அமிதாப் பச்சனின் மகளாக நடிக்கிறார் லேகா

.


பவர்’ என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சனின் மகளாக நடிக்கிறார் லேகா வாஷிங்டன். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் நடித்துள்ள ‘வ குவார்ட்டர் கட்டிங்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதில் ப்ளஸ் டூ மாணவியாக நடித்துள்ளேன். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் நான் இரண்டு பேரை சந்தித்த பிறகு எப்படி மாறுகிறேன் என்பது கதை. இந்தியில் நடித்துள்ள ‘பீட்டர் கயா காம்ஸே’ இன்னும் ரிலீசாகவில்லை. அதற்குள் அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது எப்படி என்கிறார்கள். ‘பீட்டர் கயா காம்ஸே’ படத்தில் எனது நடிப்பை கேள்விபட்டு ராஜ்குமார் சந்தோஷி ‘பவர்’ படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். திறமையில்லை என்றால் எங்கும் நிலைக்க முடியாது. எனது திறமையாலயே இந்த வாய்ப்பு வந்ததாக நினைக்கிறேன். இதில் அமிதாப்பச்சன் மகளாக நடிக்கிறேன். அஜய்தேவ்கன், சஞ்சய்தத், அனில்கபூர் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கிறது. இவர்களுடன் நடிக்கும் போது நிறைய தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ‘பீட்டர் கயா காம்ஸே’ படத்தில் பிகினி டிரெஸ் அணிந்ததை பற்றி கேட்கிறார்கள். முதலில் அப்படி நடிக்க நான் தயாராக இல்லை. எனது உடல்வாகு பிகினிக்கு ஏற்றதில்லை என்றே நினைத்திருந்தேன். பிறகு அதற்காக 3 மாதம் பயிற்சிகளை செய்துவிட்டு பின்பே அப்படி நடித்தேன். கதைக்கு தேவையென்றால் தொடர்ந்து நடிப்பேன். இவ்வாறு லேகா கூறினார். 


No comments: