த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து ஏன் விலகினேன்

.

த்ரி இடியட்ஸ் படத்திலிருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து தனது விளக்கத்தை அளித்திருக்கிறார் விஜய். ஆனால் அது அதிரடி அல்ல. வழ வழா!
நான் பெரிதும் மரியாதை வைத்திருக்கிற இயக்குனர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் கால்ஷீட் பிரச்சனைதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார் விஜய். பேச்சோடு பேச்சாக அவர் சொன்ன விஷயம், நம்மை போல எக்ஸ்க்ளுசிவ் செய்திகளை வெளியிடும் அவசரக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

த்ரி இடியட்ஸ் படத்தில் நான் நடிக்கிறேன் என்று தயாரிப்பாளர்தான் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட வேண்டும். அப்படி அவர் ஏதும் செய்திகளை வெளியிடவில்லையே? ஒரு படத்தில் நடிக்கிற நடிகர் நடிகைகள் பற்றி இறுதியாக வெளியிடப்படும் செய்தி குறிப்புதான் முக்கியம். அப்படியில்லாமல் யூகத்தின் அடிப்படையில் பேசப்படும், எழுதப்படும் விஷயங்களை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்கிறார் விஜய்.
இம்மாதம் 17 ந் தேதி காவலன் யார் தடுத்தாலும் வெளிவரும் என்று சபதமிட்ட ஷக்தி சிதம்பரம் அந்த வேலைகளில் பிசியாக இருக்கிறார். இருந்தாலும் விஜய் ரசிகர்கள் இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

நன்றி தமிழ்சினிமா

No comments: