நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்று அறிஞர் அண்ணாவினால்
பாராட்ட்டப் பெற்றவர் பி .பானுமதி. தமிழ் திரையில் கொடி கட்டி பறந்தவர் சரோஜாதேவி. கவர்ச்சியை காட்டி மயக்கியவர் ராஜஸ்ரீ. அழகு, கவர்ச்சி இரண்டும் ஒருங்கே கொண்டவர் வெண்ணிற ஆடை நிர்மலா. இவர்கள் நால்வரும் 1974ம் ஆண்டு திரைப்பட வாய்ப்புகளை இழந்து ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்கள். அப்படிப் பட்ட இவர்கள் நால்வரையும் கதாநாயகிகளாகப் போட்டு படம் எடுக்க ஒரு தயாரிப்பாளர் துணிந்து முன் வந்தார். அதிலும் கலரில் அப் படத்தை உருவாக்க முன் வந்தார். அவர் தான் ஜி . சுப்பிரமணிய ரெட்டியார்.
ஏற்கனவே புகுந்த வீடு, வீட்டு மாப்பிள்ளை ஆகிய இரண்டு
படங்களை தயாரித்து வெற்றி கண்ட இந்த ரெட்டியார் இந்த விஷப் பரீட்சைக்கு ரெடியாக இருந்தார். அப்படி அவர் தயாரித்த படம் பத்து மாத பந்தம். படத்தின் பெயரே இது ஒரு குடும்பப் படம் என்பதை நீருபிப்பதை போல் இருக்குதல்லவா. அது உண்மைதான். நான்கு பெண்களின் வாழ்வில் இடம் பெறும் உணர்ச்சிகரமான சம்பவங்களை கொண்டு படத்தின் கதை அமைக்கப் பட்டது.

தன்னுடைய மாமன் ராஜவேலுவின் தயவில் எம் ஏ படிப்பு படித்து வருகிறாள் வசந்தி. அவனின் அன்பும், அவனின் உதவியும் தன்னலமற்றது என்று எண்ணுகிறாள். ஆனால் ராஜவேலுவோ அவளை இரண்டாம் தாரமாக மணக்க திட்டமிடுகிறான். ஏற்கனவே பிரபல பாடகி கல்யாணியை மணந்து அவளை கொடுமை படுத்தி அதனால் விவாகரத்து பெற்றவன் அவன். அவனின் எண்ணம் அறியாது வக்கீல் சந்திரனை காதலிக்கிறாள் வசந்தி. அவர்களின் உறவு எல்லை மீறி போய் அவள் கர்ப்பம் தரிக்கிறாள். ஆனால் விபத்து ஒன்றில் சிக்கும் சந்திரன் வசந்தியிடம் இருந்து விதி வசத்தால் விலகுகிறான். இதற்கிடையில் வசந்தி நிலையறிந்து அவளை வீட்டை விட்டே துரத்துகிறான் ராஜவேலு. நிர்க்கதியான நிலையில் பாடகி கல்யாணி அவளுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். வசந்திக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை இருந்தும் கணவன் இன்றி, கழுத்தில் தாலி இன்றி நிற்கும் வசந்தி. விவாகரத்து பெற்றும் கணவன் கட்டிய தாலியை கழுத்தில் சுமந்து நிற்கும் கல்யாணி வசந்தியின் குழந்தையை தன் குழந்தை என சொல்லி வளர்க்க முன் வருகிறாள்.
இப்படி அமைந்த படத்தின் கதையை சுப்ரமணிய ரெட்டியாரே
எழுதினார். வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். காட்சிக்கு காட்சி அவரின் வசனங்கள் அசர வைத்தன. கச்சேரியில் சபாக்காரங்க உனக்கு செக் கொடுப்பாங்க வீட்டுக்கு வந்ததும் நான் உனக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுப்பேன், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு சொல்வாங்க ஆனால் மனித உணர்ச்சியற்ற பாறாங்கல்லை கணவனாகவும், கருகி காய்ந்து போன ஒரு புல்லை புருஷனாகவும் ஏற்றுக் கொள்ள நான் தயாரில்லை, ஒரு கெட்ட கணவரை கெட்ட கனவா நெனைச்சு மறந்துட்டேன் போன்ற வசனங்கள் படத்தின் ஓட்டத்துக்கும் உதவின. அதே சமயம் படத்தில் நடித்த நடிகர்கர்களும் குறைவைக்கவில்லை . தங்கள் அனுபவ நடிப்பால் மெருகூட்டினார்கள். இதனால் படம் விறுவிறுப்பானது.

கல்யாணியாக வரும் பானுமதியின் நடிப்பில் அவர் காட்டும் அலட்சியம் ஆகட்டும் , பட படவென்று பேசுவது ஆகட்டும் , முகபாவத்தால் கவருவது ஆகட்டும் எல்லாமே எக்ஸலண்ட்! பாத்திரத்துடன் மிக பொருந்துகிறார். சரோஜாதேவி பாந்தமாக நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் நின்று அட்டகாசம் செய்கிறார் அசோகன். ஏவி எம் ராஜன், முத்துராமன் இருவரும் பாத்திரம் அறிந்து நடிக்கிறார்கள். ரவிச்சந்திரனும் படத்தில் இருக்கிறார். ஆனாலும் நடிப்பும், உருவமும் எடுபடவில்லை. காமெடி என்ற பெயரில் தேங்காய் சீனிவாசன், மனோரமா பண்ணுவது கூத்து.
அனுபவமிக்க இயக்குனர்களான கிருஷ்ணன் இருவரும் படத்தை இயக்கினார்கள். பட வாய்ப்பு குறைந்த நிலையில் இருந்த நான்கு நடிகைகளிடம் இருந்தும் அவர்களின் திறமையை வெளிக் கொணர்ந்து படத்தை வெற்றி படமாக்கினார்கள் அவர்கள்.
No comments:
Post a Comment