சீமான் விடுதலை

.

சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்தது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று விடுதலை செய்யப்பட்டார் சீமான். சிறையிலிருந்து வெளியே வந்தவரை வரவேற்க அவரது நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்தவர்களும், டைரக்டர் பாலா உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும் திரண்டிருந்தார்கள். பட்டாசு வெடிக்க, தொண்டர்களின் பரவசக்குரல் முழங்க சிறையிலிருந்து வெளியே வந்தார் சீமான்.
 
கடந்த எட்டு மாதமாக சிறைக்குள்ளிருந்தேன். இதனால் எனக்கு ஏற்பட்ட தொழில் நஷ்டத்தை யார் ஈடு கட்டுவார்கள்? எனது கைது நடவடிக்கையை எதிர்த்து இந்த அரசு மீது நான் வழக்கு தொடர்வேன் என்று கூறிய சீமான், வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடுவேன் என்றும் கூறினார்.

அவரது பேச்சில் தெறித்த உஷ்ணமெல்லாம் காங்கிரஸ் மீதுதான். தேர்தல் நேரத்தில் நான் பேசக்கூடாது என்றுதானே என்னை சிறைக்கு அனுப்பினீர்கள். இதோ வந்துவிட்டேன். இனி நான் பேசுவதை யாராலும் தடுக்கவும் முடியாது. தாங்கவும் முடியாது என்றார் அந்த சூடு சிறிதும் குறையாமல்.

நன்றி  தமிழ்சினிமா

No comments: