தமிழ்ப் பரீட்சையில் 24 மாணவர்கள்

.

செல்வன் அஸ்வின் சண்முகலிங்கம் நியூசவுத்வேல்ஸ் மானிலத்தில் 91 புள்ளிகளைப்பெற்று தமிழ்ப் பாடத்திற்கான அதி கூடியபுள்ளிகளை பெற்றவர் 

உயர்தர வகுப்புக்கான பரீட்சை முடிவுகள் சென்றவாரம் வெளிவந்துள்ளது. இதில் நியூசவுத்வேல்ஸ்சில் தமிழை ஒரு பாடமாக உயர்வகுப்பில் எடுத்து சித்தியடைந்தது மட்டுமல்லாது 90இற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்று பாண்ட் 6 இல் தேறியுள்ளார்கள் தமிழ் மாணவர்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.




















செல்வன் பிரணவன் சிவக்குமார்


                                                                                
                                                                                               செல்வி அஞ்சனா பாஸ்கரன் 



ஹோம்புஸ் தமிழ்க்கல்வி நிலையத்தில் இருந்து 23 மாணவர்களும் வென்ற்வேத்வில் தமிழ்க்கல்வி நிலையத்திலிருந்து ஒரு மாணவியும் மேற்படி பரீட்சையில் தோற்றியிருந்தார்கள். இதில் ஹோம்புஸ் கல்வி நிலையத்திலிருந்து 3 மாணவர்கள் பாண்ட் 6 இலும் 18 மாணவர்கள் பாண்ட் 5 இலும் சித்தியடைந்துள்ளார்கள்;. வென்ற்வேத்வில் தமிழ்க்கல்வி நிலையத்திலிருந்து தோற்றிய மாணவி பாண்ட் 5 இல் சித்தியடைந்துள்ளார். இந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் தமிழ்முரசு வாழ்த்துகின்றது.

செல்வன் அஸ்வின் சண்முகலிங்கம் நியூசவுத்வேல்ஸ் மானிலத்தில் 91 புள்ளிகளைப்பெற்று தமிழ்ப் பாடத்திற்கான அதி கூடியபுள்ளிகளை பெற்றவர் என்ற மந்திரி விருதை பெற்றுக்கொள்கின்றார். இவரையும் இவரை ஊக்குவித்த பெற்றோர்களையும் தமிழ் முரசு வாழ்த்துகிறது.


செல்வன் பிரணவன் சிவக்குமார் செல்வி அஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் பாண்ட் 6 இல் சித்தியடைந்த பெருமைக்குரிய மாணவர்களாவார்கள். இவர்கள் மூவரும் ஹோம்புஸ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களாவார்கள்.

ஹோம்புஸ் தமிழ்ப்பாடசாலையில் 11ம் 12ம் வகுப்பு மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களான திருமதி கிறிஸ்ணா நடராஜா, திருமதி தர்மா சந்திரதாஸ், திரு திருநந்தகுமார், செல்வன் தணிகை வாசன் ஆகியோரும் அதிபர் திரு தேவராஜா இணைப்பாளர் திரு லிங்கநாதன் ஆகியோரும் பாராட்டுக்குரியவர்களே. இவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய கல்வி நிலைய அனைத்து ஆசிரியர்களையும் நிர்வாகத்தினரையும் தமிழ்ச் சமூகம் பாராட்ட வேண்டும்.
முதல் முறையாக உயர் வகுப்பில் தமிழ்ப்பாடத்தை எடுப்பதற்கு மாணவி செல்வி மைதிலி இளங்கோவை தயார்ப்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள்  வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையத்தினர் . பாண்ட் 5 இல் சித்தியடைந்து   வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையத்தின் முதல் மாணவி என்ற பெருமையையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்கின்றார் மைதிலி இளங்கோ.  இவரையும் இவரை ஊக்குவித்த பெற்றோரையும் தமிழ்முரசு வாழ்த்துகின்றது.

ஆசிரியை கலாநிதி சந்திரலேகா வாமதேவா,  இணைப்பாளர் திரு வே.நாகேஸ்வரன், அதிபர் திரு.அ.மணிமாறன், அனைத்து ஆசிரியர்கள் நிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டுக் குரியவர்களே. இது அவர்களின் முதல்க்காலடி என்பது குறிப்பிடக்கூயதாகும்


2010 இல் தமிழை ஒரு பாடமாக எடுத்தவர்கள்

அஞ்சனா பாஸ்கரன்
அ ஸ்வின் சண்முகலிங்கம்
அஸ்வினி புவனேந்திரன்              
அஸ்வினி உதயகுமார்
அர்ச்சனா சந்திரதாஸ்                
ஜெனோசன் தர்மகுலசிங்கம்
கலைச்செல்வன் ஜெயமனோகர்          
கேசினி அனாமிகா பிரியன்தன்
கீர்த்திகா குமாரசாமி                  
மோஷிகவர்சினி சந்திரமொலீஸ்வரன்
நிரோசன் யூட் ஜோன் பீற்ரர்            
பிரணவன் சிவகுமார்
சாமுவேல் ஜெர்ரி                    
சிவாங்கி பார்த்திபன்
சிந்து ஜெயசங்கர்                    
ஸ்பிறிடியன் பெனான்டோ
ஸ்ரீகாயத்திரி காளியப்பன்                
ஸ்ரீபைரவி மனோகரன்
சுமந்தன் சிதம்பரப்பிள்ளை              
சுவர்ணசிறி சந்திரசேகரன்
தாரணி திருநாவுக்கரசு                  
திவ்வியமதி பழனிவேல்
யதுமினி யோகேந்திரா


மைதிலி இளங்கோ


வினாத்தாள் திருத்தும்போது 89 புள்ளிகள் வளங்கிய ஆசிரியர்களும் தமிழ் ஆசிரியர்கள்தானே ஏன் இவ்வளவு கடுமையாக திருத்துகின்றார்கள் என்று தமிழ்ப் பெற்றோர்கள் அங்கலாய்த்ததை நியூசவுத் வேல்சில் பார்க்ககூடியதாக இருந்தது. உரியவர்கள் இதற்கான விளக்கத்தை முரசோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

No comments: