நின்றேனும் கொல்லும் தீங்கு (04)….. (திகில் தொடர்)


- சங்கர சுப்பிரமணியன்.


"நல்ல பொண்ணும்மா அதுஎந்த படுபாவியோ நம்ப 

வச்சுகெடுத்துட்டானாம்தற்கொலைங்கறதால 

பிரேதபரிசோதனைசெஞ்சாங்களாம்அப்பத்தான் 

தெரிஞ்சுதாம் அந்த பொண்ணு இரண்டு மாதம் 

கர்ப்பங்கறது"

 

அம்மாவும் தங்கையும் அடுத்த அறையில் இருந்து

பேசியது என்காதில் விழுந்ததுன்னால் அப்போ

ஊமையாய் அழத்தான் முடிந்ததுஅநியாயமாய் ஒரு 

பெண்ணைக் கெடுத்து அவள் சாவுக்கும் காரணமாகி

விட்டோமே என்று நானே என்னை வெறுக்க

ஆரம்பித்தேன்தற்கொலை செய்யலாமா என்று

எண்ணம் எழ என் நண்பன் மதிவாணனிடம் மனம்விட்டுநடந்ததையெல்லாம் சொல்லி அழுதேன்.

 

மதிவாணனும் நானும் சிறு வயதிலிருந்தே மிகவும் 

நெருங்கிய நண்பர்கள்ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி 

வரை ஒன்றாகவேபடித்தோம்அவன் வீடுஎங்கள் வீடு 

மற்றும் ஜானுவின் சிநேகிதி வீடு எல்லாம் சிவாஜி 

நகர் சிவன்செட்டி கார்டன் தெருவில் அருகருகே 

இருந்தனமூன்று குடும்பங்களுமே உறவினர்கள் 

போல் பழகி வந்தோம்.

 

வருடங்கள் உருண்டோடினஎதிலும் ஒரு 

பிடிப்பில்லாமல் பித்து பிடித்தவன் போல் இருந்த 

என்னைப் பற்றி எனதுபெற்றோர் ஒன்றும் புரியாமல் 

திருமணம் செய்து வைத்தால்சரியாகும் என நினைத்து எனக்கு திருமணமும் செய்துவைத்தார்கள்திருமணம் கனவு போல் நடந்து முடிந்ததுப்போது தான் ஒரு 

நாள் வீட்டுக்கு வந்த மதிவாணன்,

 

"சிவாநான் ஆஸ்திரேலியா போகலாம் என முயன்று

வருகிறேன்நீயும் வருகிறாயா?" என்று கேட்டான்.

 

அப்போது அருகிலிருந்த அப்பா,

 

"மதிஅவனை எதுக்கு கேட்டுக்கிட்டு இருக்க.

அப்படியாவது எங்காவது கூட்டிட்டு போஅப்படியாவது 

இவனுக்கு வாழ்க்கையில ஏதாவது பிடிப்பு வருதா 

பாக்கலாம்எப்படிசுறுசுறுப்பா  ஓடி ஆடி இருந்தவன் 

இப்படி நடை பிணம் போலஆயிட்டானே" என்று 

சொல்லி கண்ணீர் வடித்தவர்


"நாங்கள் மனதால் கூட யாருக்கும் தீங்கு ண்ணியது 

கிடையாதேஅப்படி இருக்க இவ்வளவு பெரிய 

துன்பத்தை இந்த பாழாய்ப்போன கடவுள் எங்களுக்கு சாகப்போகும் போகும் காலத்தில்கொடுத்து இப்படி 

வேடிக்கை பார்க்கிறாரே?" என்று சொல்லிமுடித்தார்.

 

வயதான என் பெற்றோருக்கு கொஞ்சமாவது ஆறுதல்கொடுக்கலாம் என்றுதான் திருமணத்துக்கு 

சம்மதித்தேன்.அதிலும் அவர்கள் திர் பார்த்த 

அளவுக்கு நான்மாறிவிடவில்லை என்று அறிந்து 

அவர்கள் படும் வேதனையை குறைக்க அவர்கள் 

பார்வையில் இருந்து வெகுதூரம் சென்றுவிட்டால் 

நல்லது என்று உணர்ந்த நான் மதிவாணனிடம் ஆஸ்திரேலியா வர சம்மதத்தை தெரிவித்து 

மேற்கொண்டு எடுக்க வேண்டிய முயற்சிகளை 

எடுக்குமாறு சொன்னேன்


நான் அப்படிச் சொன்னதும் அப்பாவின் முகத்தில்

கொஞ்சம் நிம்மதியையும் ஒரு மாற்றத்தையும் 

என்னால் காண முடிந்ததுஅப்பா சைப்பட்டதைப் 

போல் இரண்டு வருடங்களுக்கு முன்தான்

ஆஸ்திரேலியாவுக்கு இருவரும் ஒன்றாகவே குடியேறிநான் கிளேட்டனிலும் மதிவாணன் ஓக்லியிலும் வசித்துவருகின்றோம்.


கடந்த மாதம் மதிவாணனின் மாமனார் மாமியார்

மகளையும்மருமகனையும் பார்க்க வந்திருந்தனர்

நேற்று காலை மதியும்அவன் மாமனாரும் அவன் 

மாமனாரின் தூரத்து உறவினர் ஒருவரைப் பார்க்க 

சிட்னி சென்றனர். மாமியாரும் மனைவியும்தனியாக 

இருப்பதால் அவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறு 

என்னிடம் சொல்லி விட்டுச் சென்றிருந்தான் மதி.

நேற்று இரவு எட்டு மணியளவில் என் வீட்டு 

தொலைபேசிஅலறியதுவேகமாகச் சென்று எடுத்தேன்.

 

"ஹலோசிவா பேசுறேன்.

 

"தம்பி சிவாஇங்க என் மக சிவகாமி மயங்கி விழுந்து 

No comments: