அறிவை வளர்க்கும் நூல்களை படிக்க வேண்டும். சில சமயம் பெற்றோர் கல்வி அறிவு அற்றவவரர்கள் ஆக இருந்த போதும் அவர்கள் அறிவின் அவசியத்தை உணர்ந்தவர்கள் ஆக இருந்தார்கள். அதனால் அந்த பிள்ளைகளை அவர்களால் நல்வழியை காட்ட முடிகிறது. அண்ணனும் நானும் எமது தாயாருடன் அரசால் வசதி அற்றோருக்கு வழங்கும் வீட்டில் தயாருடன் வாழ்ந்தோம். உணவு பற்றாக்குறை இருக்கவில்லை. இவற்றை எல்லாம் சமாளிக்க எமது தாயார் பட்ட கஷ்டத்தை விளங்கும் பருவம் இல்லை நமக்கு. இதை சமாளிக்க எமது தாயார் மூன்று வீடுகளில் வேலை செய்தார்.
நானும் சகோதரரும் பாடசாலை போவது மாலை foot ball விளையாடுவது, வீடு திரும்பியதும் டிவி பார்ப்போம். வேறு எதுவும் செய்ய வேண்டும் என நமக்கு தெரியாது TV எல்லா சேனல்களிலும் என்ன நேரம் எது வரும் என எமக்கு அத்துப்படி. எமக்கு பிடித்த Cowboy படம் பார்த்து அதே போல் குதிரை ஓடி விளையாடுவோம். எமக்கு தந்தை என ஒருவர் வீட்டை விட்டு போய் பல வருஷமாகிவிட்டது அதனால் கண்டிப்பு கிடையா அதிர்ஷ்டசாலிகள் நாம்.
1961 ஆண்டு நான் ஐந்து வயது, படித்துக் கொண்டிருந்தேன். எனது பாடசாலை புள்ளிகள் குறைவாக இருந்தது. இது பற்றி நான் கவலை ப்படவில்லை. எனது தாயார் இந்த வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். எனது புள்ளிகள் அவரை ஆட்டிவிட்டது.. இத்தனைக்கும் எனது தாயார் மூன்றாம் வகுப்பு வரை படித்திருந்தார். நாம் பையன்கள் அவரை தப்பு கணக்கு போட்டு விட்டோம் நாம் நினைப்பதை விட அவர் புத்தி கூர்மை உடையவராக இருந்தார். அவர் வேலை செய்யும் இடங்களில் புத்தகங்கள் பார்த்துள்ளார். அவர் வீட்டிற்கு வந்த வேகத்தில் டிவி வயரை பிடுங்கி அறிந்தார் எங்கள் இருவரையும் இருக்கச் சொல்லி பிள்ளைகளே இன்றிலிருந்து நீங்கள் சில காரியங்கள் செய்ய போகிறீர்கள். நீங்கள் வாரம் இரு புத்தகத்தை படித்து எனக்கு எழுதி காட்ட போகிறீர்கள். அவரோ விடுவதாக இல்லை, மாலை வந்ததும் உங்களை நூல் நிலையம் அழைத்து போகிறேன் என்றார். மறுநாள் அண்ணாவும் நானும் வேறு வழி இன்றி அவரது கட புட என ஒலி எழுப்பும் காரில் ஏறி public library க்கு செல்லத் தொடங்கினோம். நான் சிறுவர் நூல்களை புரட்ட ஆரம்பித்தேன், எனக்கு மிருகங்களை பிடிக்கும் சிறிய மிருகம் தொட்டு எனது ஆர்வம் பெரிய மிருகம் Dinosaur எனவி்ரிய ஆரம்பமானது.
இந்த பாதையில் நான் பயணத்தை தொடர என்னை சுற்றி பல மாற்றங்கள் நிகழ்ந்தன, எனது ஆசிரியர் எனது மாற்றத்தை கவனிக்க தொடங்கினர். நாம் எழுதிய குறிப்பு வாசிக்கும் அறிவு கூட எமது தாயாருக்கு இருக்கவில்லை என அறிய எமக்கு பல காலம் ஆகியது.
இன்று என் அண்ணா ஒரு enginneer, நான் Chief of paeddiatric neuro sssurgeon at John Hoppkins Childrion Hospital என்கிறார் Dr Ben Creson.
இன்று என் வாழ்வை பின்னோக்கி பார்க்கையில் பின் தங்கிய மாணவனாக இருந்தேன் பின் Yala Universsitty scholarship. இன்று என் வாழ்க்கையை என்னால் நம்ப முடியாமல் உள்ளது. பின்னோக்கி பார்க்கையில் பின் தங்கிய மாணவனாக public school இல் இருந்து அதன் பின் Yala University scholarship இணைத்தது. பின் University of Michigan Medical School, கடைசியாக இன்று நான் வகிக்கும் பதவி, இந்த உதவியால் நான் உலகம் பூராவும் சுத்தி மிகவும் நுட்பமான surgery செய்வதுடன் அதை கற்பித்தும் வருகிறேன்.
ஆனால் எனக்கு தெரியும் இந்த நீண்ட பயணம் எங்கே ஆரம்பமானது என்று. எனது தாயார் TV வயரை புடுங்கி எறிந்துவிட்டு எம் இருவரையும் தனது பழைய காரில் ஏற்றி் கொண்டு நூல் நிலையம் அழைத்து சென்றதே இந்த நீண்ட பயணத்தின் ஆரம்பம் என்கிறார் Dr Ben Carsin.
தாய் என்பவள் கல்வி
அறிவற்றவர்களாக இருந்தும் தனது பிள்ளைகளை சரியான முறையில் வழிநடத்த தெரிந்தவளாக வாழ்ந்ததை
கண்டோம்.
No comments:
Post a Comment