புராணப் படங்களிலும், பக்திப் படங்களிலும் கடவுள் அவப்போவது
தோன்றி பக்தர்களுக்கு அருள் புரிவதை பார்த்துள்ளோம். ஆனால் சமூகப் படம் ஒன்றில் கடவுள் திடீர் திடீர் என்று தோன்றி திருவாய் மலர்ந்தருள்வதை முதல் தடவையாக 1974ம் வருடம் வெளி வந்த ஒரு படத்தில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டியது. அந்தப் படம்தான் கலியுகக் கண்ணன்.
திரையுலகில் பாடலாசிரியராக பயணித்துக் கொண்டிருந்த கவிஞர் வாலி இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தார்.ஏற்கனவே கிருஷ்ண விஜயம் என்ற பெயரில் அவர் எழுதி மேடையேறிய நாடகமே கலியுகக் கண்ணனாக படமானது. வாலி தனது இந்த புதிய முயற்சியில் வெற்றி கண்டார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக கடவுளும், பக்தனும் உரையாடும் காட்சிகளில் அவரின் வசனங்கள் பளிச்சிட்டன.
சாதாரண ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் சாம்பு ஐயர் கடும்
பொருளாதார சிக்கலுக்கு நடுவே தன் மனைவியுடனும், மகனுடனும் வாழ்க்கை நடத்துகிறார். இத்தனைக்கும் முவரும் தொழில் செய்கிறார்கள் , ஆனாலும் குடும்பம் கஷ்ட ஜீவிதமாகவே உள்ளது. ஒரு நாள் பால்காரிக்கு கொடுக்க வேண்டிய ஐம்பத்தொரு ரூபாயை கொடுக்க வழியில்லாத சாம்பு தன் மனைவி கடவுளுக்கு செலுத்த வைத்திருந்த உண்டியலில் இருந்து காணிக்கைப் பணத்தை எடுத்து விடுகிறார். அன்றிரவு கிருஷ்ண பகவான் சாம்பு முன் தோன்றி தனக்குரிய ஐம்பத்தொரு ரூபாயை கேட்கிறார். அது மட்டுமன்றி சாம்புக்கு மறு நாள் இரண்டாயிரம் ருபாய் கிடைக்கப் போவதையும் , அவரின் பணச் சிக்கல் முடிவுக்கு வரப் போவதையும் சொல்கிறார் . அப்படி தனது பணக் கஷ்டம் தீர்ந்தால் பதிலுக்கு ஐநூற்று ஐம்பத்தொரு ரூபாயை கிருஷ்ணருக்கு தருவதாக சாம்பு வாக்களிக்கிறார்.

மறுநாள் அவர் கலந்து கொண்ட அதிர்ஷ்ட போட்டி ஒன்றில் இரண்டாயிரம் ருபாய் சாம்புவுக்கு அதிர்ஷ்ட பரிசாக விழுகிறது.அத்தோடு அவரின் தரித்திரமும் தொலைகிறது. அடுத்தடுத்து வாழ்வில் முன்னேறி ஐந்து நட்சத்திர ஹோட்டல் முதலாளியாகிறார் சாம்பு. ஆனால் வாக்களித்த மாதிரி ஐநூற்று ஐம்பத்தொரு ரூபாயை கிருஷ்ணருக்கு திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்துகிறார். கிருஷ்ணரும் அவ்வப்போது சாம்பு முன் தோன்றி பணத்தை கேட்கிறார்.
இப்படி அமைந்த படத்தின் கதையில் சாம்புவாக தேங்காய் சீனிவாசன் நடித்தார். படத்தின் கதாநாயகனும் அவரே. ஏழ்மையில் புலம்பும் போதும், பணம் வந்த பின் காட்டும் பவிசு, ஆர்ப்பாட்டம், ஸ்டைல் என்று அசத்தி இருந்தார் அவர். அவருக்கு ஜோடி சௌகார் ஜானகி. பிராமண மொழி பேசி நடித்து இருவரும் தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்கள். ஒருவருக்கு ஒருவர் ஈடு கொடுத்து நடித்தனர் . இவர்களுடன் அவ்வப்போது தோன்றும் கிருஷ்ண பகவானாக நீலகண்டன் நடித்திருந்தார். என்னே ஒரு பாத்திரப் பொருத்தம். நிதானமான நடிப்பு. வசீகர தோற்றம்.
ஜெய்சங்கர், ஜெயசித்ரா இருவரும் காதலர்களாக வந்து ,
தம்பதிகளாகி, கருத்து முரண்பாடால் பிரிந்து பின்னர் மீண்டும் சேர்கிறார்கள். வி கே ராமசாமி நல்லவராகவும், கெட்டவராகவும் மாறி மாறி காட்சியளிக்கிறார். ஆனால் நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. மனோரமா இல்லாத படமே இல்லை, அதற்கு இப் படமும் சாட்சி. இவர்களுடன் அசோகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஐ எஸ் ஆர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

வாலியின் பாடல்களுக்கு வி குமார் இசையமைத்திருந்தார். காதல் பொன்னேடு, ஜெயிச்சுட்டே கண்ணா நீ ஜெயிச்சுட்டே பாடல்கள் கவரும் படி இருந்தன. எஸ் மாருதிராவ் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டார். உமக்கு மணிய தெரியுமா ருக்மணியைத்தான் தெரியும், உண்டியல் குலுக்கி நிதி திரட்டும் அளவுக்கு உமக்கு என்ன கஷ்டம் , போன்ற வசனங்களில் ஆஸ்திக, நாஸ்திக வாதங்கள் சுவாரஸ்யமாக இருந்தன. மகாபாரதத்தில் தேரோட்டிய கண்ணன் இப்படத்தில் கார் ஓட்டுவது நல்ல தமாஷ்!
இந்தப் படம் வெளிவருவதற்கு பத்தாண்டுகளுக்கு முன் நகைச்சுவை நடிகர் நாகேஷை ஹீரோவாக முதல் தடவை சர்வர் சுந்தரம் படத்தில் நடிக்க வைத்து இயக்கி வெற்றி கண்ட கிருஷ்ணன் பஞ்சு , இம் முறை மற்றுமொரு நகைச்சுவை நடிகரான தேங்காய் சீனிவாசனை இப் படத்தில் ஹீரோவாகி வெற்றி கண்டார்கள். கலியுகத்தில் ஆஸ்திக, நாஸ்திக வாதங்களுக்கு நடுவே தோன்றும் மயக்கத்தை இப் படத்தின் மூலம் ஓரளவு தீர்க்க முனைந்திருக்கிறார்கள் இரட்டையர்கள். கலியுக கண்ணனின் வெற்றி இப் படம் ஹிந்தியிலும், தெலுங்கிலும் பாடமாவதற்கும் வழி வகுத்தது. எல்லாம் கண்ணன் செயல்!
No comments:
Post a Comment