.
இன்று எதேச்சையாக Lifestyle Channel இன் பொத்தானை அழுத்தினேன் அங்கு உடற் பயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள். போதனையாளர் நடுத்தர வயது பெண் போதனையாளருக்கு இருக்க வேண்டிய சகல திறமைகளும் கொண்டவர், நிகழ்சி திறமையாக யாவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் போதனையாளர் ஒரு பெண்ணை நோக்கி இன்றய உனது சிந்தனைத் துளி யாது என வினவினார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் சிந்தனைக்கு ஒரு சிறு விருந்து கொடுப்பார்கள் போலும். அவள் “அன்பு இருக்கிறதே அதை நாம் இழந்துவிட முடியாது, அது நாம் அள்ளி கொடுக்க கொடுக்க எம்மையே வந்தடையும், எப்போது? மோட்ச உலகிலோ மறு பிறவியிலோ அல்ல, உடனடியாக தொடர்ச்சியாகவே அன்பானது திரும்பி வந்து எம்மையே அடையும் என்றார். இது ஒன்றும் புது கருத்து அல்ல, காலம் காலமாக நாம்கேட்டு வந்ததுதான். வள்ளுவர், சோகிரடீஸ் போன்ற அறிஞர்கள் கூறிதான் உள்ளார்கள். ஆனால் இங்கு பழய உண்மையை ஒரு புதிய ஒளியில் கண்டேன். இங்கோ உடற்பயிற்சியில் ஈடுபடும் ஓர் இளம் பெண் கூறியது, இந்த பின்னணி தான் என் சிந்தனையை கிளறியது எனலாம்.
அன்பு என்பது ஒரு பண்டமாற்று பொருளோ விற்பனை பொருளோ அல்ல, ஆனால் யாவற்றையும் பொருளியல் நோக்கில் அணுகுவோர்க்கு அன்பும் விற்பனை பொருளாகத் தான் காணப்படும். பல நூறு வருடங்களுக்கு முன் பக்தி ரசத்தை பாடலாக வடித்த மாணிக்கவாசர்ருக்கு அவ்வாறே தெரிந்தது போலும். திருவாசகத்தில் ஓர் இடத்தில்,
“ தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை,
சங்கரா யார்கொலோ சதுரர்” என்கிறார்
அதாவது நீ என்னை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஈடாக உன்னை எனக்கு தந்தாய், யார் இந்த வியாபாரத்தில் வெற்றி ஈட்டியவர் என்கிறார்.
மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? அவர் அரசனின் மந்திரி, நாட்டை பரிபாலனம் செய்தவர். ஆகவே யாவற்றையும் பொருளியல் ரீதியில்
பார்பதற்கு பழக்கப்பட்டவர், எனவேதான் பக்தியையும் அவ்வாறே நோக்க முனைந்தார்போலும். இன்றய உலகிலும் பக்தியையும் விற்பனை பொருளாக்குபவர்களை நாம் காணத்தான் செய்கிறோம்.
அன்பு பற்றிக் கூறியவள் இழம் யுவதி. புதிய சமுதாய பெண். அவள் கூறியதே அவர்கள் அன்பை எவ்வாறாக சிந்திக்கிறார்கள், என்பதை எடுத்துக்காட்டுகிறது.்
ஒருசில வருடங்களுக்கு முன் எமது சமுதாயத்தில் திருமணமும் வியாபாரப் பொருளாகவே இருந்தது. ஒவ்வொடு பொருளுக்கும் விலையுண்டு. அதேபோல ஆணின் கல்வி தராதரத்திற்கும் உத்தியோகத்திற்கும் விலை கொடுக்கும் சமுதாயமாகவே நாம் இருந்தோம்.
ஆனால் இவ்வாறான திருமண பந்தத்தில் ஈடுபட்டவர்கள் அன்பினால் ஒன்று பட்டு வாழ்ந்தார்களா? என்பது கேள்விகுகுரியதே. இத்தகைய திருமணங்கள்
இன்று புதிய சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
இன்றய திருமணங்கள் electronic மயமாகி Internet வரை வளர்ந்து விட்டது. இன்றய சமுதாய இளையவர்கள் தமது திருமணத்திற்கு அவர்களே பொறுப்பாகிறார்கள். தமக்கு விரும்பியவரை தெரிவுசெய்கிறார்கள். இங்கு எமது மரபில் காலம் காலமாக வந்த சம்பிரதங்களுக்கு இடம் இல்லை. மெய்யான அன்பினால் பிணைந்து கொள்கிறார்கள். ஒரு சில காலம் ஒன்றாக வாழ்ந்து பார்த்தே தமக்குள் உறவு எவ்வாறு உள்ளது என அறிந்து திருமணம் செய்கிறார்கள். மெய்யாகவே காதல் ஜோடியாக வாழ முடியாது என முடிவெடுப்போர் தொடர்ந்து வாழ விரும்பாது பிரிந்தும் போவதையும், பழைமையில் வாழ்த எம் சமுதாயம் படிப்படியக ஏற்று வாழ்கிறது.
ஆகவே பண்படு என்பது, உயிரோட்டமுள்ள நீண்ட பயணத்தில் ஓடும் நதி. அவ்வப்போது பலகிளைகளாக பல்கி பெருகி ஓடும், நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப வளைந்தும் நெளிந்தும் ஓடும். இதுவே வரலாறு எமக்குக் காட்டுவது. “மாற்றம் ஒன்றே மாறாதது”.
No comments:
Post a Comment