ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம்

.

ரஜினி - லதா தம்பதியரின் 60-ம் கல்யாணம் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் கோலாகலமாக நடந்தது. ரஜினி-லதா திருமணம் 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது.


ரஜினிக்கு நாளை மறுதினம் 61 வயது பிறக்கிறது. 60-ம் கல்யாணத்தை பிள்ளைகளும் பேரக் குழந்தைகளும் சேர்ந்து நடத்துவது மரபு.

ரஜினி - லதா மணிவிழா நிகழ்வுகள் இன்று அதிகாலையிலிருந்தே ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் துவங்கின. மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்புப் பூஜைகள் மற்றும் ஹோமத்துடன் தொடங்கின நிகழ்ச்சிகள்.

60-ம் கல்யாணத்தையொட்டி ரஜினி பட்டு வேட்டி-பட்டு சட்டை அணிந்திருந்தார். லதா பட்டுச்சேலை உடுத்தி இருந்தார். இருவரும் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். ஹோமம் வளர்க்கப்பட்டது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத லதா கழுத்தில் ரஜினி தாலி கட்டினார்.

நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் பங்கேற்று வாழ்த்தினர்.

No comments: