டொனால்ட் லூவின் கவனத்துக்கு…!

 May 15, 2024


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூவின் இலங்கை வருகை
உணர்வுபூர்வமான காலப்பகுதியில் நடைபெற்றி ருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று பதினைந்து ஆண்டுகளாகின்றன. மே-19இற்கான உணர்வுடன் தமிழ் மக்கள் கலந்திருக்கின்றனர். அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள்சார் கரிசனை அடிப்படையானது. அமெரிக்காவின் தலையீடுகளை அதன் புவிசார் அரசியல் நலன்களிலிருந்து பிரித்து நோக்கமுடியாது.
எனினும், மனித உரிமைகள்சார் விழுமியங்களை உலகளவில் பாதுகாப்பதில் அமெரிக்காவுக்கு முதன்மையான பங்குண்டு.
இறுதியுத்தம் மோசமான அழிவுகளுடன் முற்றுப்பெற்றதைத் தொடர்ந்து யுத்தத்தின்போதான மனித உரிமைகள்மீறல் விவகாரம் உலகளவிலான பேசுபொருளானது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2012இல் ஒபாமா நிர்வாகம் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியு றுத்தி ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கைமீதான பிரே ரணைக்கு ஆதரவளித்தது. அன்றைய சூழலில் அமெரிக்க ஆதரவுப் பிரேரணை என்றே அது பரவலாக அழைக்கப்பட்டது.
அமெரிக்காவின் தலையீடு இல்லையென்றால் அவ்வாறானதொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்காது. இந்தப் பின்புலத்தில் நோக்கி னால் இலங்கைமீதான மனித உரிமைகள்சார் அழுத்தங்களுக்கான பிள்ளையார் சுழி 2012இல்தான் இடப்பட்டது. அப்போதிருந்த சீன சார்பு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அமெரிக்க அழுத்தங்களை பொருட்படுத்த வில்லை.
மேலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் மேற்குலகத்துடன் ஒத்துழைக்கவும் மறுத்தது. அன்று ஆரம்பிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான அழுத்தங்கள் இன்றுவரையில் தொடர்கின்றது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் – இந்த அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நீதி விவகாரத்தில் ஒரு சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பேச்சுகளி லும் அறிக்கைகளிலுமே காலம் செலவழிந்திருக்கின்றது. இந்த அடிப்படை யில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் அமெரிக்க அழுத்தங்கள் தோல்வியுற்றிருக்கின்றன.
வல்லரசுகளின் தலையீடுகள் அவர்களின் நலன்சார் அரசியல் ஆட்டங் களுடன் தொடர்புடையவை என்னும் விமர்சனம் உண்டு. இருந்த போதிலும்கூட, ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இப்போதும் சர்வதேச மனச் சாட்சி தொடர்பான நம்பிக்கை முற்றிலுமாக இல்லாமல் போய்விட வில்லை. மேற்குலக அழுத்தங்கள் தொடர்பில் ஈழத் தமிழ் மக்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் நம்பிக்கையுடன்தான் இருக்கின்றன.
அமெரிக்காவை, இந்தியாவை – மேற்குலகை நம்புவ தைத்தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னால் வேறுதெரிவுகள் எவை யும் இல்லையென்பதுதான் கசப்பான உண்மை – எனினும், தமிழ் மக்கள் தங்களால் முடிந்தளவு ஜனநாயக முறையில் போராடி வருகின்றனர். இந்தவிடயங்களை டொனால்ட் லூ அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வல்லரசுகளின் மூலோபாய போட்டிகளுக்கு மத்தியில் ஒரு சிறிய தேசிய இனத்தின் நீதிக்கான ஒப்பாரி கரைந்தழிந்துவிடக்கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் மறுப்பு மட்டுமல்ல. கூடவே, அமெரிக்காவின் மனித உரிமைகளுக்கான அழுத் தங்களின் தோல்வியுமாகும்.
யுத்தம் முடிவுற்று பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்கூட – ஆகக் குறைந்தது அரசமைப்பில் உள்ள ஏற்பாடுகளைக்கூட முழுமையாக அமுல்படுத்துவதற்கு தயாரற்ற அரசியல் சூழலொன்றே இலங்கைத் தீவில் நிலவுகின்றது.
மாகாண சபைகள் தேர்தலை தொடர்ந்தும் அர சாங்கம் பிற்போட்டுக்கொண்டு வருகின்றது. எனவே, இலங்கையின் ஆட்சியாளர்களை வெறுமனே பொருளாதார மீட்சியின் ஊடாக மட்டும் நோக்குவதிலுள்ள பொருத்தப்பாடின்மையையும் அமெரிக்கா கருத்தில் கொள்ளவேண்டும்.   நன்றி ஈழநாடு 

No comments: