உரிமைக்காகப் போர்ச்செய்! – அன்பு ஜெயா பா வகை: சிந்தடி வஞ்சிப் பா

 


சிந்தடி வஞ்சிப்பா:

உரிமையென்பதே ஒவ்வொருவரின் உடன்பிறந்ததே!

உரிமையதுவும் உன்தாயவள் உனக்களித்ததே!

பிறந்தநாளிலே பெற்றவுரிமைப் பெருகவாழ்ந்திடு,

மறவனாகவே உரிமைகாத்திடு மறந்திடாமலே!

வங்கக்கடல் அலைக்குரிமையும் வழங்கலாகுமோ?!

திங்கள்தரும் ஒளிதனதெனத் திரியலாகுமோ?

வாக்களித்திடும் உரிமைதன்னையும் வாங்கிநீயுமே

வாக்களித்திடத் தயங்கினாலுனை வாழ்த்தலாகுமோ?

 

தனிச்சொல்:

எனவே,

 

சுரிதகம்:

உரிமை தன்னையே உதறி விடாமலே

பெரிதாய் அதனைப் பேணுவாய்!

உரிமை, உரிமை, ஒலிப்பாய் ஓங்கியே!

 

No comments: