உலகச் செய்திகள்

முடிவிற்கு வருகின்றது ஒன்பது வருட பிரதமர் பதவி – பதவி விலகும் அறிவிப்பை வெளியிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ

பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தினையும் கைப்பற்றுவதற்கு டிரம்ப் பொருளாதார பலத்தையா படைபலத்தையா பயன்படுத்துவார்?

இந்தியாவின் சத்தீஸ்கரில் நக்சல் கண்ணிவெடி தாக்குதலில் 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

ஜிம்மி கார்ட்டரின் இறுதி நிகழ்வில் அமெரிக்காவின் ஐந்து ஜனாதிபதிகள் - டிரம்பை அலட்சியம் செய்த கமலா ஹரிஸ்

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது சகோதரன் உயிரிழந்தார்- லொஸ் ஏஞ்சல்ஸ் பெண்

லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ; 30,000 பேர் வெளியேற்றம்



முடிவிற்கு வருகின்றது ஒன்பது வருட பிரதமர் பதவி – பதவி விலகும் அறிவிப்பை வெளியிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ

07 Jan, 2025 | 07:54 AM
image

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது இராஜினாமா குறித்து அறிவித்துள்ளார்.

தனது சொந்த கட்சியினால் அழுத்தங்களிற்குள்ளாகியுள்ள பிரதமர் லிபரல் கட்சி புதிய தலைவரை தெரிவு செய்யும்வரை பதவியில் நீடிப்பேன் என அறிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் நாட்டிற்கு உண்மையான தெரிவு தேவைப்படுகின்றது  என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபரில் கனடாவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினால் அது லிபரல் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்  என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என தெரிவி;த்துள்ளதாக ரொய்ட்டர் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்கணிப்புகள் லிபரல் கட்சி தோல்வியடையும் என தெரிவிக்கின்ற சூழ்நிலையில் கட்;சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரதமர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.

லிபரல் கட்சி மிக மோசமான நிலையிலிருந்த காலத்தில் - நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திலிருந்த காலத்தில் 2103 இல் ட்ரூடோ கட்சியின் தலைமை பதவியை ஏற்றார்.

கனடாவிற்கு இணக்கமான அரசியல் அணுகுமுறையையும் அறிமுகப்படுத்துவதாகவும்  பெண்களின் உரிமையை மேம்படுத்துதல் மற்றும்  காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான போராட்டம் போன்ற வாக்குறுதிகளை முன்வைத்தும் ஜஸ்டின் ட்ரூடோ 2015 இல் லிபரல் கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார்..

ஆனால் ஆட்சியின் ஒவ்வொரு நாள் யதார்த்தம் ஏனைய மேற்குலக தலைவர்களை போல இவரையும் சோர்வடையச்செய்தது.

கொரோனா பெருந்தொற்றை சமாளிப்பதற்கான ட்ரூடோ தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடவேண்டிய நிலை உருவானது.

நுகர்வோரையும் வர்த்தக சமூகத்தினரையும் காப்பாற்றுவதற்காக லிபரல் கட்சி பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் வரவு செலவு திட்டப்பற்றாக்குறை அதிகரித்து வந்தது,விலைகள் அதிகரித்ததால் பொதுமக்களின் சீற்றமும் அதிகரித்தது.

எதிர்வரும் தேர்தல்களில் கட்சி தோல்வியடையலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபகாலமாக வெளியிட்டு வந்த அச்சத்தினை அவர் சமாளித்துவந்துள்ளார்.

இதேவேளை ட்ரூடோவின் நெருங்கிய சகாவான நிதியமைச்சரின் பதவி விலகலை தொடர்ந்து பிரதமரும் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவந்துள்ளன.   நன்றி வீரகேசரி 






பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தினையும் கைப்பற்றுவதற்கு டிரம்ப் பொருளாதார பலத்தையா படைபலத்தையா பயன்படுத்துவார்?

08 Jan, 2025 | 12:05 PM
image

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாiயும் கீறின்லாந்தையும் கைப்பற்றப்போவதாக மீண்டும் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப் சிலவாரங்களிற்கு முன்னர் இதேகருத்தினை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து  இந்த விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமானதாக மாறியுள்ள நிலையில் ஜனாதிபதி மீண்டும் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார பலத்தை பயன்படுத்தி பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தையும் கைப்பற்றுவாரா அல்லது படைபலத்தை பயன்படுத்துவாரா என்ற கேள்விக்கு இல்லை இந்த இரண்டில் ஒன்றைதான் பயன்படுத்துவேன் என என்னால் உறுதியளிக்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பிற்கு பனாமா கால்வாயும் கிறீன்லாந்தும் முக்கியமானவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடாவை கைப்பற்ற முயல்வாரா என்ற கேள்விக்கு பொருளாதார பலத்தை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ள டிரம்ப் இருநாடுகளிற்கும்இடையிலான பகிரப்பட்ட எல்லையை செயற்கையானது என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவை பாதுகாப்பதற்கு அமெரிக்கா பில்லியன் டொலர்களை சேமிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் கனடாவிலிருந்து கார்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதை கண்டித்துள்ளதுடன் கனடா அமெரிக்காவின் ஒரு மாநிலமாக விளங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






இந்தியாவின் சத்தீஸ்கரில் நக்சல் கண்ணிவெடி தாக்குதலில் 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

07 Jan, 2025 | 12:44 PM
image

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சத்தீஸ்கர் காவல் துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டில் மாவட்ட ரிசர்வ் குரூப் (டிஆர்ஜி) என்ற சிறப்பு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் தற்போது 3இ500 வீரர்கள் உள்ளனர்.

டிஆர்ஜி படைப் பிரிவு வீரர்கள்இ வனப்பகுதிகளில் முகாம் அமைத்து நக்சல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு முதல் இதுவரை சத்தீஸ்கரில் 80 சதவீத நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 90-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை சத்தீஸ்கரின் நாராயண்பூர் தண்டேவாடா மாவட்ட எல்லைப் பகுதிகளில் சுமார் 1இ000-க்கும் மேற்பட்ட டிஆர்ஜி படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருதரப்புக்கும் இடையே நள்ளிரவு வரை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 5 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிஆர்ஜி படையின் தலைமை காவலர் சன்னு கரம் வீரமரணம் அடைந்தார்.

அபுஜ்மாத் வனப்பகுதியில் என்கவுன்ட்டர் நடத்திய டிஆர்ஜி படை வீரர்களில் ஒரு பிரிவினர் நேற்று பிஜாப்பூர் மாவட்ட வனப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் காரில் அம்பிலி பகுதியில் அவர்கள் சென்றபோது சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டது. காரில் பயணம் செய்த 8 டிஆர்ஜி வீரர்கள் ஓட்டுநர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து பஸ்தர் பகுதி காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது: கடந்த 3 நாட்களாக மாநில காவல் துறையும் டிஆர்ஜி வீரர்களும் இணைந்து நக்சல் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஒரு பிரிவினர் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு அவர்களின் கார் கண்ணிவெடியில் சிக்கியது. காரின் பாகங்கள் சுமார் 30 அடி தொலைவுக்கு வீசப்பட்டு உள்ளன. சுமார் 25 அடி உயரம் உள்ள மரத்தின் கிளைகளில் இருந்தும் காரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணிவெடி வெடித்த இடத்தில் 10 மீட்டர் ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளன. வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இவ்வாறு ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ கூறும்போதுஇ “நக்சல் தீவிரவாதிகள் விரக்தியில் உள்ளனர். இதனால் கோழைத்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நக்சல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் கூறும்போது “நக்சல் தீவிரவாதிகள் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். உயிரிழந்த டிஆர்ஜி வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் உயிர்த்தியாகம் வீணாகாது. நக்சல் தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் வேரறுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள்இ கண்ணிவெடி நேரிட்ட பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். தாக்குதலுக்கு என்ன வகையான வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து மாநில காவல் துறையிடம் அவர்கள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். முதல்கட்ட விசாரணையில்இ கண்ணிவெடி தாக்குதலுக்கு சுமார் 100 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.   நன்றி வீரகேசரி 





ஜிம்மி கார்ட்டரின் இறுதி நிகழ்வில் அமெரிக்காவின் ஐந்து ஜனாதிபதிகள் - டிரம்பை அலட்சியம் செய்த கமலா ஹரிஸ்

10 Jan, 2025 | 11:26 AM
image

கடந்த மாதம் தனது 100வது வயதில் காலமான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஐவர் ஒன்றாக கூடியிருந்த தருணத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹரிஸும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை புறக்கணித்தனர்.

வொஷிங்டனின் தேசிய கதீட்ரலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது கணவருடன் டொனால்ட் டிரம்புக்கு முன்வரிசையில் காணப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

பராக் ஒபாமாவுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் கமல ஹரிஸை பார்த்தவுடன் மௌனமானார்.

இதேவேளை தொலைக்காட்சி கமராக்கள் தன்னை நோக்கி திரும்பியதால் அசௌகரியமடைந்தவராக காணப்பட்ட கமலா ஹரிஸ் கதீட்ரலின் முன்பக்கத்தை பார்வையிட்டவாறு அமர்ந்திருந்தார்.

கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இருவரும் பொது நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டமை இதுவே முதல் தடவை.

2018இல் ஜோர்ஜ் புஷ்ஷின் இறுதி நிகழ்வின் பின்னர் ஐந்து ஜனாதிபதிகளும் ஒன்றாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளமையும் இதுவே முதல் தடவை. அவ்வேளை ஜோபைடன் துணை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

ஜனாதிபதிகள் கமலா ஹரிஸுக்குப் பின்னால் காணப்பட்ட ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். 

முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்சின் மனைவி கரென் பென்சும் டொனால்ட் டிரம்பை அலட்சியம் செய்தார். தனது கணவருடன் டிரம்ப் கைகுலுக்கியவேளை அவர் ஆசனத்திலேயே அமர்ந்திருந்தார்.

2021இல் ஜோபைடனின் வெற்றியை அங்கீகரிப்பதை மைக்பென்ஸ் தடுக்க முயன்றதை தொடர்ந்து டிரம்புக்கும் அவருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிம்மி கார்ட்டரின் வாழ்க்கையை கௌரவிக்கும் நிகழ்வுகள் ஒரு வாரத்துக்கு மேல் நடந்துவரும் நிலையிலேயே நேற்றைய நிகழ்வு நடைபெற்றது.

நன்றி வீரகேசரி 





காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது சகோதரன் உயிரிழந்தார்- லொஸ் ஏஞ்சல்ஸ் பெண்

10 Jan, 2025 | 12:53 PM
image

கலிபோர்னியாவில் காட்டுதீயினால் ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தனது சகோதரன்  தீயிலிருந்து தனது வீட்டை பாதுகாக்க முயன்றவேளை உயிரிழந்தார் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரனை  விட்டுவிட்டு தான் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தம்  ஏற்பட்ட தருணங்களை அந்த பெண் விபரித்துள்ளார்.

அல்டடெனா பகுதியில் காட்டுதீ வேகமாக பரவத்தொடங்கியதும் தீயணைப்பு வீரர்கள் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மன்றாட்டமாக கேட்டனர் ஆனால் எனது சகோதரன்  அவர்களின் வேண்டுகோளை செவிமடுக்கவில்லை என ஷாரிசோ என்ற பெண் தெரிவித்துள்ளார்.

எனது 66 வயது சகோதரன்  என்னுடன் வசித்துவந்தார், அவர் கடும் உடல்நலபாதிப்புகளை எதிர்கொண்டிருந்த ஒருவர் ,அவர் தான் அங்கேயே தங்கியிருந்து வீட்டை பாதுகாக்க முயலப்போகின்றேன் என தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ள  ஷாரிசோ நான் அவரை அங்கேயே விட்டுவிட்டு வரும் மனதை வருத்தும் முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானேன் என தெரிவித்துள்ளார்.

தீ மிகப்பெரியதாக தீப்புயல் போல காணப்பட்டதால் நான் அங்கிருந்து வெளியேறும் முடிவை எடுக்கவேண்டியிருந்தது,நான் புறப்பட்டவேளை திரும்பிபார்த்தேன் வீடுதீயின் பிடியில் சிக்குண்டிருந்தது நான் அங்கிருந்து வெளியேறவேண்டியிருந்தது எனஅவர் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரனின் உடலை பின்னர் தனது நண்பர் ஒருவர் கண்டெடுத்தார் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

55 வருடங்களாக தனது பெற்றோர் வாழ்ந்த வீட்டை அவர் பாதுகாக்க முயன்றுள்ளார் போல தோன்றுகின்றது என ஷாரிசோ தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 






லொஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ; 30,000 பேர் வெளியேற்றம்

Published By: Digital Desk 3

08 Jan, 2025 | 10:43 AM
image

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயினால் வீடுகள் கருகி நாசமடைந்துள்ளதோடு, போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது.

இதனால் 30,000 பேர் வெளியேறியுள்ளனர்.

கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டயர்) நிலப்பரப்பு தீயினால் எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து வீசும் பலத்த காற்றினால் தீ பரவி வருவதால் ஆபத்து அதிகரித்திருப்பதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டோபாங்கா கனியன் மலைகளில் இருந்து மக்கள் வெளியேறியபோது, தீ அங்கிருந்து பசிபிக் பெருங்கடலுக்கு பரவியதால், ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

லொஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டின் குரோலி தெரிவிக்கையில், 

ஒருவருக்கும் காயம் ஏற்படாததால் இந்த கட்டத்தில் நாங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். 10,000 வீடுகளில் 25,000 க்கும் அதிகமான மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

விமானத்தில் இருந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் இருந்து தண்ணீரை எடுத்து அருகில் உள்ள காட்டுத் தீயை அணைத்தனர். தீப்பிழம்புகள் வீடுகளை சூழ்ந்த நிலையில் புல்டோசர்களினால் கைவிடப்பட்ட வாகனங்களை வீதிகளில் இருந்து அகற்றப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் சூரியன் அஸ்தமனத்திற்கு பின்பு ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் டோபாங்கா கேன்யனுக்கு செல்லும் மலைகளை ஒளிரச் செய்தன.

புகைப்படங்கள் ; GETTY IMAGES - நன்றி வீரகேசரி 






No comments: