காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்’ - பாக். ராணுவ தளபதி பேச்சு
97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதி வழங்கும் நேபாளம்
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு : பேசப்பட்ட முக்கிய விடயங்கள் என்ன ?
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
11 Aug, 2025 | 11:22 AM
காசா நகரத்தின் அல்சிபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையின் முன்வாயில் தாக்கப்பட்டபோது அந்த பகுதியில் கூடாரத்திலிருந்த அனஸ் அல்-ஷரீப் மற்றும் முகமது க்ரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌஃபல் மற்றும் மோமன் அலிவாஆகியோர்கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
இந்த 'இலக்குவைக்கப்பட்ட படுகொலை" ஊடக சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு அப்பட்டமான மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்’ - பாக். ராணுவ தளபதி பேச்சு
11 Aug, 2025 | 03:45 PM
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பின்னர் சையத் அசிம் முனீர் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டி.சியில், டம்பாவில் பாகிஸ்தானின் தூதர் அட்னான் ஆசாத் நடத்திய கருப்பு-டை இரவு விருந்தில் பங்கேற்ற அசிம் முனீர், “சிந்து நதி இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல. சிந்து ஆற்றை நிறுத்துவதற்கான இந்திய திட்டங்களை தடுப்பதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது. சிந்து நதியில் இந்தியா அணை கட்டுவதைத் தொடர்ந்தால், பாகிஸ்தான் தனது நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாக்கும். இந்தியா ஒரு அணை கட்டும் வரை நாங்கள் காத்திருப்போம், அவர்கள் அவ்வாறு செய்யும்போது, அதை அழித்துவிடுவோம்.
காஷ்மீர் பாகிஸ்தானின் "கழுத்து நரம்பு". அது இந்தியாவின் உள் விவகாரம் அல்ல, தீர்க்கப்படாத சர்வதேச பிரச்சினை. "ஆபரேஷன் சிந்தூர்" என்பது பாகிஸ்தானின் இறையாண்மையின் மீதான இந்தியாவின் கடுமையான மீறல்” என்று அவர் பேசியதாக தி டானில் இன்று வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்களிப்புக்கு முனீர் நன்றி தெரிவித்தார். நன்றி வீரகேசரி
97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதி வழங்கும் நேபாளம்
Published By: Digital Desk 3
12 Aug, 2025 | 12:04 PM
தொலைதூரப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இமயமலையில் 97 சிகரங்களுக்கு மலையேற்றம் செய்ய இலவச அனுமதியை நேபாளம் வழங்கவுள்ளது.
இமயமலைத் தொடரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்துக்கு மலையேற்றம் செய்வதற்கான அனுமதி கட்டணம் செம்டெம்பர் மாதம் முதல் 15,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கவுள்ளதால் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த கட்டணம் சுமார் ஒரு தசாப்தம் கடந்து முதல் முறையாக அதிகரிப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் ஊடாக "வெளிகொணரப்படாத சுற்றுலா தளங்களை" முதன்மைப்படுத்தப்படும் என நேபாள சுற்றுலாத்துறை எதிர்பார்க்கிறது.
உலகின் 10 உயரமான மலைகளைக் கொண்ட நேபாளத்திற்கு மலையேற்றம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டி தருகிறது.
கடந்த ஆண்டு மலையேற்றம் கட்டண வருமானம் 5.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாகக் கிடைத்துள்ளது. அதில் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து முக்கால்வாசிக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது.
கட்டணங்களுக்கு சலுகை வழங்கப்படும் சிகரங்கள் நேபாளத்தின் கர்னாலி மற்றும் சுதுர்பாசிம் மாகாணங்களில் அமைந்துள்ளன. அவை 5,970 மீற்றர் (19,590 அடி) முதல் 7,132 மீற்றர் வரை உயரம் கொண்டவை ஆகும்.நேபாளத்தின் தொலைதூர மேற்குப் பகுதியில் அமைந்துள்ள குறித்த இரண்டு மாகாணங்களும் நாட்டின் ஏழ்மையான மற்றும் வளர்ச்சியடையாத மாகாணங்களில் ஒன்றாகும். நன்றி வீரகேசரி
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு : பேசப்பட்ட முக்கிய விடயங்கள் என்ன ?
16 Aug, 2025 | 10:29 AM
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்காவின் அலஸ்காவிற்கு அழைத்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சிறப்பு விமானத்தில் அலஸ்கா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செங்கம்பள வரவேற்பளித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். அதன்பின், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
சந்திப்பு நடைபெற இருந்த இடத்திற்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர்.
இருவரும் தனியே சந்திப்பார்கள் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்பிலும் தலா 3 அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
குறித்த கூட்டம் சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்
றும் புட்டின் ஆகியோர் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.
அவர்கள் நின்று கருத்துதத் தெரிவித்த இடத்தின் பின்னணியில் சமாதானத்தை தொடர்தல் என்று எழுதப்பட்டு இருந்தது.
முதலில் புட்டினை பேசுமாறு டிரம்ப் சைகை காட்டினார். அதன் படி, தனது பேச்சை ஆரம்பித்த புட்டின், டிரம்ப் உடனான சந்திப்பு தாமதமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டார். போர் மூண்டதற்கான முதன்மை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று புட்டின் தெரிவித்தார். அதாவது நேட்டோவில் உக்ரைன் இணைவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு தேவை என்று புட்டின் வலியுறுத்தினார்.
எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
நானும், டிரம்பும் வெளிப்படையாக பேசினோம். டிரம்ப் ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் தொடங்கியிருக்காது.
டிரம்பிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எங்களுக்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.
உக்ரைனில் காணப்படும் சூழ்நிலை எங்களுடைய பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. உக்ரைனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என டிரம்ப் கூறியதில் நான் உடன்படுகிறேன்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நல்ல பொருளாதார உறவு உருவாகி உள்ளது என தெரிவித்தார்.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மொஸ்கோவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
Published By: Vishnu
16 Aug, 2025 | 03:24 AM
ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார்.
மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராணுவ தளம் அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் அமெரிக்க ரகசிய சேவை மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூட்டாக டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளன.
வான்வெளி தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நகரம் முழுவதும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சிறப்புத் தேடல் நடவடிக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன.
அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஒரு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை 16ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:15 மணியளவில் நடைபெற்றது.
மேலும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment