சிவநாயகம் காலமாகிவிட்டார். .

.

ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 


வது அகவையில் 29.11.2010ல் காலமாகிவிட்டார்.
இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் சிறிலங்கா இராணுவத்தினால் எரியூட்டப்பட்டது.
இதனால் தமிழகத்துக்கு அகதியாகச் சென்று அங்கு தமிழ் தகவல் மையத்தில் வேலை செய்தார். தமிழ் நேசன் என்ற பத்திரிகையை தமிழகத்தில் நடாத்தினார். அப்பத்திரிகையில் தமிழர்களின் போராட்டங்களை எழுதினார். இதனால் இந்திய அரசு இவரை தடாச் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சிறையில் நோய்வாய்ப்பட்டு இருந்த சிவ நாயகம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை கிடைக்க இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் நோய் அதிகரிக்க, நிபந்தனையின் படி இவருக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைக்க பிரான்சு நாட்டில் அடைக்களம் பெற்றார். புலம் பெயர்ந்தாலும் கொடிய நோய்க்கு மத்தியிலும் 'Hot Spring' என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதில் தமிழர்களின் போராட்டத்தினைப்பற்றி எழுதினார். 2005ல் கொழும்பில் நோய் முற்றிய நிலையிலும் எழுதிய புத்தகம் தான் 'Sri Lanka: Witness To History' .இவர் முன்பு எழுதிய மற்றொரு புத்தகம் - 'Pen And Gun'. சுப்பிரமண்யம் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.
 nanri: கந்தப்பு 

No comments: