தமிழ் திரையுலகம் எத்தனையோ விதமான கதாப் பாத்திரங்களை
ஏற்று நடித்த நடிகைகளை பார்த்துள்ளது. குணசித்திர வேடம், நகைச்சுவை வேடம், வில்லி வேடம் என்று மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நடுவில் சில தினங்களுக்கு முன் மறைந்த சி ஐ டி சகுந்தலா இலகுவில் ஓரங்கட்டப்படக் கூடியவர் அல்லர். கவர்ச்சி நடன நடிகையாக அவர் அடையாளம் காணப்பட்ட போதும் அவருக்குள் இருந்த ஆற்றல், வேகம், துடிப்பான நடன அசைவுகள் என்பன அவரை ஏனைய நடிகைகளுக்குள் இருந்து வேறுபடுத்திய போதும் மற்றய நடிகைகளுக்கு அவர் எந்த விதத்திலும் குறைந்தவராக கருதி விட முடியாது.
சகுந்தலா 1950 ம் ஆண்டுகளின் இறுதி பகுதிகளிலேயே திரையுலகிற்குள் இளம் நடன நடிகையாக நுழைந்து விட்டார். பல நடனப் பாடல்களில் கோஷ்டி நடன மாதர்களுக்குள் அவரும் ஆடிக் கொண்டிருந்தார். கதாநாயகியாக நடிப்பவர்களையே கமெரா வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் ஆங்காங்கே , ஒண்டிரண்டு குளோஸ் அப் காட்சிகளில் சகுந்தலாவின் அழகிய இளம் முகத்தை காணக் கூடியதாகவே இருந்தது. ஆனாலும் அவரின் திறமை எல்லாம் கடலில் கரைந்த பெருங்காயமாகவே கரைந்தது. என்றாலும் அவரின் முயற்சிக்கு பங்கம் வரவில்லை. தொடர்ந்து படங்களில் கோரஸ் நடனம் ஆடிக் கொண்டே இருந்தார்.
அப்படி ஆடிக் கொண்டிருந்தவருக்கு படிக்காத மேதை படத்தில் சிறு
வேடம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின் அவரை ஓரளவு அடையாளம் காட்டிய படம் போலீஸ்காரன் மகள். ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இப் படத்தில் கதாநாயகனால் அச்சுறுத்தப் படும் பெண்ணாக தோன்றி நடித்தார் சகுந்தலா. பீம்சிங், ஸ்ரீதர் படங்களில் நடித்த போதும் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்கள் ஏதும் அவருக்கு கிட்டவில்லை. தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தவருக்கு 1970 ஆண்டு பொன்னான ஆண்டாக அமைந்தது.
வேடம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின் அவரை ஓரளவு அடையாளம் காட்டிய படம் போலீஸ்காரன் மகள். ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இப் படத்தில் கதாநாயகனால் அச்சுறுத்தப் படும் பெண்ணாக தோன்றி நடித்தார் சகுந்தலா. பீம்சிங், ஸ்ரீதர் படங்களில் நடித்த போதும் சொல்லிக் கொள்ளும் படியான வேடங்கள் ஏதும் அவருக்கு கிட்டவில்லை. தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தவருக்கு 1970 ஆண்டு பொன்னான ஆண்டாக அமைந்தது.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் சி ஐ டி சங்கர் படத்துக்கு துணிந்து சகுந்தலாவை கதாநாயகியாக அமர்த்தினர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்த இந்த ஆக்ஷ்ன் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் சகுந்தலா. குறிப்பாக தை பூசத் திருநாளிலேயே ராஜா பெண் பார்க்க வருவாரடி, பிருந்தாவனத்தில் பூ எடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா ஆகிய பாடல்களில் சகுந்தலாவின் நடனம் தூள் கிளப்பியது. தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஜஸ்டிஸ் விஸ்வநாதன் படத்திலும் ஹீரோயினாக ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்தார் சகுந்தலா. இந்தப் படத்தில் அவருக்கு கிடைத்தது ஒரு கனமான வேடம். அதனை குறையின்றி செய்திருந்தார் அவர். இதே ஜஸ்டிஸ் விசுவநாதன் சில ஆண்டுகள் கழித்து ரஜினி நடிப்பில் பொல்லாதவன் என்று உருவெடுத்த போது சகுந்தலா நடித்த அதே வேடத்தை லஷ்மி நடித்திருந்தார்.
இரண்டு படங்களுக்கு பிறகு கதாநாயகியாக தொடர முடியாது போயிருந்த சகுந்தலாவுக்கு 1971ம் வருடம் அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைந்தது. பிரபல இயக்குனர் டி ஆர் ராமண்ணா கலரில் எடுத்த வீட்டுக்கு ஒரு பிள்ளை படத்தில் பெண் என்றால் நான் அன்றோ என்று இவர் ஆடிய கவர்ச்சி நடனம் ரசிகர்களை இவரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. அதே சமயம் இவரை கவர்ச்சி நடிகையாகவும் முத்திரை குத்தியது.
தமிழில் ஏற்கனவே ஜோதிலஷ்மி,விஜயலலிதா, விஜயஸ்ரீ, சைலஸ்ரீ, ஜெயக்குமாரி என்று பலர் கிளப் டான்ஸர்களாக, கவர்ச்சி நடிகைகளாக கோலோச்சிக் கொண்டிருந்தா நேரத்தில் அவர்களுக்கு மத்தியில் தானும் கடை விரித்தார் சகுந்தலா. இந்த சந்தர்ப்பத்தில் முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கிய தவப் புதல்வன் படத்தில் கவர்ச்சி நடிகையாகவும், வில்லியாகவும் நடிக்கும் சந்தர்ப்பம் சகுந்தலாவுக்கு கிடைத்தது.
தவப் புதல்வன் சிவாஜி. அவரை படாத பாடுபடுத்துபவராக வந்து
ரசிகர்களின் ஆத்திரத்தை கொட்டிக் கொண்டார் சகுந்தலா. அத்தோடு நான் ஒரு காதல் சந்நியாசி என்ற பாடலுக்கு படு அசத்தலாக ஆடி ரசிகர்களை கிறங்கடித்தார் அவர். இதுவரை ஆண்களை தொட்டதில்லை பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை, எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும் , இருபது வயது கிழவனுக்கே என்றும் என் மனம் இங்கே இடம் கொடுக்கும் , சொர்கத்தின் வழி சொல்ல தவ ஞானி , நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி என்று எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு அவர் ஆடியது சன்யாசியைக் கூட ரசிக்க வைத்தது.
ரசிகர்களின் ஆத்திரத்தை கொட்டிக் கொண்டார் சகுந்தலா. அத்தோடு நான் ஒரு காதல் சந்நியாசி என்ற பாடலுக்கு படு அசத்தலாக ஆடி ரசிகர்களை கிறங்கடித்தார் அவர். இதுவரை ஆண்களை தொட்டதில்லை பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை, எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும் , இருபது வயது கிழவனுக்கே என்றும் என் மனம் இங்கே இடம் கொடுக்கும் , சொர்கத்தின் வழி சொல்ல தவ ஞானி , நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி என்று எல் ஆர் ஈஸ்வரியின் குரலுக்கு அவர் ஆடியது சன்யாசியைக் கூட ரசிக்க வைத்தது.
தவப் புதல்வன் படத்தில் நடித்ததோடு சிவாஜியின் அரவணைப்பு சகுந்தலாவுக்கு கிடைக்கத் தொடங்கியது. அதோடு அதிர்ஷ்டம் கொட்டோ கொட்டென கொட்டத் தொடங்கியது. வசந்த மாளிகையில் சிவாஜியுடன் இவர் ஆடிய குடி மகனே பெரும் குடிமகனே பாடல் சகுந்தலாவை நட்சத்திர கவர்ச்சி நடிகையாகியது.
படங்களில் கவர்ச்சி நடனம் ஆடும் நடிகைகள் பொதுவாக பதினாறு வயதில் ஆடத் தொடங்கி இருபத்தாறு வயதில் ஓய்ந்து விடுவார்கள். ஆனால் இவர்களுள் சகுந்தலா வித்தியாசமானவர். இவர் கவர்ச்சி நடனம் ஆடத் தொடங்கிய போது இவருக்கு வயது முப்பத்தொன்று! முப்பதுக்கு மேலே தான் கொண்டாட்டம் என்பது போல் அதன் பிறகுதான் இவருக்கு ஏறுமுகம். கவர்ச்சிக்கு வயது ஓர் எல்லையில்லை என்பதை நிரூபித்தார் சகுந்தலா!
சிவாஜி படம் என்றால் அதில் சகுந்தலாவின் டான்ஸ் நிச்சயம் என்ற நிலை உறுதியானது. நீதி, பொன்னூஞ்சல்,வைர நெஞ்சம், எங்கள் தங்க ராஜா, ராஜ ராஜ சோழன், பாரத விலாஸ், என்று சிவாஜியினுனாக இவரின் திரைப் பயணம் ரசிகர்களுக்கு பேருவகை ஆனது. அதே சமயம் ஏனைய நடிகர்களுடனும் அவர் நடித்த படப் பட்டியல் நீளமானது.
பாக்தாத் பேரழகி படத்தில் நவீன வசந்தசேனையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார் சகுந்தலா. எம் ஜி ஆருடன் சகுந்தலா நடித்த இதய வீணை மற்றும் சூரியகாந்தி, திருமலை தென்குமரி, பணக்கார பெண், உங்கள் விருப்பம்,வாயாடி,சூதாட்டம், புன்னகை, கண்காட்சி போன்ற படங்கள் சகுந்தலாவின் நடிப்புக்கும் ஆதாரமாக அமைந்தது.
ஒரு கால கட்டத்தோடு படங்களில் நடிப்பதை நிறுத்திய சகுந்தலா பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். அதிலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தார். காலமாகும் போது அவருக்கு வயது எண்பத்து நான்கு என்ற போதும் படங்களில் அவரின் துள்ளும் நடனத்துக்கு, கவர்ச்சியான அசைவுக்கும் வயதுதான் ஏது!
No comments:
Post a Comment