ஸ்ரீ ஆண்டாள் வைபவம் (தொடர்ச்சி)

.


சென்ற வாரம் கோதையின் பிறந்த வைபவத்தை பற்றி பார்த்தோம். இந்த வாரம் உன்னத கோதையின் பக்தியும், பகவான் மீது கொண்ட அன்பும் பற்றியும் சற்று விளக்கமாக பார்ப்போம்.
துளசி  மாடத்தில் அவதரித்த கோதையை விஷ்ணுசித்தர் எடுத்து பாராட்டி சீராட்டி கிருஷ்ண கதைகளை ஊட்டி வளர்த்தார் என்று பார்த்தோம் . கோதையின்  கிருஷ்ண பக்திக்கு காரணம் வேறு யாராக இருக்க முடியும், அந்த விஷ்ணு சித்தர்(பெரியாழ்வார்)  பற்றி சில வாரங்களுக்கு முன்பே பார்த்தோம், பகவனுக்கே கண் திருஷ்டி பட்துவிடுமோ  என்று "பல்லாண்டு பல்லாண்டு " என்று பிரபந்த பாசுரம் பாடியவர் ஆயிற்றே! அவருடைய புதல்வி கேட்க வேண்டுமா!


இப்படி பட்ட பக்தரிடம் வளர்ந்து வந்த ஆண்டாள்  மங்கை பருவத்தை அடைந்த பின்னர் எம்பெருமான் திருநாமத்தையும், அவன் மாய கண்ணனாக கோப்பிகளுடன்  கோகுளத்தில் ஆற்றிய லீலைகளை கேட்டு  ரசித்தும் நினைத்தும் மகிழ்ந்தாள்.
அவளுடைய அன்பின் ஆழம் எப்படி இருந்தது என்றாள், அவள் தன்னையும் பக்தியில் சிறந்த, கண்ணனுக்கு மிகவும் பிரீதியான கோப்பிகளுள் ஒரு த்தியாகவே  நினைத்து கொண்டாள். அவள் மேலேயே ஆய்ச்சிகளில்(கோப்பிகள்)  மேல் வீசும்  மோர் , தயிர் வாடை கூட வீச தொடங்கியதாம்.  அந்தனை தூரம் அவள் சதா சர்வ காலமும் கிருஷ்ண சிந்தையிலும், அவன் லீலைகளை தன் தோழிகளுக்கு கூறியும் மகிழ்ந்தாள்.
மற்றொரு  பக்கம்  விஷ்ணு சித்தர் தினமும் தான் நந்தவனத்தில் இருந்து மலர்களை கொய்து, வட பத்திர சயனனாக அங்கு பள்ளி கொண்டு இருக்கும் பகவானுக்கு மாலை தொடுத்து சாற்றி வந்தார்.   
காலப்போக்கில், கோதையின் பக்தி, காதலாக மலர்ந்தது. கோதை வளர, வளர  தான், தன் தலைவனுக்கு ஏற்ற துணையாய் இருக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள் அதனால் அவள்  இறைவனுக்குச் சூட்டுவதற்காக பெரியாழ்வார் கோர்த்து வைத்திருந்த பூமாலையை, தன் தந்தைக்குத் தெரியாமலேயே எடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வாள். இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் அவள் அழகு பார்த்த கண்ணாடி கிணறு   உள்ளது.  அங்கு சென்றால் மறவாமல்  தரிசித்து மகிழுங்கள்.
இப்படி பல காலம் கழிந்தது. ஆண்டாள் தன் தகப்பனாருக்கு தெரியாமல்  மாலைகளை சூடி அழகு பார்த்து வைத்த மாலையை தெரியாமல் பகவானுக்கு சாற்றிக்கொண்டு இருந்தனர். பகவானும் மிக்க ப்ரீதியொடு  ஏற்று கொண்டான்.
ஒரு நாள் பூமாலையில் தலைமுடி இருப்பதை கண்டு , பகவான் சேவையில் அபசாரம் ஏற்பட்டத்தை நினைத்து பெரியாழ்வார் மிக்க மனம் நொந்தார். வேறு புஷ்பங்களை பறித்து புது மாலை ஒன்றை பகவானுக்கு சமர்பித்தார்.  ஆனால் பகவானோ அந்த மாலையை ஏற்கவில்லை. பெரியாழ்வாரும் மிக்க வேதனையுற்றார்.
மறுநாள்  இதை கண்டறிய எண்ணி அவர் தன் வழக்கமான இடத்தில் மாலையை வைத்து விட்டு மறைந்து நின்று கவனிக்கையில் கள்வனின் காதலியின் கள்ளத்தனம் வெளிப்பட்டுவிட்டது.
உடனே அவர், கோதையைக் கடிந்து கொண்டு, மீண்டும் புதியதொரு மாலையை பகவானுக்கு  அணிவித்தார். ஆனால் அந்த கண்ணன் புதிய மாலையை ஏற்க வில்லை. விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றி தனக்கு கோதை சூடி கொடுத்த மாலையே விருப்பமானது, அதையே தனக்கு தினமும் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அன்று முதல் கோதை " சூடி கொடுத்த நாச்சியார் " என்றும், பகவானையே தன் பக்தியாலும், தூய அன்பாலும் ஆண்டதால்  "ஆண்டாள்" என்றும் திருநாமம் பெற்றாள்.
இனி அடுத்த வாரம் ஆண்டாள் பகவனையே தன் மணாளனாக அடைந்த அற்புததையும், அதர்க்கு அவள் செய்த பாவை நோம்பையும், அவள் பாடிய திருப்பாவையின் மகத்துவதையும் பற்றி காண்போம்.
குறிப்பு: மாதங்களில் சிறந்தது மார்கழி , இந்த மாதத்தில் தான் ஆண்டாள் திருப்பாவை என்னும் 30  திவ்ய பாசுரங்களை பாடி பகவானை அடைந்தாள். ஆகையால் இந்த மாதத்தில் 30 திருப்பாவை சொல்லுவது மிகவும் உன்னதமானது.
ஆகையால் இந்த மார்கழி மாதத்தில் அந்த கண்ணனை ஆண்டாள் காட்டிய வழியில்  "வாயால் பாடி, மனத்தினால் சிந்தித்து, பூமலர் தூவி தொழுது" வழிபடலாம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
என்றும் அன்புடன்
ஆண்டாள்

No comments: