கடல் வழியாக படகு மூலம் அழைத்து செல்வதாக பிரகாஷ் என்ற ஏஜண்டு கூறினார். இதை நம்பி நாங்கள் 10 பேர் ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை பணம் தந்தோம்.
ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து அழைத்து செல்வதாக கூறியதால் நாங்கள் வேனில் வந்தோம். ஏஜண்டு பிரகாஷிற்காக காத்திருந்த போது போலீசார் வந்ததால் தப்பி செல்ல முயன்றோம் என்றனர். இதையடுத்து 4 இலங்கை அகதிகள் மற்றும் வேன் டிரைவர் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்து சென்னை கிï பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

No comments: