August 3, 2024
மன்னார் பொலிஸாரினால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வைத்தியர் அர்சுனா மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து நேற்றிரவு குழப்பத்தை ஏற்படுத்தியதாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை தொடர்ந்து, வைத்தியர் அரச்சுனா கைது செய்யப்பட்டார். மன்னார் வைத்தியசாலைக்கு நேற்றிரவு வைத்தியர் அர்ச்சுனா சென்றதாகவும் அண்மையில் மன்னார் தம்பன்னை குளத்தை சேர்ந்த இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டுக் கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வைத்தியர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி ஈழநாடு
No comments:
Post a Comment