ஆனந்த விகடன் வார இதழில் நாவல்களையும், வெளிநாட்டு பயணக்
கதைகளையும் எழுதி புகழ் பெற்றவர் மணியன். இவரது கதைகளுக்கு ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருந்தார்கள்.இவர் போகாத நாடுகளே இல்லை என்று சொல்லும் விதத்தில் பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இந்த மணியன் எதோ ஒரு விதத்தில் எம் ஜி ஆருடன் தனது உறவை பலப்படுத்திக் கொண்டார். எம் ஜி ஆரின் சொந்தப் படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாடுகளில் படமாகுவதற்கு மணியனின் வெளிநாட்டு தொடர்புகள், உதவிகள் பெரிதும் பயன் பட்டன. அதே போல் எம் ஜி ஆரின் ஜோதிட ஆலோசகராக திகழ்ந்தவர் வித்துவான் வே . லஷ்மணன். எம் ஜி ஆருடன் இவரை அடிக்கடி காணலாம்.
மணியன், லஷ்மணன் இருவரும் எம் ஜி ஆரின் குட் புக்சில் இருந்ததால் அவர்களுக்கு உதவ எண்ணிய எம் ஜி ஆர் திடுதிடுப்பென்று இருவரையும் படத் தயாரிப்பாளர் ஆக்கி விட்டார். இதன் காரணமாக உதயம் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் உதயமானது. முதல் தயாரிப்பாக எம் ஜி ஆர் நடிப்பில் இவர்கள் தயாரித்த இதய வீணை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த படத்தையும் எம் ஜி ஆர் நடிப்பில் தயாரிக்கத் தொடங்கினார்கள் மணியன், லஷ்மணன் இருவரும். அப்படி உருவான படம் தான் சிரித்து வாழ வேண்டும்.
சிறு வயதிலே கொலைகாரன் ஒருவனின் துப்பாக்கி சூட்டில் பெற்றோரை இழந்து விடும் ராமு , வளர்ந்து பெரியவனாகி போலீஸ் அதிகாரியாகிறான். தீயவர்களுக்கு சிம்ம சொப்பனமுமாகிறான். இந் நிலையில் ராமுவுக்கும், ரஹ்மான் என்ற தாதாவுக்கும் இடைடையில் மோதலில் ஆரம்பமாகும் தொடர்பு நட்பில் முடிகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டரான ராமுவின் வேண்டுகோளை ஏற்று தனக்கு இலாபம் தந்த சூதாட்ட விடுதியை இழுத்து மூடி விட்டு ஆட்டோ சாரதியாகிறான் ரஹ்மான். ராமுவோ கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவன் நாகராஜை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவனின் சதித் திட்டத்துக்கு பலியாகி சிறை செல்கிறான். அவனின் போலீஸ் பதவியும் பறி போகிறது. தன்னுடைய காதலி மாலாவை ரஹ்மான் பாதுகாப்பில் விட்டுச் செல்லும் ராமு , சிறையில் இருந்து மீண்டு, மீண்டும் கடத்தல் தலைவனை பிடிக்க தீவிரமாக முனைகிறான். அதற்கு ரஹ்மானும் , மாலாவும் உதவுகிறார்கள்.
இப்படி அமைந்த இப் படம் ஹிந்தியில் வெளிவந்த சங்ஜீர் என்ற
வெற்றி படத்தை தழுவி எடுக்கப் பட்டிருந்தது. எம் ஜி ஆர் படம் என்பதால் கதையில் சில மாற்றங்களை செய்திருந்தார்கள். அமித்தாப் பச்சன் , ஜெயபாதுரி, பிரான் நடித்த இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெகடராக அமிதாப்பும் , சூதாட்ட விடுதி நடத்துபவராக பிரானும் நடித்திருந்தார்கள். ஆனால் தமிழில் இவ் இரண்டு வேடங்களையும் எம் ஜி ஆரே ஏற்று நடித்திருந்தார். இன்ஸ்பெக்டர் வேடத்தை விட ரஹ்மான் வேடத்தில் எம் ஜி ஆரின் நடிப்புத் திறன் வெளிப்பட்டது எனலாம். ஆரம்பத்தில் அவர் அறிமுகமாகும் ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல் ரஹ்மானாம் பாடல் காட்சியே தூள் கிளப்புவதாக அமைந்தது. தொடர்ந்து எம் ஜி ஆரும் , எம் ஜி ஆரும் மோதும் சண்டைக் காட்சி விறுவிறுப்பாக இருந்தது. போலீஸ்காரர் எம் ஜிஆருக்கு லதா ஜோடியாக இருக்க , ரஹ்மான் தனி அவ்வர்த்தனம் வாசித்து ரசிகர்களை கவருகிறார்.

ராமுவாக வரும் எம் ஜி ஆர் கண்களில் கோபத்தை காட்டுகிறார், உதவி கேட்டவருக்கு உதவுகிறார் , அதனால் சிறை செல்கிறார் , இவற்றுக்கு மத்தியில் லதாவை காதலித்து டூயட்டும் பாடுகிறார். கத்தியை தீட்டும் பெண்ணாக வரும் லதா நல்ல துரு துரு. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடலில் வித விதமாக ஆடையணிந்து வந்து கவருகிறார். படம் முவதும் வரும் ஒரே பெண் வேடம் இவர் மட்டும் தான்.
நம்பியாருக்கு மிக பொருந்தும் வில்லன் வேடம். ஆவேசப் படாமல் கூலாக நடித்திருந்தார். தேங்காய் சீனிவாசன் வரும் கட்சி கலகலப்பாக இருக்கிறது. ஐசரி வேலன் கூடவே வருகிறார். ஆர் எஸ் மனோகர், வி கோபாலகிருஷ்ணன், எல் . காஞ்சனா, வி எஸ் ராகவன் , எஸ் வி ராமதாஸ், திருச்சி சௌந்தர்ராஜன், ஜஸ்டின், ஆகியோரும் நடித்திருந்தனர்.
சலீம், ஜாவேத் எழுதிய கதைக்கு ஆர் கே சண்முகம் வசனங்களை
எழுதியிருந்தார். பாடல்களை வாலி, புலமைப்பித்தன் எழுத எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஜமாய்த்திருந்தார். சியாம் சுந்தர் அமைத்த சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தன. ஒளிப்பதிவை ஏ சண்முகம் மேற் கொண்டார். எம் உமாநாத் படத் தொகுப்பை கவனிக்க, அங்கமுத்து அரங்க அமைப்பை பிரமாதமாக அமைத்திருந்தார்.

புதிதாக அரசியல் கட்சியை தொடங்கி இருந்த எம் ஜி ஆர் மத ஒற்றுமை, தீய சக்திக்கு எதிரான போர், நட்புக்கு இலக்கணம், என்று தேவையான விஷயங்கள் படத்தில் இடம் பெறுமாறு பார்த்துக் கொண்டார். ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் முஸ்லீம் எம் ஜி ஆர் தொழுவதும், ஹிந்து லதா முருகனை வணங்குவதுமான காட்சி அருமை. ஒரே இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருக்க கூடாது. இருந்தால் விவாதம் தான் நடக்கும் , அதனால்தான் நான் என் தலைவனை தீர்த்து கட்டி விட்டு தலைவனாகி விட்டேன் என்று நம்பியார் சொல்வது நல்ல பன்ச்!
ஜெமினி பட நிறுவனத்தின் அதிபரும், ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ் எஸ் பாலன் நிதியுதவியில் தயாரிக்கப்பட்ட படம் என்பதாலோ என்னவோ பலனையே படத்தை இயக்கும் படியும் விட்டு விட்டார்கள். ஹிந்தியில் இருந்து தமிழாக்கும் வேலையை சிரமமின்றி அவரும் செய்து விட்டார். எம்ஜிஆரும் ஒன்றுக்கு இரண்டு வேடங்களில் நடித்து படத்தை வெற்றி பெற செய்து விட்டார். பின்னர் என்ன எல்லோரும் சிரித்து வாழ வேண்டும்!
No comments:
Post a Comment