ஒரு நாள் ஒரு கோபிகை, ராதையிடம் கேட்டாள்: “நீ கிருஷ்ணனைப் பார்க்கும் போது உனக்கு என்ன உணர்ச்சி வருகிறது? உன் இதயம் எவ்வாறு பதிலளிக்கிறது? உன்னுள் என்ன மாற்றம் ஏற்படுகிறது? எந்த மகிழ்ச்சியை அனுபவிக்கிறாய்?” என்று.
இவ்வாறு இறைவன் மீது மயங்கிய பக்தர்கள் தங்கள் ஆனந்தமான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை வார்த்தைகளில் விளக்க முயல்பவருக்கு உண்மையான அனுபவம் இல்லை என்பதே உண்மை.
தங்களை பக்தர்கள் என்று கருதுபவர்கள், தங்களின் குறுகிய மனப்பான்மைக்கும் உண்மையான பக்தியின் அளவற்ற உயர்வுக்கும் இடையிலான பெரிய வித்தியாசத்தை உணர வேண்டும். சிறிய பற்றுதல்களை விட்டுவிட்டு, இறைவனை வாழ்க்கையின் முக்கிய இலக்காகக் கொண்டு உறுதியான பக்தியை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
இதற்காக நல்லோரின் சங்கம் மிகவும் அவசியம். நல்லோருடன் சேர்ந்து இருப்பதன் மூலம் மட்டுமே நல்ல எண்ணங்கள் வளர்ச்சி பெறுகின்றன.
No comments:
Post a Comment