திருப்பாண் ஆழ்வார்

.
இந்த வாரம் அடுத்த ஆழ்வாரான திருப்பாண் ஆழ்வாரை பற்றி காண்போம். இவர் பகவானின் ஸ்ரீ வத்ஸதின் அம்சம் ஆவார். இவர் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு ஒன்றின் மூலமாக பாணரின் பக்தியை நாம் புரிந்து கொள்ளலாம்.
இவர் அரங்க நகரமாம் ஸ்ரீ ரங்கம் என்று அழைக்கப்படும் ஊர் அருகில் உள்ள உறையூர் என்னும் சிற்றூரில் கலியுகம் 342 ஆம் ஆண்டு செந்நெல் வயலுக்கு இடையில் அவதரித்தார். அப்போது அந்த வழியே சென்ற பாணர் குலத்தை சேர்ந்த பக்தன் ஒருவன் குழந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்து தன் வீட்டிற்க்கு எடுத்து சென்றான். பகவத் அம்சமாக தோன்றிய பாணர் சிறு வயதிலேயே சகலகலைகளில் வல்லாவறாக திகழ்ந்தார். பகவான் அந்த ஸ்ரீ ரங்கநாதன் மீது தீராத பக்தியும் அன்பும்  கொண்டு இருந்தார்.
இவர் தினம்தோறும் வீணாகாணத்தோடு பகவானை பாடிய வண்ணம் பக்தி பெருவெள்ளத்தில் மூழ்கி இருப்பார்.இப்படி பாணர் காவிரி ஆற்றின் தென் கரையில் குளித்து விட்டு, தான் பாணர் குலத்தில் ஆவதரித்ததால் கோவிலுக்குள் சென்று அந்த பகவானை தரிசிக்கும் எண்ணம் இன்றி ஆற்றங்கரையில் நின்றபடி அரங்கனை மனதார எண்ணி உள்ளம் உருகி மணிக்கணக்கில் பாண் என்னும் இசை கருவி இசைத்து பாடி நிற்பார்.
 இவரது பக்தியில் உருகிய பெருமான் பாணருக்கு அருள் புரிய உள்ளம் கொண்டார்.
ஒரு நாள் பகவானுக்கு கைங்கரியம் செய்து வரும் லோக சாரங்க முனிவர் காவிரியில் இருந்து பகவான் திருமஞ்சனத்திர்க்கு  நீர் கொண்டு செல்லும் வழியில் பாணர் பாடிக்கொண்டு மெய்மறந்து இருப்பதை கண்டு, அவரை வழியில் இருந்து விலக சொல்லுகிறார். பகவானின் நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கி இருந்த பாணர் அதை கவனிக்க வில்லை அதனால் சிறுது கோபம் கொண்ட லோக சாரங்க முனி  அவரின் மேல் ஒரு சிறு கல்லை எறிந்தார். உடனே சுய நினைவு வந்த பாணர் தான் பகவானின் சேவைக்கு தடையாக இருந்து விட்டோமே என்று உள்ளம் வருந்தி அங்கிருந்து ஓடிவிடுகிறார்.
 அன்று இரவு ஸ்ரீமன் நாராயணன் லோக சாரங்க முனிவரின் கனவில் தோன்றி அவர் தன் பக்தனான பாணரை  தோளில் சுமந்து தன் சன்னதிக்கு அழைத்து வர உத்தரவு இட்டார்.
லோக சாரங்க முனியும் தான் செய்த தவரை புரிந்து கொண்டு பகவானின் ஆணை படி வீணா காணம் செய்து வந்த பாணரை  தன் தொழில் சுமந்து சென்றார்.
 பாணரோ பிறவி பிணி தீர்த்து அருளும் அந்த சர்வ ர க்க்ஷகனை கண்டவுடன் பெரும் ஆனந்த துடன் பகவானை விழுந்து வணங்கினார். பின் தான் மனதும் நாவும் குளிரும் வண்ணம், எல்லோரும் எப்போதும் கண்ணனை அனுபவிக்க ஏதுவாக “அமலனாதிபிரான் “என்னும் 10 பாசுரங்களை பாடினார். இவர் பாடியது 10 பாசுரம் தான் ஆனாலும், இவை கேட்பவர்களின் மனத்தையும்  சிந்தையையும் கண்ணன் முன்னேயே நிறுத்திவிடும் சக்தி படைத்தவை.
 அதர்க்கு எடுத்துகாட்டாக ஆழ்வார் பாடிய ஒரு பாசுர த்தை அனுபவிப்போம்.
 கொண்டால்வண்ணனை கோவலானாய் வெண்ணை
உண்டவாயான்  என் உள்ளம் கவர்ந்தானை
அண்டற்கோன் அணியரங்கன்  என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே  --- [ அமலனாதிபிரான் 10 ]
அர்த்தம்:
நான் கருநீல வண்ணமான மழை மேகம் போல் உள்ள வெண்ணை உண்ட கண்ணனை, தேவர்களின் தலைவனான அந்த அரங்க நாதனை கண்டு விட்டேன். இனி அவனை கண்ட கண்கள் வேறு ஒன்றையும் பார்க்காது என்று பகவானின் அழகை ரசித்து உருகி பாடுகிறார்.
 இப்படி அவர் படிப்படியாக இறைவனின் திருவடி முதல் திருமுடி வரை ஒவ்வொன்றாகக் கண் குளிரத் தரிசித்தார்.
 நாம் மனத்தையும் , என்ணத்தையும் கட்டுப்படுத்த அந்த பகவான் மேல் சிந்தனை செலுத்த வேண்டும்  என்றும், அவரை அடைவதார்க்கு  உண்மையான பக்தியே மார்கம் என்றும்  தெரிந்து கொண்டோம். ஆகையால் நம்மால் முடிந்த வரை நாம்  அவர் நாமம்களை பாடி மகிழ வேண்டும்.
திருப்பாணால்வார் திருவடிகளே சரணம்.!!
 என்றும் அன்புடன்,
ஆண்டாள்

No comments: