விபுலானந்த அடிகளாருக்கு
அவுஸ்திரேலியாவிலே (குறிப்பாகச் சிட்னி நகரிலே) முதன் முதலாக 26 – 04 – 2015ல்
எடுக்கப்பெற்ற பெரு விழாவை – நினைவு கூருகிறோம்!
விபுலானந்த அடிகளாரின்
நூற்றாண்டு நிகழ்வுகள் எங்கும் நடைபெற்று வருகின்றவேளை சிட்னியிலே நடந்தேறிய பெரு
விழா வர்ணனையை சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளது
முதல்- முதலாக விபுலானந்த அடிகளாருக்குத் தமிழ் வளர்த்த சான்றோர் விழா மூலம் சிட்னியிலே எடுத்த பெரு விழாவிற்கு அனுசரணை வழங்கிய பெருமை உலக சைவப் பேரவை(அவுஸ்திரெலியா) அமைப்பையே சாரும். தமிழ் வளர்த்த சான்றோர் விழா வினை 2013ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் செவ்வனே வெற்றிகரமாக ஒழுங்குசெய்துவரும் விழா அமைப்பாளர் கலாநிதி பாரதி இளமுருகனார் என்பது யாவரும் அறிந்ததே!
உத்தமனார் உறைவதற்கே உள்ளமென்ற கமலம் உகந்த தென்று பாடி நற்றமிழர் போற்றி வந்த நாடகமும் இசையும் நலியாது காத்திட யாழ்நூல் தந்தவர் மீன்பாடும் மட்டுநகர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். விபுலானந்த அடிகளாளுக்கு அவுஸ்திரேலியாவிலே குறிப்பாகச் சிட்னி நகரிலே முதன் முதலாக பெரு விழா எடுத்தது சரித்திரப் பிரசித்தி பெற்ற சிறப்பு நிகழ்வாகும். அருள்மிகுதுர்க்கைஅம்மன்வளாகத்தில்அமைந்துள்ளதமிழர்மண்டபத்தில்அவைநிறைந்ததமிழ்அன்பர்களுடன்கோலாகலமாகவும்வெற்றிவிழாவாகவும் இந்த விழா நடைபெற்றது.
இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக
இந்த மாபெரும்விழாவிலே இளைஞர்கள்
இருவர் சிற்றுரை ஆற்றியிருந்தனர். ‘
பல்வைத்தியகலாநிதி
பாரதி இளமுருகனார் அவர்களின் கவிதை
கைமலிந்த கலையேடும் யாழும் கொண்ட
கலைமகளின் கடாட்சம்பெற்(று) உயர்ந்த செம்மல்
மெய்யுருகச் செந்தமிழிற் கவிப டைத்தார்
வித்தகனார் யாத்திட்ட செய்யுள் யாவும்
தெய்வமணம் கமழுமையா! செந்தண்மை விஞ்சத்
திருப்பொலியும் அந்தணனாய் ஈழ நாட்டிலே
செய்ததிருப் பணிகளெலாஞ் செப்ப வென்நேரம்
சிறிதும்பற் றாதேயவர் திருத்தாள் போற்றி!
ஓப்பரிய ஆய்வாளன் உணர்ந்தெமக்கு அன்றொருநாள்
‘உத்தமனார் உறையுமிடம் உள்ளத்துக் கமல’மெனச்
செப்பிநின்றார் சித்தமுமோர் சிவமென்று போற்றிடுவர்
சீர்த்திமிகு இசைக்கலையும் செம்மைமிகு நாடகமும்
எப்பொழுதும் இளமையொடு எழிலோடு மிளிர்ந்திடவே
இறவாத நூலெனவே ஈய்ந்திட்டார் யாழ்நூலை தப்பாது
விழாவெடுத்துத் தரணிக்குச் சாற்றிடவே
தகைமைமிகு உலகசைவப் பேரவையும் முனைந்தவே!
அமிழ்தமன்னதாய்மொழியிற்புலமைபெற்று
அருங்கலைகள்பலகற்று
ஐயந்தெளிந்து
தமிழ்கமழும்நறுஞ்சொல்லாம்மலர்கள்தேர்ந்து
தமதுமொழிக்கன்னிக்குஆரமாய்ச்சூட்டி
புகழ்கமழும்மட்டுநகர்போற்றிவாழ்த்தப்
புனிதமிகுயாழ்நூலைப்புவிக்களித்துத்
திகழ்ந்திட்டபெருந்துறவிவிபுலானந்தன்
செயற்கரியதிறம்போற்றிநினைவுகூர்வாம்!.
மருளகற்ற வழிசமைத்த நாவலன் வழியில்
மாண்புடனே பணிபுரிந்து இறையை உள்ளத்(து)
அருள்விரிக்கும் கமலத்தால் அர்ச்சித் தானை
ஆகமசித் தாந்தமெலாம் ஆய்ந்து ணர்ந்து
பொருள்விரிக்கப் பலநூல்கள் யாத்திட் டானை
பொருவரிய தேனாடாம் மட்டு நகரின்
இருளகற்றும் இளம்பரிதி போன்று உதித்த
ஈழத்து அடிகளாரை நினைவு கூர்வாம்.
வெள்ளைநிற மல்லிகையோ வேறு பூவோ
விரைவாக வாடிவிடும் விமலன் அந்தோ?
எள்ளளவும் வாடிடாது நின்றி லங்கும்
இன்மனத்தோர் புடமிட்டு அன்பால் வளர்த்த
கள்ளமில்லா வெண்மைமிகு உள்ளம் என்னும்
கமலமன்றோ விரும்புமலர் என்று கூவிக்
கொள்ளைகொண்டு சைவர்மனம் குடிகொண் டானைக்
கூப்பியிரு கைகொண்டு வணங்கு வோமே!
செல்வி யதுகிரி லோகதாசன் அவர்கள் இன்னிசை வழங்கும் காட்சி
அவையினரை மகிழ்விக்க மதுரமிகு தமிழ்மொழியை
மகிழ்ந்துகற்று மாநகராம் சிட்னியிலே வதிவோர் மெச்சும் யதுகிரி லோகதாசன் அவர்களின்
அருமையான இன்னிசைக்கச்சேரி 30 நிமிடங்களுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.. பலபாடல்களையும் பாடிய அவர்
விழாஅமைப்பாளர் கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள்
விழாவிற்கென இயற்றிய கவிதை ஒன்றிற்கும் தானே இசை அமைத்து அருமையாகப் பாடி
எல்லோரையும் மகிழ்வித்தhர். திருமுறையிலிருந்து
இரு பாடல்களையும் பாட அவர் மறக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்
உலகசைவப் பேரவையின் செயலாளர் திரு நாராயணன் அவர்கள் விழாவின் வெற்றிக்கு
உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நன்றிஉரை கூறினார்.
. உலகசைவப்பேரவை அவுத்திரேலியாவின் தலைவர் திரு மா அருச்சுனமணிஅவர்கள்
தனது உரையை ஆற்றியதைத் தொடர்ந்து கௌரவ பேச்சாளராக இலங்கையிலிருந்து வருகை
தந்திருந்த செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களை அறிமுகம் செய்து
வைத்தார்.
அறிமுகம்செய்யும்பொழுது“நம்மிடையேயும்ஓர்தமிழ்விவேகானந்தர்இருக்கிறார்”என்றுசெஞ்சொற் செல்வரின் பலதரப்பெற்ற பணிகளையும் பெருமையுடன் கூறி அவருக்குப் புகழாரஞ்சூட்டினார்;
பிரதம சிறப்புப் பேச்சாளர் கலாநிதி திரு ஆறு திருமுருகன் அவர்கள் சொற்பொழிவாற்றுகிறார்.
திரு ஆறுதிருமுருகன் அவர்கள் தனது அற்புதமான உரையை இவ்வண்ணம் ஆரம்பித்தார்
“ எல்லாம்வல்ல பரம்பொருளின் திருவடிகளை மனத்திலே
நினைத்துப் பிரார்த்தித்து .. இந்த இனியவிழாவிற்குத் தலைமைதாங்குகின்ற
உலகசைவப்பேரவை அவுத்திரேலியாகிளையின் தலைவர் அவர்களே! எங்கள் அன்பிற்கும்
மதிப்பிற்கும் உரிய கவிஞர் கலாநிதி பாரதி அவர்களே! துர்க்கைஅம்பாள் ஆலயத்தின்
தாபகர் மதிப்பிற்குரிய திரு மகேந்திரன் அவர்களே! என்னை இந்தநிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்து அழைத்து வந்த திரு ஈழலிங்கம் அவர்களே! சபையிலே இருக்கின்ற பேராசிரியர்
திருமதி ஞானா குலேந்திரன் அம்மையார் அவர்களே! மிகஅற்புதமாக இந்த மேடையிலே பாடி
எங்கள் எல்லோரையும் மகிழ்வித்திருக்கின்ற அன்புச்சகோதரி அவர்களே! சான்றோர்
பெருமக்களே! உங்கள் எல்லோருக்கும் எனது பணிவான அன்பு வணக்கம்”என்று எல்லோரையும்
வரவேற்றபின் தனது உரையை ஆரம்பித்தார்-
திரு ஆறுதிருமுருகன் அவர்கள் பேசுகையில் “நல்ல ஒரு இசைநிகழ்ச்சியை நீங்கள் இரசித்த பின்பு எல்லோரும் எழுந்து போய்விடுவீர்கள் – சான்றோரைப்பற்றி நான்சற்றுப் பேசிவிட்டு அமர்ந்துவிட வேண்டும் போல்நான் நினைத்தேன். ஆனால் சான்றோர்மீது வைத்திருக்கும் பற்றின்காரணமாக நீங்கள் எல்லோரும் அப்படியே இருப்பதைக்கண்டு நான்மிக மகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஆரம்பித்த அவர் ‘திருவள்ளுவர் சான்றோர் என்ற சொல்லை அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார். யாரோடு சேர்த்துப் பயன்படுத்தி இருக்கிறார் என்றால்
“ஈன்றபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட
தாய்”
ஒருதாய் தன்னுடைய பிள்ளையினுடைய ஆற்றலைக்கண்டு
பெருமைப்படுவதை – சான்றோனாக அவையிலே இருக்கும் காட்சியைக்கண்டு ஒருதாய்
பெருமைப்படுகிறாள். பரிமேலழகர் அதற்கு உரைஎழுதினார். சான்றோர் என்ற சொல்லுக்கு
என்னபொருள் என்றுவிரித்தார். சான்றோர் என்றால் சால்புடையவர். அறிவு – பக்குவம் -
நிதானம் என்று சான்றோருக்கு விளக்கம்
சொல்லி விரித்துக்கொண்டார். டாக்டர்வரதராசன் அவர்கள் சான்றோருக்கு விளக்கம்
சொன்னார்கள்.சான்றோர் என்றால் அறிவுமட்டும் போதாது அவர் பிறர்க்குப் பயனுடையவராக
வாழ்பவர்தான் சான்றோர்
“நயனொடுநன்றிபுரிந்தபயனுடையார்
பண்புபாராட்டும்உலகு” என்று திருவள்ளுவர் இன்னொரு இடத்தில் சொல்லி
இருக்கிறார். ஒரு நல்லகாரியம் செய்தவர் – இந்த உலகத்திற்கு நன்மை செய்தவர்கள்
என்றைக்கும் பாராட்டப்படுவார்கள் என்பதை – தேசம் தாண்டி கண்டம்தாண்டி
இன்றைக்கு திருவி. க விற்கும் விபுலானந்த
அடிகளுக்கும் நீங்கள் விழா எடுக்கிறீர்கள் என்றால் அவர்கள் சான்றோர்கள்தான்.
நயனுடன் நன்றிபுரிந்த பயனுடையார் பண்புபாராட்டும் உலகு
என்றார். யார் பண்புடையவர்களைப் பாராட்டுகிறார்களோ அவர்கள் பாய்க்கியசாலிகள்
மட்டுமல்ல. அவர்களும் உயர்ந்த பண்புடையவர்கள் என்று இந்தச் சமூகம் போற்றும். எனவே
இந்தவிழாவை ஏற்பாடு செய்த உங்கள் அத்தனை பேர்களின் திருவடிகளைப் போற்றுகிறேன்.
தமிழுக்கு இந்த உலகத்தில் தொண்டுசெய்தவர்கள் இறப்பதில்லை என்று திருவள்ளுவர்
சொன்னார். சாதாரணமக்கள் இறந்து விட்டால் -
முதலாவது நினைவாஞ்சலி! பிறகு இரண்டாவது நினைவாஞ்சலி! பிறகு மோட்ச அருச்சனை!. பிறகு
யாருமே ஒன்றும் செய்வதில்லை. ஆனால் திருவி.கவுக்குப் பாரதி என்ன முறையிலே சொந்தம்? விபுலானந்த அடிகளார்
உலகசைவப் பேரவைக்கு எந்தவகையில் சொந்தம்? இவர்கள் எல்லாம் எம்சொந்தம் என்று சொல்வதில் எமக்குப்
பெருமகிழ்ச்சி.. நாங்கள்திருவி க வின்ஆட்கள் விபுலானந்தரின் ஆட்கள் பாரதியின்
ஆட்கள் இப்படிச் சொல்வதிலே எங்கள்
தமிழ்ச்சந்ததிக்குப் பெருமை அந்தப் பெருமையை நீங்கள் பேணுவதைக்கண்டு நான்
மகிழ்ச்சிடைகிறேன்.
இவர்கள் இறக்கவில்லை. ஏன்இறக்கவில்லை? காலத்திற்கு ஒவ்வக்கூடிய
காரியங்களைச் செய்தார்கள். எப்படி இறந்தவர்கள் என்று சொல்வது?அவர்கள் வாழ்கிறார்கள்.
சாகாப்பெருவாழ்வு பெற்ற சான்றோர் இவர்கள். இன்னும் வாழ்வார்கள் இன்னும் எத்தனையோ சந்ததிகள் இவர்களைச்
சொல்வதனால் வாழும்.
இந்த உலகத்திலே;
“ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்” என்றார் வள்ளுவர்.
உலகத்திற்குப் தொண்டு செய்பவர்கள் இறப்பதில்லை.இவர்கள்
இறக்கவில்லை. ஏன்இறக்கவில்லை
திருவி க வை நினைக்கிறீர்கள் - விபுலானந்தரைநினைக்கிறீர்கள் சேக்கிழாரைப்; போற்றுகிறீர்ககள். ஆதலால்
இவர்கள் இறக்கவில்லை.” என்றார்.
விபுலானந்த அடிகளாரைப்பற்றி பேசவிழைந்த
செஞ்சொற்செல்வர்
v அடிகளாரை எப்படி மட்டக்களப்பில் தினமும் மலர்அணிவித்து
வணங்குகிறார்கள்…..
v எப்படி விஞ்ஞானப் படிப்பை
மேற் கொண்டார்?.........
v சிவத்திரு யோகர்சுவாமிகள் அடிகளாருக்குச் சொன்ன
அருள்வாக்கு!.....
v இராமநாதன் கல்லூரியில்
சற்சங்கம்….
v அதேபோல ஒருகல்லூரியை
மட்டக்களப்பில் கட்டிய செய்தி…
v அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில்அன்னியரின்கொடியை
ஏற்றுவதற்குக் கண்டனம் தெரிவித்த ஒரே
அடிகளார்
v இராமகிருஸ்ண சங்கத்தில்
ஆற்றியசேவை
v சிவபிரான் பெயரால்
சிவானந்த குருகுலம் –
v சிவானந்த
வித்தியாலயம் அமைத்தவரலாறு….
v அடிகளாருக்குப்
பேராசிரியர்ச ண்முகதாசனின் புகழாரம்…
இப்படிப் பலவிதமாக விபுலானந்த அடிகளாரைப் பற்றிப் பல
சிறந்த செய்திகளைப் பேசிய ஆறுதிருமுருகன் அவர்கள் நிறைவிலே
“விபுலானந்தர் இறக்கவில்லை! திரு.வி.க இறக்கவில்லை!. நீங்கள் இந்தத் தமிழ் விழாவைச்
செய்வதாலே உலகச்சைவப் பேரவையும் டாக்டர்பாரதி போன்றவர்களின் இந்தப்பணியும்
இறக்கமாட்டாது! இறக்கக்கூடாது.!!
என வாழ்த்தித் தனது நீண்ட அற்புதமான உரையை நிறைவுசெய்தார். பலசெய்திகளை மிகவும் சுவைபட நகைச்சுவை ததும்பச்
சொல்லி அவையினரின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்டவர் திரு ஆறுதிருமுருகன் அவர்கள்.
>Thiru Vi Ka (Speech at
SanroorVizha at Dhurgai Amman Temple) (64 min)
>https://www.youtube.com/watch?v=f0xPXnHaIZg
கவிஞர் நந்திவர்மன் அவர்கள் திருவி.கவைப்ப்பற்றித்தான் இயற்றிய
சிறப்புக் கவிதையைப் படித்தமை நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
விழா நிகழ்ச்சியை மிகவும் அழகாகத்
தொகுத்து வழங்கிய திருமதிசௌந்தரிகணேசன் அவர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. நிகழ்ச்சி இறுதிமட்டும் பொறுமையுடன் இலக்கிய நிகழ்ச்சிஒன்றில் அவையோர் இருந்தமை எல்லோரையும் கவர்ந்தது. தேவார புராணத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
……… உங்கள் யசோதா
No comments:
Post a Comment