ஸ்ரீ ஆண்டாள் வைபவம்


 .


சென்ற வாரம் திருமங்கை ஆழ்வாரின் வைபவத்தை பார்த்தோம். இந்த வாரம் ஆழ்வார்களின் கடைசி ஆழ்வாரும், பெரியாழ்வரின் செல்ல பெண்ணும் ஆன
கோதை” என்னும் “ஆண்டாளின்” மஹிமையை பற்றி காண்போம்.
பூதேவி நாச்சியார்  ஸ்ரீமன் நாராயணானிடம், ஸ்வாமி! பூலோகத்தில் தாங்கள்  யார் மீது மிக்க அன்பு கொள்வீர்?  என்று வினவினாள்.  அதர்க்கு பகவான்  மனம் மகிழ்ந்து "யார் அழிவிர்க்கு உரிய உடலில் பற்று  வைக்காமல், நம் மீது பக்தி கொண்டு   பாமாலை பாடி பூமாலை சூட்டி வணங்குகிறானோ அவன் மேல் மிக்க ப்ரீதி என்று கூறுகிறார். பூதேவியும் மிக்க மகிழ்ச்சியோடு பகவானின் திருவருள் பெற்று
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர் வில்லிபுத்தூர் வேதக்கோணூர்
என்று போற்றப்படும்  “ஸ்ரீவில்லிபுத்தூர் “ என்னும் திவ்ய தேசத்தில் கலியுகம் 98 ஆம் ஆண்டு  விஷ்ணுசித்தர் பராமரித்துவரும் நந்தவனத்தில் உள்ள துளசி செடிக்கு அடியில் ஆவதரித்தாள்.
    விஷ்ணுசித்தர் வழக்கம் போல் பாடிய வண்ணம் பூக்களை பறிக்க  நந்தவனத்திர்க்கு வந்தார். அன்று விசித்திரமாக குழந்தையில் அழுகுரல் கேட்டு அருகில் சென்று பார்த்தார். ஒரு அழகான  பெண் குழந்தை ஜோதி  மயமாக பிரகாசித்து கொண்டு துளசி மாடத்தில் இருப்பதை கண்டு அதிசயித்தார். பகவானின் அருளான அந்த தெய்வ குழந்தையை எடுத்து சென்று “கோதை” என்று திருநாமம் சூட்டி வளர்த்து வந்தார். அந்த குழந்தையை நாள் ஒரு மேனியும் பொழுது ஒரு வண்ணமும் ஆக  பாலூட்டி, சீராட்டி கூடவே கிருஷ்ண கதைகளையும்,லீலைகளையும் அமுதாக குழந்தைக்கு ஊட்டி வளர்த்து வந்தார்.
திருவாடி பூரத்தில் ஜகத்துதித்தாள் வாழியே
  திருப்பாவை  முப்பதும் செப்பினால் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை  வாழியே
  பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பது மூன்று உரைத்தாள் வாழியே
  உயரரங்கர்கே  கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே
 வண் புதுவை  நகர் கோதை மலர் பதங்கள்  வாழியே  [ஆண்டாள்  வாழித்திருநாமம்]
இப்படி திருவாடி பூரம்  அன்று இந்த உலகத்தில் அவதரித்து, திருப்பாவை என்னும் உன்னத பாசுரங்களை  உலகிர்க்கு கொடுத்து, கண்ணனின்  சிங்கார லீலைகளை 143 "நாச்சியார் திருமொழி" பாசுரங்களாக உலகிற்கு கொடுத்து, அந்த உயர்ந்த திருவரங்கனுக்கே  தன்னை அற்பனித்த கோதையின் பாதங்களை வழிபடுவோம் என்பது இந்த பாடலின்  கருத்து.

இத்தகய உன்னத கோதையின் பக்தியும், அந்த கண்ணனையே அடைய அவள்  பூண்ட பாவை நோன்பும், அதன் மஹிமையும், அவள் கொடுத்த உலகம் புகழ் " திருப்பாவை" பற்றியும் அடுத்த வாரம் காண்போம்.
அது வரை நாமும் அவள் காட்டிய வழியில் அந்த கண்ணனை வாயார பாடி மனதார மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்
ஆண்டாள்

No comments: