-சங்கர சுப்பிரமணியன்.
பள்ளி சென்ற நாள்தொட்டு படித்து
வந்த சிந்துபாத் கதையைப் போல
பல ஆண்டுகளாய் பவணிவந்த
தொடராம் கடல்புறாவைப் போல
மதரைத் திரையரங்கில் மதுரைவீரன்
திரைப்படம் வரலாறு படைத்ததுபோல
சிறுவயது நண்பர்களின் வாழ்வினை
சொல்லிய அகல்விளக்கைப் போல
நிலையுறா நிலையினை நிலைத்துமே
வைத்திட பயனுறு செயலில் பயணித்திட
நிலையிலா வாழ்வினில் புகழ் மட்டும்
நிலைக்குமென நிறையுடை மாந்தரும்
நினைத்து சொரிந்திடும் செரிந்த செயலும்
அணைவதும் எரிவதும் அதனதன் வழியே
பழுத்த இலைகள் பலவும் உதிர்ந்திட
குருத்தாய் எழும்பியவை குவலயம் காணும்
அனைத்து அழியுமென அருங்கதை சொல்ல
பற்றும் பறந்து போகுங்கால் அறிவரோ
எழுத்ததும் வந்து ஏது செய்யுமென அறிந்தால்
பழுத்த நிலைவந்தும் பயண முடிவறியாரோ
இழுத்த இழுப்பில் இயங்கிடம் இவ்வுலகில்
வெளுத்த உண்மை அறியாதோர் அறியாரோ
No comments:
Post a Comment