.
சில தினங்களுக்கு முன் அறிந்த செய்தி திடுக்கிட வைத்தது. 2030 இல் உலகம் பெ ரிய அளவில் உணவு பஞ்சத்தை எதிர் கொள்ளப் போகிறது என்பதே செய்தி. இதற்கு காரணம் மக்களின் மாறிவரும் உணவு உண்ணும் பழக்கம் என கூறினார். முக்கியமாக உலகிலே யே அதிக மக்கள் தொகையை க் கொண்ட நாடுகளான இந்தியா, சீனா வாழ் மக்கள் தமது பாரம்பரிய உணவு வகைகளை ,பழக்க வழக்கங்களை விடுத்து புதிய வகை உணவுகளை உண்ண பழகிக் கொள்கிறார்கள். குறிப்பாக Mc Donalds போன்ற Fast food நிலை யங்கள் எதிர்பாராத அளவு பரவுவதே இதற்கு காரணம் என்கிறார்கள். இந்த Fast fòod பிரச்சனை உலக உணவு பற்றாக்குறைக்கு காரணமாகிறது என்பது ஒரு புதிய திடுக்கிடும் செய்தி.
அதே சமயம் அவை மனித சுக வாழ்வுக்கு இழைக்கும் தீங்குகள் என்பவை நாம்அறிந்ததே . இதற்கு இலங்கை யரான நாம் விதிவிலக்கு அல்ல,. மூன்று நான்கு தலை முறை களுக்கு முன் வாழ்ந்த நம்மவர் குரக்கன், வரகு, சாமை போன்ற சிறுதானியங்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களாக வாழ்ந்தனர். சுகதேகிகளாவும் வாழ்ந்தனர். அப்படியான உணவு இன்று உள்ளவருக்கு இல்லை என பரவலாக பேசப்படுகிறது. ஏன் அதே உணவை பிற்பட்டவர்கள் உண்ணவில்லை . அரிசி விளைச்சல் பெருகி யாவரும் அரிசி உண்டோமா?
இல்லவே இல்லை அரிசி இறக்குமதியான. அரிசி மட்டுமல்ல, கோதுமைமாவுமல்லவா வந்து வந்திறங்கியது. அவ்வாறு வந்த கோதுமை மாவெள்ளை யாகவே இருக்கும். கோதுமை இயற்கை யாக பழுப்பு நிறமாக இருக்கும் அந்த வெளிப்புறமே ஊட்டச்சத்து உள்ள பகுதி, அதை நீக்கி அதை மந்தைகட்கு தீவனமாக கொடுத்து விடுவார்கள், எஞ்சிய வெள்ளை பகுதியைஅரைத்து குறைந்த விலையில் இலங்கைக்கு அனுப்பி விடுவார்கள். அவ்வாறான கோதுமை மா வெள்ளையாக இருக்கும். போஷாக்கு அற்ற மாவாக எமமை வந்தடையும். இதற்கு பிறிதொரு பெயர் அமெரிக்கன் மா. இதை மலிவான விலையில் சங்கக் கடைகளில் வாங்கலாம். அமெ ரிக்காவில் அதிகப்படியாக விளையும் கோதுமையின் விலை , உலக சந்தை யில்சரியாமல் இருப்பதற்காக கோதுமை யை க் கொண்டு போய் கடலில் கொட்டும் காலம் இருந்தது. பசி பட்டினியால் வாழும் நாடுகளுக்கு கொடுக்க மாட்டார்கள். இவை எம் போன்ற நாடுகளில் விற்கப்பட்டது. இறக்குமதியான அரிசியும் தவிடு நீக்கப்பட்டது வெள்ளை அரிசியே .
எங்கும் காணாத ஒரு மாறுதலை இலங்கையில் பாயும் மகாவலிகங்கை யில் காணலாம். உலகில் எந்த ஆற்றில் பாயும் நீரும் தெளிந்த நீராகவே இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாத போது அவை மாசுபட்ட நீராகவே கொள்ள ப்படும். மகாவலி கங்கை நீரோ மண்ணை அணிந்து கொண்டுமண்ணிறமாகவே பாய்ந்த ஓடும். இவ்வாறான மண்அரிப்புக்கு காரணம் மலைகளில் உள்ள காடுகள் வெட்டப்பட்டு தேயிலை தோட்டங்கள் ஆக்கப்பட்டமையால் காட்டு மரங்கள் வெ ட்டப்பட்டன. மண்ணை கவ்வி பிடித்து மண் அரிப்பை இயற்கை யாகவே தடுப்பவை மரங்கள். மரங்கள் இல்லாமல்போவதே மலைகளில் மண் அரிப்புக்கு காரணம் ஆகிறது. இதனால் நிலத்தின் வளமும் நீரோடு அழிந்து போகிறது. தேநீரை மக்களிடையே பழக்கப்படுத்த தேநீர் பிரசார சபை நிறுவப்பட்டது. பழை ய சோற்றில் நீரை ஊற்றி வைத்து, மறுநாள் காலை அதிலே யே வெங்காயம், பச்சை மிளகாய் மோர் ஊற்றி அதை பருகி வந்தனர் எம்மக்கள். இன்றைய உணவு ஆய்வாளர் இது மிகுந்த ஊட்டமிகு உணவு எனக் கூறுகிறார்கள். மே ற்கு நாடுகளில் இவ்வாறு உண்ணும்படி ஊக்குவிக்கிறார்கள். அந்த நல்ல பழக்கத்தை மாற்றி எம் மக்களை தேநீர் அருந்த பழகிவிட்டார்கள். இவ்வாறு பழகியது Tea Propaganda Boardதான். அதிகாலை வீடு வீடாக சென்று கெட்டியான தின்பால் விட்டு சீனி சொட்ட சுடச்சுட தே நீர் வழங்கப்பட்டது. இந்த பழக்கம் மக்களை கவர்ந்தது. காலை யில் தே நீர் அருந்தாது இருக்க முடியவில்லை , தேயிலை வியாபாரம் பெருகியது.
சீனி வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கியது, இவற்றால் வெளிநாட்டர் பணம்பண்ணி சந்தோசமாக வாழ்ந்தனர். நம்மவரோ ஊட்டம் நிறை ந்த பழை ய நீரைமறந்தே போனார்கள். வெ ள்ளை அரிசி, அமெரிக்கன்மா, சீனி உடன் தேநீர் என யாவற்றையும் உண்டு ஒரு நோஞ்சான் சமூகமாக உருவாகி உள்ளோம். நீரிழிவு நோய் இருதய கோளாறு என பல நோயாளிகள் உருவானார்கள்.
இந்த நோயை குணப்படுத்த மேலத்தேய மருந்துகளும் அங்கிருந்து வரவழைக்கப்படுகிறது. நாட்டை சூறை யாட நாடுபிடித்து ஆளவேண்டிய தேவை இல்லை . அவர்கள் சிந்தனையை திருப்பி உணவு பழக்கத்தை மாற்றி விட்டால் போதுமானதே . இதற்கு நம் நாடே எடுத்துக்காட்டு, நாமோ West is best என எண்ணி சுதந்திர நாடாக வாழ்கிறோம்.
No comments:
Post a Comment