உலகக் கோப்பையை நடாத்தும் உரிமையை இழந்தது ஒஸ்ரேலியா


.
கால்பந்து கால்பந்து உலகக் கோப்பையை நடாத்தும் உரிமையை இழந்தது ஒஸ்ரேலியா. வாக்களிப்பின் போது ஒஸ்ரேலியா ஒரு வாக்கை மட்டுமே பெற்றுக்கொண்டதாக அறியப்படுகிறது.இதன் மூலம் ஒஸ்ரேலியா மிக விசனம் அடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பை 2018 ஆம் ஆண்டில்உருசியாவும்இ 2022 ஆம் ஆண்டில் கத்தாரும் முதல் முறையாக பெற்றுள்ளன.

உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் நாடுகளைத் தெரிவு செய்யஇ 22 பேர் அடங்கிய பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபிஃபா) செயற்குழுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நேற்றிரவு இடம்பெற்றது. 2018 இல் இடம்பெறவிருக்கும் தொடருக்கு இங்கிலாந்துஇ ஸ்பெயின்-போர்த்துக்கல்இ ஒல்லாந்து-பெல்ஜியம் ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு உருசியா வென்றதன் மூலம் முதன் முறையாக உலகக்கோப்பைப் போட்டிகள் கிழக்கு ஐரோப்பாவுக்குச் செல்கிறது.

2022 ஆம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் தொடரை நடத்துவதற்குப் போட்டியிட்ட ஐக்கிய அமெரிக்கா, ஆத்திரேலியா, சப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை விழுத்தி மத்திய கிழக்கு நாடான கத்தார் வென்றதை அடுத்து முதற்தடவையாக மத்திய கிழக்கு நாடொன்று உலகக்கோப்பைப் போட்டிகளை நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டிகளுக்காக 22 புதிய விளையாட்டு அரங்கங்களை கத்தார் அமைக்கும். இவை அனைத்தும் 60 கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் கட்டப்படும். அதன்பிறகு அவை பிரித்தெடுக்கப்பட்டு மற்ற வளரும் நாடுகளில் மறுபடி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. அடுத்த தொடர் வரும் 2014ல் பிரேசிலில் நடக்கிறது.

No comments: