நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
மண்ணைத் உண்பதில் சில மருத்துவ பலன்கள் இருப்பதாக ஜஸ்ட் போன்ற மேல்நாட்டு வைத்தியர்கள் இப்பொளுது கண்டறிந்துள்ளனர், ஆனால் இயற்கை வைத்தியத்தில் இதன் பலனை விரிவாக கூறிஉள்ளார்கள். அதை மகாத்மா காந்தியும் தன் வாழ்வில் சோதனை செய்து பார்த்து, தாம் கண்ட பலனை ‘ஆரோக்கிய திறவுகோல் ‘என்ற நூலில் எழுதியுள்ளார்.
வைத்தியத்திற்கு மண்ணை பயன்படுத்துவதை நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அந்த உண்மையை இன்று சில சம்பிரதாய நம்பிக்கைகளிலும் காண முடிகிறது.
நாட்டரசன் கோட்டை கம்பர் சமாதியை சுற்றிலும் கிடக்கும் செம்மண்ணை எடுத்துப் பிரசாதமாக கொடுக்கிறார்கள். அதை கொஞ்சம் தண்ணீர் போட்டு கரைத்துக் குடிப்பார்கள்.
தஞ்சாவூர் ஜில்லாவில் வைத்தீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படும் சின்னஞ்சிறு மண் உருண்டைகளை மருந்தாகச் சாப்பிடுக்றார்கள். இதனால் எந்த நோயும் தீர்ந்து விடும் என்ற நம்பிகை இன்றும் பக்தர்கள் இடம் இருந்து வருகிறது .
மண் மருந்து பற்றி காள மேகப் புலவர் தமாஷாக பாடுகிறார்
மண்டலத்தில் நாளும்
வயித்தியராய் தாம்
இருந்து
கண்டவினை தீர்க்கிறார்
கண்டீரோ? தொண்டார்
விருந்தைப்பார்த்(து)
உண்(டு) அருளும்
வேளூர் எம் நாதர்
மருந்தைப்பார்த்தால் சுத்த
மண்,!
வைத்தீஸ்வரன் கோவில் சிவபிரான் ஒரு வைத்தியராக இருந்து இந்த உலகத்தில் தினமும்
கண்டகண்ட நோய்களை எல்லாம் தீர்கிறார். பார்த்தீர்களா, ஆனால் அவர் மருந்தாக கொடுப்பது
எது தெரியுமா?
‘வெறும்
மண் ‘
இதுபோல நம்பிகை என ஒன்று இருந்தால் நோய்கள் தீர்ந்தே போவதை வாழ்கையில் பலர் கூற கேட்டுள்ளோம். இது அவரவர் நம்பிகையை பொறுத்த விஷயம்.
தமிழ் அறிஞர் பண்டிதமணி கணபதிபிள்ளை திருநெல் வேலியில் வாழ்ந்தவர். திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை அதிபராக கடமைஆற்றியவர். அவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய் தொண்டை தமிழ் கூறும் நல் உலகம் போற்றி வணங்குகிறது.
குளிர் காலங்களிலே அஸ்மா நோய் அவரை படாத பாடு படுத்தும். அஸ்மா நோய்க்கு இண்று போல் மருந்துகள் இல்லாத காலம் அது,. அவருக்கு குளிர் காலத்தில் நோய் வந்து கஷ்டபடும் நேரங்களில், அவருடன் வாழ்ந்த மாணவர்கள் அவரை கைதாங்கலாக மாட்டு வண்டியில் ஏற்றி பிரபல வைத்தியர் . P. S சுப்பிரமணியத்திடம் அழைத்துச் செல்வார்கள். DR. P S சுப்பிரமணியமும் பண்டிதமணி கணபதிபிள்ளைக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றுவார், அஸ்மா நோயின் உபாதை குறைந்து அவரும் அயர்ந்து தூங்கிவிடுவார்.
அதிகாலையில் நோயின் உபாதை எதுவுமே இராது. பண்டித்மணி
அவர்களும் மாணவர்களுடன் வீடு திரும்புவார்
இதோ Dr P S சுப்பிரமணியம் பண்டிதமணி கணபதி பிள்ளைக்கு கூறிய பதல். “யோவ் நீர் வரும்போதெல்லாம் நான் அஸ்மா மருந்தை உமக்கு ஊசிமூலம் ஏற்றி இருந்தேன் ஆனால் நீர் இப்போ உயிடுடன் இந்திருக்க மாட்டீர். உமக்கு வெறும் தண்ணீரையே ஊசி மூலம் செலுத்தினேன். நீரும் P S இன் மருந்து சுகமளிக்கிறது என நம்பினீர், அதனால் உமது உபாதை நீங்கி நன்றாக தூங்கினீர்”.
DR P S கொடுத்ததோ வெறும் நீர்
அத்தனயும் நம்பிகையே, உடல் உபாதையை குணப்படுத்தும் என்ற உண்மையை அறிந்தோம். நாம் நம்பாது வைத்தியம் செய்யாது, முளுமையாக வயித்தியரையும் அவர் மருந்தையும் நம்ப. பலன் கிட்டும். இதை உணர்ந்தவர் பலர்.
பண்டித மணி கணபதிபிள்ளை பற்றிய தகவல் ஆறு திரு முருகன் சிட்னியில் ஆற்றிய உரை மூலம் அறிந்துகொண்டது.
No comments:
Post a Comment