மலை ஏறுதல்

.

ஒரு தொழிலதிபர் ஜென் குருநாதரைப் பார்க்க வந்திருந்தார். அவர் முகத்தில் பெரும் குழப்பம்.

‘கொஞ்ச நாளாவே எனக்கு ஒரு பெரிய கவலை சாமி’ என்று அவர் பேச ஆரம்பித்தார். ‘என் பையன் ப்ளஸ் டூவிலே நல்ல மார்க் வாங்கியிருக்கான். அவனை டாக்டருக்குப் படிக்கவைக்கணும்ன்னு எனக்கு ஆசை. அதுக்காக எவ்வளவு செலவானாலும் கொடுக்கத் தயாரா இருக்கேன்!’

‘ஆனா அவனுக்கு டாக்டர் படிப்பில இஷ்டம் இல்லை. ம்யூசிக் கத்துகிட்டு சினிமாவிலே நுழையப்போறேன்னு அடம் பிடிக்கறான்!’

’உங்க மகனுக்கு எதுல ஆசையோ அந்தத் துறையில ஆர்வத்தோட ஈடுபடட்டுமே. உங்களுக்கு என்ன குழப்பம்?’

‘அதில்ல சாமி, ஒரு டாக்டர், எஞ்சினியர், வக்கீல் படிப்புன்னா வருங்காலத்தில நல்லாச் சம்பாதிக்கலாம். ம்யூசிக்கை வெச்சுகிட்டு என்ன பண்ணறது?’

குருநாதர் சிரித்தார். ‘மலை ஏறுறவங்களைப் பார்த்திருக்கீங்களா?’

‘டிவியில பார்த்திருக்கேன்!’

‘அடுத்தவாட்டி பார்க்கும்போது நல்லா கவனிங்க. அவங்கள்ல சிலர் அடிக்கடி மேலே நிமிர்ந்து பார்ப்பாங்க. இன்னும் எவ்வளவு உயரம் போகணும்ன்னு யோசிச்சுகிட்டே மலை ஏறுவாங்க’ என்றார் குருநாதர். ‘ஆனா வேற சிலர் தாங்கள் ஏறிகிட்டிருக்கிற மலைப் பகுதியைமட்டும்தான் கவனிப்பாங்க. அடுத்த அடி என்ன-ன்னு யோசிக்கமாட்டாங்க. அந்த அடியைக் கவனமா ஒழுங்கா எடுத்துவைக்கிறோமா-ங்கறதிலதான் அவஞ்களோட கவனம் இருக்கும்.’

‘இதையெல்லாம் என்கிட்ட எதுக்குச் சொல்றீங்க சாமி?’

குருநாதர் அவருக்குப் பதில் சொல்லாமல் தொடர்ந்து பேசினார். ’மலையை அடிக்கடி நிமிர்ந்து பார்த்து இன்னும் ரொம்ப தூரம் போகணுமேன்னு மலைச்சுப்போறவங்கல்லாம் சீக்கிரத்தில களைச்சுப்போயிடுவாங்க. அடிக்கடி தப்பாக் கால் வெச்சு விபத்துக்கு ஆளாவாங்க. ஆனா அந்த அடியிலமட்டும் கவனம் செலுத்து முன்னேறுறவங்க டென்ஷனில்லாம தங்களோட பயணத்தை முடிச்சுடுவாங்க. இதில நீங்க எந்த வகை? உங்க மகன் எந்த வகை?

நன்றி தமிழ் பேப்பர்

No comments: