பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா காலமானார்

 

- திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

September 18, 2024 3:51 pm 

பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா மாரடைப்பால் மரணமானார். நேற்று (17) மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு போது அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு ‘கைதி கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.   நன்றி தினகரன் 

No comments: